Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 17 பிப்ரவரி, 2016

அமீரகத்தில் சத்தமில்லாமல் நடைபெறும் சமுக நல பணிகள் ...

அமீரகத்தில் சுவாரஸ்யம்..
நிச்சயிக்கப்பட்ட திருமன தினத்தன்று தாயகம் செல்ல முடியாமல் தவித்த வாலிபரை பெரும் முயற்சி எடுத்து தாயகத்திற்கு அனுப்பி வைத்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

13/02/2016 அன்று சுமார் மதியம் 2 மணியளவில் மதுரை மாவட்ட SDPI தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் SDPI மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு மதுரையை சேர்ந்த அசோகன் என்பவர் ஷார்ஜாவில் வேலை செய்வதாகவும் நாளை அவருக்கு திருமனம் எனவும் கம்பெனியில் ஏதோ பிரச்சனை காரனமாக திருமனத்திற்கு வர இயலாது என்று அசோகன் கூறியதாகவும் திருமன ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்று கொண்டிருக்க குடும்பத்தார்கள் மிகவும் பதட்டத்துடன் இருப்பதாகவும் ஏதும் முயற்சி செய்து அசோகனை தாயகம் அனுப்பி வைக்க முடியுமா என கேட்டிருக்கிறார். உடனே நிஜாம் முஹைதீன் அவர்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்களுக்கு தெரிவிக்க முபாரக் அவர்களளின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் ஷார்ஜா மண்டல தலைவர் ஹஸன் பாஷா மற்றும் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களால் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
அப்துல்ரஹ்மான் அவர்கள் முஜிபுர்ரஹ்மான் மூலம் அசோகன் அவர்களை தொடர்பு கொண்டு என்ன பிரச்சனை என்று முழு விபரத்தையும் கேட்டபோது அசோகன் கூறியதாவது ஷார்ஜா Sahara mall அருகில் Bringham Ocean Elevator என்கிற கம்பேனியில் Lift supervisor ஆக வேலைபார்ப்பதாகவும் கடந்த 2015 டிசம்பர் 17 அன்று 2016 பிப்ரவரி 14 ல் திருமனம் நிச்சயிக்கப்பட்டதை கம்பெனியில் தெரிவித்து பிப்ரவரி ஊருக்கு செல்ல விடுப்பு(Vacation) கேட்டதாகவும் முதலில் மறுத்து பின்பு ஒப்புகொள்ளப்பட்டதாகவும் கூறுகிறார் அசோகன். பிறகு ஜனவரி மாத இறுதியில் விடுப்பு கொடுக்க முடியாது என்றும் வேண்டுமானல் ராஜினாமா கொடு 24 மணி நேரத்தில் உன்னை இந்தியா அனுப்பிகிறோம் என்று கம்பெனியில் சொன்னதால் பிப்ரவரி 8 ல் வேலையை ராஜினாமா செய்ததாக கூறினார். ஆனால் கேன்சல் செய்வதற்கான வேலைகள் ஏதும் நடக்கவில்லை எனவும் கம்பெனி PRO ஓசாமா என்பவர் இதை பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று கூறுவதாக அசோகன் பதட்டத்தோடும் கூறினார்.
உடனே PRO ஒசாமா வை அப்துர்ரஹ்மான் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அப்போதும் எனக்கு ஏதும் தெரியாது Accountant முஹம்மது ஹாமித் என்பவரை தொடர்பு கொள்ளுமாரு என்று அவரின் மொபைல் எண்ணை தந்து இனைப்பை துண்டிக்கிறார். ஹாமிதை தொடர்பு கொண்டு விசாதித்தபோது அலுவலகம் துபாயில் இருப்பதாகவும் கம்பேனி Sponsor அபுதாபியில் இருப்பதாகபும் அவரிடம் Signature பெறவே தாமதமாகிவிட்டது என்றும் நாளை 14/02/2016 காலை 9 மணிக்கு முடித்து தருவதாக கூறுகிறார்.
14/02/2016 காலை 8 மணிக்கு Accountant ஹாமிதை தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை. தொடர்ந்து 10 மணி வரை முயற்சித்தும் போனை எடுக்காமலும் துண்டித்தும் வந்தார் ஹாமித். இந்நிலையில் துபை மண்டல தலைவர் யூசுப் மற்றும் செயலாளர் ரஹிஸ் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு ஷார்ஜா மண்டலத்திலிருந்து ராஜாமுஹம்மது என்கிற செயல்வீரரும் துபையில் அமைந்துள்ள கம்பேனியின் அலுவலகத்திற்கு நேரடியாக பகல் 12 மணியளவில் விரைந்தனர் அசோகனையும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டது. அலுவலகத்தில் Sales பிரிவு மேனேஜர் சுப்பிரமனி என்பவரிடம் பேசி Admin மேனஜர்( பெயர் நினைவில்லை) சந்தித்தனர். 20 நிமிடம் நடந்த உரையாடலுக்கு பிறகு 3, 4 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்து தருவதாக வாகுகுறுதி கொடுத்தார் கம்பேனியின் Admin மேனேஜர்.
ஒவ்வோரு மணிக்கு ஒரு முறையும் துபை மண்டல செயலாளர் ரஹிஸ் அவர்கள் PRO ஒசாம வுடன் தொடர்பிலே இருந்துள்ளார். மாலை 6 மணிக்கு பாஸ்போட்டை கம்பெனியிலிருந்து எடுத்து வருவதாகவும் இன்று இரவே தாயகம் செல்ல விமானம் முன்பதிவு செய்ய முயல்கிறேன் என்று அசோகன் நிர்வாகிகள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் போன் செய்து கூறியிருக்கிறார். பிறகு 14/02/2016 இரவு 11 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை மார்க்கமாக மதுரை செல்ல முன்பதிவு செய்யப்பட்டு துபை விமான நிலையத்தில் துபை மண்டல தலைவர் யூசுப் மற்றும் செயலாளர் ரஹிஸ் அவர்களும் திருமன வாழ்த்துக்கள் கூறி வழியணுப்பியபோது ஆனந்த கண்ணீரோடு சமூக சேவையில் ஈடுபடும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி மற்றும் SDPI கட்சியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி விடைபெற்றார். அசோகன் தாயகம் வருவதை மதுரை மாவட்ட SDPI தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது அசோகன் மதுரை வந்துவிட்டதாகவும் நாளை (16/02/2016) அன்று திருமனம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
மின்னஞ்சல் மூலமாக
SDPI LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக