Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 ஜூலை, 2013

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்திற்கு புது வரவு....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்திற்கு புது வரவாக இந்த ரமலான்னில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூலிங் வாட்டர் அறிமுக படித்தி உள்ளனர். இதனால் நோன்பு திறக்கும் நேரத்தில் பெரியவர்கள் குறிப்பபாக சிறுவர்களுக்கு அதிக குசி ஏற்பட்டுள்ளது. இதை முறையாக

தந்தையே! நீங்கள் தான் எகிப்து தேசத்தின் சிறந்த தலைவர் - முஹம்மத் மூர்சியின் மகன் உமர் மூர்சி பெருமிதம்!

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மத் மூர்சியின் மகன் உமர் மூர்சி அவர்கள்    http://edition.cnn.com என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சட்டத்திற்குப் புறம்பாக அதிபர் பதவியில் இருந்து வெளியற்றப்பட்ட என் தந்தை, மீண்டும் மக்களால் திரும்பவும் பதவியில் கொண்டு வரப்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

திங்கள், 29 ஜூலை, 2013

ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!

கடந்த, சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர். ரமேஷ் சேலத்தில் சில மர்ம நபர்களால், அவரது அலுவலக வளாகத்திலேய சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை, முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து பத்திரிகைகளும், ஊடகங்கலும் செய்தி வெளிஇடுவது சமுகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு இழுக்காகும்.

யார் இதற்க்கு கரணம்?

முக்கிய அறிவிப்பு


சனி, 27 ஜூலை, 2013

கண்டதும் கேட்டதும்...


நமது ஊர் ஜமாலி நகர் பகுதியில் இருக்கும் மேல்நிலை குடிநீர்த் தொட்டியின்
புகைப்படம்தான் இது! ஆறு மாதங்களுக்கு முன் ஜனவரி 7 ஆம் தேதி இந்த 
புகைப்படத்தோடு ஒரு பதிவை செய்தியாக கொடுத்திருந்தேன் இதோ அந்தப் பதிவு 

“லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட 
ஜமாலி நகரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க 

துபாய் TO லெப்பைக்குடிக்காடு வழி வி.களத்தூர் !

அன்புள்ள லப்பைகுடிக்காடு பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, கடந்த பல வருடங்களாக வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்களுக்கு ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு தரமான ஈத் கேக் புஷ்ரா நல அறக்கட்டளை வினியோகம் செய்து வருகிறது.
கடந்த பக்ரீத் பண்டிகைக்கு லப்பைகுடிக்காட்டிலும் சிரிய அளவு வினியோகம் செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் மாதம் ஈத் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்விட் லப்பைக்குடிகாடு முழுவதும் விணியோகம் செய்ய உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
கேக்  ஆர்டர் செய்ய கீழ்கானும் நபர்களை தொடர்பு கொள்ளவும்
ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே!
ஒரு  மிக்ஸ்  ஸ்வீட்டின்  விலை  13 DHS மட்டுமே!


வெள்ளி, 26 ஜூலை, 2013

தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் சிக்க வைக்கப்படுவதாக ஹிந்துக்களும் நம்புகின்றனர்! - ஆய்வு தகவல்!


CNN IBN - The Hindu இணைந்து இந்திய வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. "தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்படுகின்றனரா?" என்ற கேள்விக்கு பெரும்பான்மை இந்திய

விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.....!!


விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.....!!



புலனாய்வு அமைப்பில் இணைந்து பணியாற்ற பலருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் அதற்க்கு யார்? யார்? விண்ணபிக்கலாம் உள்ளிட்ட தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை. இந்திய புலனாய்வு அமைப்பில்(Intelligence Bureau) பட்டதாரிகளுக்கு(Any Graduate) 750 Assistant Central Intelligence Officers காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு அனைத்து பட்டதாரிகளுகும் விண்ணபிக்கலாம். இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த IB துறையில் இணைந்து சமூக விரோதிகளின் குற்ற செயல்களிலிருந்து நாட்டினை பாதுகாப்போம்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ? யார் விண்ணபிக்கலாம்? உள்ளிட்ட முக்கிய தகவல்கள் :

வியாழன், 25 ஜூலை, 2013

தீவிரவாதத்தை யார் அரங்கேற்றுவது ?

தீவிரவாதத்தை யார் அரங்கேற்றுவது ?
தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

புதன், 24 ஜூலை, 2013

பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!


பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

இங்கு இணைத்துள்ள சுற்றரிக்கைகளைப் (நோட்டீஸ்கள்) போல இன்னும் பல இடங்களிலும், அணைத்து செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா...? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

தொடரும் முஸலிம்களின் ஒற்றுமை.....


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பத்திரிகை அறிக்கை: பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு மதசாயம் பூச முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இது போன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப் பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் இந்தக் கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவருவதற்கு முன்பாகவே

திங்கள், 22 ஜூலை, 2013

கண்ணியமிக்க லைலத்துல்கத்ர் இரவு

இந்த ரமளான் மாதத்தில் அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலத்துல்கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் அறிவிக்கின்றான்.

(1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) கண்ணியமிக்க இரவில் இறக்கிவைத்தோம்.
(2) கண்ணியமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?
(3) கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
(4) அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்து கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள்.
(5) அந்த இரவு முழுவதும் நலம் மிக்கதாகத் திகழும்., விடியற்காலை உதயம் வரையில்!
(அல்குர்ஆன் 97:1,5)

வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை: தலைவர் தமிழ்மகன் உசேன்!


பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

பிஜேபி -ன் அட்டுழியத்தை முறியடித்த முஸ்லிம்கள்...

காரைக்கால் பிஜேபி அட்டுழியம் !! பா.ஜ.க அட்டுழியம் மத கலவரம் ஏற்படுத்த முயற்சி.முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் . இதை கண்டித்து காரைக்கால் அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக

ஞாயிறு, 21 ஜூலை, 2013

வெளிநாட்டில் சாதா(ரண) வாழ்க்கை

வெளிநாட்டில் சாதா(ரண) வாழ்க்கை
தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ

"பிரிவு என்பது எவ்ளோ பெரிய வலி என்பது வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொருக்கும் தெரியும்.


"பிரிவு என்பது எவ்ளோ பெரிய வலி என்பது வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொருக்கும் தெரியும்.

தன் தாயை பிரிந்து, தன் தகப்பனை பிரிந்து, மனைவியை பிரிந்து, பெற்ற புள்ளையை பிரிந்து, குடும்பத்துக்காக நாம் படும் கஷ்டம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும்.

சகோதரர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் நாமெல்லாம் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ கழித்து நமது தாய்யயும், தகப்பனையும், மனைவியையும், புள்ளையையும், பார்ப்போம் என்ற நம்பிக்கையில் தான்

சனி, 20 ஜூலை, 2013

இராணுவ நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட அதிபர் முர்ஷி


இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து : 

இன்ஷா அல்லாஹ் நாளை இறுதித் தீர்ப்பு நாளில் உங்கள் மீதும்

வெள்ளி, 19 ஜூலை, 2013

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!


நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.


கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது

‘நான் இந்து தேசியவாதி’ மும்பை முழுதும் மோடியின் ஹிந்துத்துவா ஆதரவு போஸ்டர், பேணர்கள்!

மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறிய ‘நான் இந்து தேசியவாதி’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேணர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2014 நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா இந்துத்வாவை முன்வைத்துதான் சந்திக்கும் என நிரூபணமாகியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

புதன், 17 ஜூலை, 2013

முதல் முறையாக Dubai International Holy Quran Award நடத்தும் தமிழ் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு...


பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் ஜவுளித் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோருடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
தமிழக முதல்வர் பெரம்பலூரை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், தொழில் நகரமாக மாற்றுவதற்கும் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

திங்கள், 15 ஜூலை, 2013

உணவு பாதுகாப்பு மசோதா: உண்மையில் மக்களின் உணவு உரிமையை பாதுகாக்குமா?

பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உணவு என்பது மக்களின் உரிமை அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதே உணவு பாதுகாப்பு மசோதா.
நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உணவு திட்டங்களானது நலத்திட்டங்களின் (welfare based) அடிப்படையில் உள்ளது. ஆனால் இந்த திட்டம் உரிமை அடிப்படையிலானது (rights based) என்கிறது மத்திய அரசு.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

முஸ்லிம் இனப்படுகொலை மோடிக்கு நாய்க்குட்டி காரில் சிக்கிய கவலை போன்றதாம்!-மோடியின் திமிருக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம்!

2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத வகையில் நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலையை நாய்க்குட்டிக்கு ஒப்பிட்ட இனப்படுகொலைகளை தலைமை தாங்கிய நடத்திய மோடிக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு, மோடி அளித்த நேர்முகம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோடியின் கீழ்த்தரமான, கொடூரமான உவமைக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவுச் செய்துள்ளன.

21 மணி நேரம் நோன்பு கடைபிடிக்கும் டென்மார்க் மற்றும் ரஷ்யா முஸ்லிம்கள்..!

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.
அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.
அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு

வெள்ளி, 12 ஜூலை, 2013

மாசடைந்த காற்று பலவீனமான இதயமுடையவர்களுக்கு ஆபத்து! - சர்வதேச ஆய்வு

மாசடைந்த காற்று பலவீனமான இதயம் உடையவர்களுக்கு மரணத்தைக் கூட விளைவிப்பதாக சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. மாசுக் காற்றுக் காரணமாக பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு அளவை விட பிரிட்டனின் பல நகரங்களின் காற்று மண்டலத்தில் மாசு அதிகமாக இருப்பதாக லான்செட் நடத்திய இந்த ஆய்வுக்கு பொருளுதவி செய்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

எகிப்து:முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்கா அளித்த பணம்! - அல்ஜஸீரா செய்தி

எகிப்தில் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டின் மூத்த எதிர்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்கா பெருமளவில் பணம் அளித்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக அல்ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க சிறப்பு திட்டம் உருவாக்கி அமெரிக்கா, எகிப்திற்கு பணம் அளித்துள்ளதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எகிப்தின் எதிர்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்கா பெருமளவில் பணம் அளித்துள்ளதை அல்ஜஸீரா ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.

வியாழன், 11 ஜூலை, 2013

மில்லத் கல்வி அறக்கட்டளையின் அறிவிப்பு...


சுவனத்தில் வாசல்கள் திறக்கின்ற​ன!

“உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். வளமான மேன்மையான நகரமும் உண்டு; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (சூரா ஸபா:15-வது வசனம்)
சிறந்த மனிதர், சிறந்த சமூகம், சிறந்த தேசம், கருணையான இறைவன் என்ற இஸ்லாத்தின் சித்தாந்தத்தை விவரிக்கும் திருக்குர்ஆன் வசனத்தை தான் மேலே கண்டோம்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் இஸ்லாமிய மார்க்க பாடங்களின் சாராம்சம். மனிதனை சுத்திகரித்து வாழ்க்கையை பரிசுத்தப்படுத்தும் விதமாகவே இஸ்லாத்தில் நம்பிக்கையும், கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் அமைந்துள்ளன.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.....



கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும்
நினைவுச் சின்னம் ?

கிராமங்களிலும் நகரங்களிலும் ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளுக்கு MLA – வோ , MP – யோ நேரடியாக வந்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க இயலாது என்பதற்காக உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. குடிநீர் , சாக்கடை மற்றும் சுகாதாரமான சூழ்நிலையை நிறைவேற்றிட உள்ளுர் பிரதிநிதிகளை தேர்ந்த்தெடுக்கின்ற பொன்னான

செவ்வாய், 9 ஜூலை, 2013

சவூதி, துபையில் – புதன்கிழமை முதல் நோன்பு தொடக்கம்! -

சவூதியில் நேற்று திங்கள் கிழமை இரவு ரமழான் பிறை தென்படாததால் சவூதி மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை புதன் கிழமை நோன்பு தொடங்குகிறது.

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு..... (ஒரு நேரடி ரிப்போர்ட்)


பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் {அண்ணா பிறந்த நாளில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட போதெல்லாம் முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை}, முஸ்லிம்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தல், தமிழக அரசின் திருமணப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்தல் என்கிற 3 கோரிக்கைகளை வைத்து (ஜூலை 6, 2013) பேரணி நடத்தக் கோரிய அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்!!!

அல்லாஹ்வின் திரு பெயாரால்..... 
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்இஸ்லாம் ஒரு தூய மார்க்கம்இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகியஅல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும்உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம்.

மாறாக அன்று முதல்இன்று வரை னிமேல் காலங்கள் உள்ளவரை வாழ்ந்வாழ்கின்றஇனி வாழும் மக்களுக்காக எல்லாக்காலத்திலும்

ஓர் முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

வெள்ளி, 5 ஜூலை, 2013

சமுக நல்லிணக்க நிகழ்ச்சியாக மாறிய தொடக்க விழா ( CWT )...

நேற்று காலை சரியாக 11 மணியளவில் நடமாடும் இலவச மருத்துவமனை மற்றும் மருத்துவ முகாம் தொடக்க விழா வெகு சிறப்பாக துவங்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் ETA குழுமத்தின் பெறுப்புதாரிகள் மற்றும் கிழக்கு ,மேற்கு ஜமாத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் M.A. சுப்ரமணியன் M.A.,B.L அவர்கள் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினார்கள். நிறைவாக தூவாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ETA

த.மு.மு.க வின் மூன்று முத்தான கோரிக்கை....

 

புதன், 3 ஜூலை, 2013

ETA சமுதாய நல அறக்கட்டளை – பெரம்பலூர் கிளை -லெப்பைக்குடிக்காட்டில் தொடக்கவிழா! -

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
இ.டி.ஏ. குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் மதிப்புமிகு அல்ஹாஜ் செய்யிது எம்.ஸலாஹுத்தீன் அவர்களது நெறிகாட்டலில் இ.டி.ஏ.குழும நிறுவனங்களின் மேலதிகாரிகளால் அல்ஹாஜ்

நமதூரில் தொடங்க உள்ள நடமாடும் இலவச மருத்துவமனை...


செவ்வாய், 2 ஜூலை, 2013

பேரூராட்சியின் து.தலைவரின் அறிக்கை....


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி துணைத்தலைவரும் லப்பைக்குடிக்காடு பேரூர் அ.தி.மு.க நகர செயலாருமான முகமது பாரூக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறி இருப்பதாவது....

திங்கள், 1 ஜூலை, 2013

புது பொழிவுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..லெப்பைக்குடிக்காடு

லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட திறப்பு (28.06.2013 )விழா நடைபெற்றது. வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கிருச்னகுமார் தலைமை வகித்து கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.