ஓடும் ரயிலில் "தப்லீக் ஜமாத்"தினரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆடைகளை களைந்து, கையில் "விலங்கிட்டு" அடித்து உதைத்து இழுத்துச்சென்றது.
இது பற்றிய செய்தியாவது:
இம்மாதம் 19ந்தேதி, கர்நாடக மாநிலம் கிராஸ்கரிலிருந்து டெல்லியை நோக்கி (வண்டி எண்:12181) ரயிலில் "தப்லீக் ஜமாத்"தின் 14 நபர்கள் கொண்ட குழுவினர், பயணித்துக்கொண்டிருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலமான "ஆக்ரா"ரயில் நிலையத்தில் "சாதாரண உடை"யில் ரயிலில் ஏறிய போலீஸ், அவர்களை கைது செய்வதாக சொன்னது.
ஏன்? என சக பயணிகள் கேட்டபோது, இவர்கள் "பயங்கரவாதிகள்" என தெரிவித்ததுடன், இவர்கள் தங்கள் பைகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்வதாகவும் கூறினர்.
மேலும், ஆக்ராவுக்கு அடுத்த ரயில் நிலையமான "மதுரா"வில், வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.