RC

RC

Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 1 ஜூலை, 2015

பர்தா குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த எச்.ராஜா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த எச்.ராஜா பேச்சுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்   கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருத்து வருமாறு:–
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.

சனி, 27 ஜூன், 2015

யார் மீட்டெடுப்பார்கள்? காயிதே மில்லத் கட்டிய அரசியல் சாம்ராஜ்யத்தை – நெல்லை ஆதில்

தாமிரபரணியின் தாயகமான நெல்லை மாவட்ட்த்தின் பேட்டை நகரமே வாழ்க்கையின் இருள் சூழ காட்சியளித்த நேரம்(இன்றும் அப்படித்தான் காட்சி அளிக்கிறது) 1896ம் ஆண்டு ஜூன் திங்கள் 5ஆம் நாள் கடலைப்பிளந்து கொண்டு சூரியன் இந்த உலகுக்கு வெளிச்சம் அளிப்பதைப்போல இருளைப்பிளந்து கொண்டு இந்த சமூகத்தின் விடியல் பிறந்த நாள். ஆம் கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்கள் பிறந்தார்கள்.காயிதே மில்லத் என்றால் மக்களின் வழிகாட்டி என்று பொருள் அதற்கேற்ப மக்களின் வழிகாட்டியாக திகழ்ந்தார் இஸ்மாயில் சாகிப் அவர்கள்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

ஓ…மானிடனே,என்னை தெரிகிறதா?

இறை மாதங்கள் 11க்கு பின்னர் உன்னை காண வந்திருக்கும் ரமலான் நான் தான்.
கடந்த மாதங்களில் நீ யாரையெல்லாம் நேசித்தாயோ?அது எனக்கு தெரியாது?
ஆனால் இம்மாதம் முழுவதும் என்னை நீ நேசித்தால்..நான் உன் மண்ணறையிலிருந்து மறுமை வரை உன்னை விட்டும் பிரியாமல் உன் நலன் பேண உன்னையும்,என்னையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்றாடுவேன்.

பொறாமைப்படுபவர்கள் இறை அருளுக்கு எதிரானவர்கள் ...

பொறாமை என்பது பெரும்பாவங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு விதமான "மனநோய்". சக மனிதருக்கு கிடைத்திடும் வசதி வாய்ப்புகள், திறமை, பணம், அந்தஸ்து, பாராட்டுகள் ஆகியவற்றைக் காணும் போது, அவர் மீது பொறாமைப்பட்டு அவைகளை இல்லாமல் ஆக்குவதற்கு அந்த மனிதனைப் பற்றி கேவலமாகவும், இழிவாகவும் பேசி அவற்றை பறிப்பதற்குண்டான செயல்களில் ஈடுபடக்கூடிய மனோ நிலை மனிதனிடத்தில் இன்று மிக அதிகமாக காணப்படுகிறது. தன்னை விட அடுத்தவன் சிறப்புகளை, உயர்வுகளை அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே?

சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இரண்டு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சங்கர் பாண்டி (15), சஞ்சய் கண்ணன் (15) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆண்டு 9ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலாகி விட்டனர். அதன்பிறகு ஃபெயிலான இரண்டு பாடங்களையும் தற்பொழுது எழுதி இருந்தனர். அதற்கிடையில் இரண்டு சிறுவர்களும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து உள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.

உடல் ஆரோக்கியம் நம்மிடம் எப்படி இருக்கின்றது?

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் தங்களுடைய உடலை பேணுவதில் முறையற்று காணப்படுகின்றனர். சாப்பாடு விஷயமாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சி விஷயமாக இருந்தாலும் சரி, ஓய்வெடுப்பதில் இருந்தாலும் சரி, உடலுக்கு தேவையானதை செலுத்துவதில் நாம் அலட்சியமாக இருக்கின்றோம்.
அதனுடைய விளைவு சிறு வயதிலேயே உடல்

வெள்ளி, 19 ஜூன், 2015

நமதூர் பள்ளி வாசல்களில் நடைபெற்ற இரவு தொழுகைகள் ....

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ! தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்ககூடாது - ஏன் தொரியுமா ?


தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? 

நபிகளாரின் பொன்மொழியை உண்மைப்படுத்திய விஞ்ஞானி!


நபிகளாரின் பொன்மொழியை உண்மைப்படுத்திய விஞ்ஞானி!

ஆய்வகங்களில் பெண்களால் தொல்லை:
- உண்மையை உடைத்துச் சொன்ன விஞ்ஞானி!
(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!)

புதன், 17 ஜூன், 2015

அஹ்லன் ரமலான்….! அஹ்லன்…! – முஹம்மது ஃபைஸ்

சம்பவம் ஒன்று:

அவர் ஒரு முதியவர். வாழ்வின் எல்லையில் நிற்பவர். மகப்பேறு இல்லாதவர். ஆனால் அதற்காக பரிதவிப்பவர். சோகம் என்னவெனில் அவரின் மனைவியும் மலட்டுத் தன்மை கொண்டவர். இந்த நிலையில் யார்தான் இவர்களுக்கு பிள்ளை வரம் கொடுக்க முடியும்?  

ரமளான் நல்வாழ்த்துகள்!

லகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 18, 2015 (வியாழன்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பின் மாண்பு
அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்பு மிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தக் கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும் கூட களைந்து உண்மையான/முழுமையான‌ முஸ்லிம்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

அரபு நாடுகளில் வியாழக்கிழமை ரமலான் முதல் நாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அபுதாபி: அரபு அமீரகத்தின் “பிறை பார்க்கும் கமிட்டி” ஹிஜ்ரி 1436-ம் வருடத்தின் புனித ரமலான் நோன்பு வரும் ஜூன் 18-ம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

திங்கள், 15 ஜூன், 2015

துபை : ஓட்டுநர் உரிமத் தேர்வில் தமிழ் உட்பட 4 இந்திய மொழிகள் சேர்ப்பு!

துபை: துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (ஆர்டிஏ) நடத்தி வருகிறது.

கலீஃபா உமரின் ஆட்சியை முன்மாதிரியாய் கொள்வேன்! – அரவிந்த் கெஜ்ரிவால்


புது தில்லிகலீஃபா உமரின் ஆட்சி முறை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், மக்களின் மேம்பாட்டுக்காக அவரது ஆட்சி முறையை முன்மாதிரியாய் கொள்வேன் எனவும் புது தில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்தார்.

பிரார்த்தனையின் பலம்! – MSAH

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார்

“பெரும் பயணம்!” – சாளை பஷீர் ஆரிஃப்

பயணம் வழியாக வாழ்க்கையை அறிதல்; வாழ்க்கையையே ஒரு பயணமாக உணர்தல் என ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத கண்ணியின் தொடர் சுழற்சியை நிதானித்து கவனித்தால் ஒன்று புரியும். பயணம் என்கின்ற பெரிய சுழல் வளையம் சுருங்கி சுருங்கி இறுதியில் மறுமைப் பெருவெளியில் மூலப் புள்ளியில் போய் ஒடுங்கும் வரை முடிவடைவதே இல்லை என்ற பேருண்மை விளங்க வரும்.

உண்மையான உள்ளங்கள் எங்கே?

தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து, கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.

மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.

வெள்ளி, 12 ஜூன், 2015

மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் பயணம் தொடக்கம் ...


மனித நேய மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகலும் திமுக கூட்டணியில் இல்லாதிருந்திருதால் டெப்பாசிட் கூட வாங்கியிருக்காது தி.மு.க..!! - ஜவாஹிருல்லாஹ்

பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன ? அதை எவ்வாறு சரி செய்யலாம் ?


அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள். முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒருவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிராமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவருடைய முக அழகு யாராலும் பாராட்டப்படுவதில்லை. எனவே ஒரு முழுமையான அழகு என்பது

திராவிட கொள்கைகளில் இருந்து திமுக விலகினால் கூட்டணியைவிட்டு வெளியேறுவோம்: முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் உறுதி

திராவிட கொள்கைகளிலிருந்து திமுக விலகினால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இன்றைய அரசியல் சூழல் எப்படி உள்ளது, மோடியின் ஓராண்டு ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியா மதச்சார்பற்ற நாடென்பது 5 ஆயிரம் வருடத்து இயற்கை நீதி.

நமதூரில் நடைபெற்ற ரிஸ்வான் பட்டமளிப்பு விழா ...


இன்று 11.06.2015 அன்று காலை கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் கீழ் வளாகத்தில்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்து பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!


பெரம்பலூர், ஜூன்.11-பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும்,

வியாழன், 11 ஜூன், 2015

மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்புவோம்! – வி. களத்தூர் ஃபாரூக்

மரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களும், விவாதங்களும் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நாடுகள் ரத்து செய்யாவிட்டாலும் மரண தண்டனையை நிறைவேற்ற யோசிக்கும் அளவில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த இரண்டு வழிகளிலும் இல்லை. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்தான் அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது.

சர்ச்சையாக்கப்படும் இந்திய ரூபாய்!

பண்டைய கால இந்தியாவில் ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் அதற்கு பதிலாக நாம் ஒரு பொருளை கொடுத்து அந்த பொருளை வாங்க வேண்டும். இந்த முறையின் பெயர் பண்டமாற்று முறை. இதை பல்வேறு மன்னர்களும் அரசர்களும் அமுல்படுத்தி வந்தனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இந்த முறை முற்றிலும் அழிக்கப்பட்டு பணத்தை கொடுத்து வாங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த முறையே அமுல்படுத்தபட்டு வருகிறது.

இந்தியா பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்:பாகிஸ்தான் !

மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் மீது  நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். மியான்மர் எல்லையில் பதுங்கி இருப்பதை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர் எல்லைக்குள் புகுந்து  முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 100  கொல்லப்பட்டனர்.
மியான்மரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன்

புதன், 10 ஜூன், 2015

அப்துல் வஃபா முஹம்மத் புஸ்ஜானி – வானியல், கணிதவியலின் முன்னோடி!

இன்று கணித மேதை அப்துல் வஃபா முஹம்மத் புஸ்ஜானி அவர்களின் பிறந்த தினம். அவரை கவுரப்படுத்தும் விதமாக இன்று GOOGLE தளம் அவருடைய படத்தத்துடன் லோகோ வடிவமைத்துள்ளது.

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்?

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்? 

சாலை விபத்தில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், விஷ ஜந்துக்கள் தீண்டி இறந்தவர்கள், கடல், குளம், ஆறு, கிணறு போன்ற

இரண்டே நாட்களில் பிரபல எழுத்தாளர் ஆவது எப்படி? – ஆரூர் யூசுஃப்தீன்

நீங்கள் ஒரு இன்ஜினியராக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம். ஏன், பள்ளி மாணவராக கூட இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் தற்பொழுது லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகலாம்.
உடனே ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க. நான் சொல்லும் எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளையும், அறிவுரைகளையும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். இதனை செய்தால் போதும். நாளையில் இருந்து நீங்களும் “பிரபல எழுத்தாளர்” என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்கள்.
எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது உடனடியாக முகநூலில் ஒரு கணக்கு தொடங்க வேண்டும்.

செவ்வாய், 9 ஜூன், 2015

உங்கள் பிள்ளைகள் பத்திரம் ...


அல்லாஹ் நமக்கு அள்ளிக்கொடுத்த செல்வங்களில் மிக முக்கியமான ஒன்று பிள்ளைச் செல்வம். எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திறமைமிக்க பிள்ளைகளாக வளர்ந்து சமூகத்தில் நல்ல நிலைமையை அடைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனாலும் சில

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்தது மத்திய அரசு!புதுடெல்லி: சர்வதேச யோகா தினமான ஜூன் 21ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்த யோகா செய்வது மற்றும் சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்: பாஜக எம்பி யோகி!


புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் வாரணாசியில் உள்ள கோவில் விழா ஒன்றில் கலந்து

நமதூரில் அசுத்த குடி நீர் (ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹாம்துல்லாஹ்,,,அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே நேற்றய மாதிரி இன்றும் குடிநீரில் அதை விட மோசமாக toilet ம் சேர்ந்து வந்தது. இதை பற்றி நேரில்

உண்மையான உள்ளங்கள் எங்கே?

தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து, கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.
மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.

தாடி வைத்தற்க்காக தீவிரவாதி என்று கூறி வேலையை விட்டு நீக்கிய: அதுனிக் குழுமம் !

கொல்கத்தா: தாடி வைத்தற்க்காக தீவிரவாதி என்று கூறி  வேலையை விட்டு நீக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர். இஸ்லாமியர் என்பதால் வேலையை இழந்து தவிக்கிறார்.. கொல்கத்தாவில் அதுனிக் குரூப் ஆஃப் கம்பெனி  என்ற நிறுவனத்தில் சுரங்க பிரிவு மேலாளராக ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் முகமது இஸ்மாயில். கடந்த ஆண்டு இவர் ஹஜ் புனித யாத்திரை முடித்துவிட்டு மே மாதம் தாடுயுடன் திரும்பியுள்ளார், இதற்க்குப் பிறகுத் தான் அலுவலகத்து அயோக்கியர்கள் தங்களது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஞாயிறு, 7 ஜூன், 2015

தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்!

“ வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்வியைக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.” 

இந்த வார்த்தைகள் ஒரு கல்லூரி விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது. ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும், ஏதோ ஒரு பகுதியில் மாணவர்கள்

ரமலான்- பேரித்தைகளும், பேராயுதங்களும் ..!!!

உலக மாந்தர்க்கெலாம் உன்னத மாதமாய் உடலும் உள்ளமும் தூய்மை பெற நம்மை நோக்கி ரமலான் வருவதற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ நடந்தேறிவிட்டன. முழு நிலவோ ரமலானை எதிர்பார்த்து தேய்ந்து கொண்டிருக்கிறது .
ஆயிரம் மாதங்களின் அந்தஸ்த்தை அள்ளித் தரும் இம்மாதத்திற்காய் உளப்பூர்வமாய் ஏங்கி நிற்பதும் , எப்படியேனும் இந்த ரமலானில் பாவங்களுக்கு பரிகாரம் தேடியே தீர வேண்டும் என்ற கங்கணம் கட்டிய மனதோடும் , ஏதோ ரமலானாமே என்ற அறியாமை இருளில் நோன்புக் கஞ்சிகளை  சுவைக்கத் துவங்குவதுமான மனித மனங்களும் ஏறத்தாழ எதிர்பார்த்து இருக்கின்றன . ரமலானை அணுகுவதின் வடிவங்கள்தான் எத்தனை வகை..????

நோன்பும் நமது கடமையும் ...

புதன், 3 ஜூன், 2015

நமதூர் நடைபெற்ற புனித பராத் இரவு ...

 

நமதூரில் நடைபெற்ற  புனித பராஅத் இரவு கிழக்கு மற்றும் மேற்கு சுன்னத்துவல் ஜமாத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

பெரம்பலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம் ...

பெரம்பலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்


மியான்மரில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இப்பிரச்னையில் மத்திய அரசு உட னடியாக தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம் ப லூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் தமுமு கவினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடு பட்ட னர்.

பர்மா முஸ்லிம்களை காப்பாற்றக்கோரி போஸ்டர் - லெப்பைக்குடிக்காடு கிளைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 02-06-2015 அன்று பர்மாவில் பௌத்த இனவெறியைத்

செவ்வாய், 2 ஜூன், 2015

மேலப்பாளையத்தில் நடந்தது என்ன..!போரட்டம் வெடிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவிப்பு…!


நேற்று(01.06.2015) மாலை நெல்லை  மாவட்டம் மேலப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிஎன்டிஜேயின் மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மீது வேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று மோதியது.