Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 29 ஜூலை, 2013

ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!

கடந்த, சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர். ரமேஷ் சேலத்தில் சில மர்ம நபர்களால், அவரது அலுவலக வளாகத்திலேய சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை, முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து பத்திரிகைகளும், ஊடகங்கலும் செய்தி வெளிஇடுவது சமுகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு இழுக்காகும்.

யார் இதற்க்கு கரணம்?
ஆடிட்டர் ரமேஷ் 19இம் தேதி இரவு மர்ம நபர்களால் கொல்லபட்டபோது, அவரது அலுவலகத்தில் வாட்ச் மேனகா வேலை பார்த்த ஜெயராமன் என்பவர் மட்டும் தான் சம்பவ இடத்தில இருந்தார். வேறு எந்த தடயங்களும், கொலை சமந்தமான அதரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் , இதை சிறிதும் ஆராயமல் பா.ஜ.க. தலைவர்களும், ஹிந்துத்துவ தலைவர்களும் முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதையும், நமது பத்திரிகைகளும், ஊடங்கங்களும் வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒரு விசயமாகும்.

முமூர்த்திகள் பார்த்த விதம்

தமிழகத்தில் பத்திரிகை புரட்சி நடத்தி வரும் நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள், சிறிதும் நாகரிகம் இல்லாமல் இந்த கொலையை தங்களுடைய அட்டைபடத்தில், மக்களை பயத்தில் ஆழ்த்தும் தலைப்பிட்டு எழுதி இருந்தனர்.

1. ஜூனியர் விகடன் எழுதியிருந்த விதம்


மரண பீதியில் இந்து தலைவர்கள், தேதி குறி தீர்த்து கட்டு...., கொலை பட்டியலில் 80 பேர்.

இது போன்று தலைப்பிட்டு, கட்டுரையில் அனைத்தும் முஸ்லிம் விரோத போக்குடன் எழுதி இருந்தார் எஸ். முத்துகிருஷ்ணன் அவர்கள்.

கட்டுரையில், அணைத்து தகவல்களும் முஸ்லிம்களுக்கு எதிராகவும், நிச்சயமாக இந்த கொலையை முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் என்ற ஒரு தொனியிலும் இருந்தது அக்கட்டுரை. அதுமட்டுமின்றி, இந்து மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் பேட்டிகளை வெளியிட்டு இருந்த ஜூனியர் விகடன் முஸ்லிம்களின் சார்பில் எந்த ஒரு பேட்டியையும் வெளியடவில்லை. இது ஒரு தலைபட்சமான ஒன்றாகும். இந்த கொலை சமந்தமாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி, இந்த கொலைக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்து இருந்தனர். இந்த செய்தியை ஹிந்து மற்றும் தினமணி ஏடுகள் 24.07.2013 அன்று வெளியிட்டு இருந்தன.

நாம், கூற விரும்புவது என்னவென்றால் இது போன்ற கொலைகள் நடைபெறும்பொழுது, சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பத்திரிகைகள் மற்றும் ஊடங்கங்கள் இது போன்று எழுதும் போது மக்கள் மத்தியில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் தடைபடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது என்பது சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்ககளின் கருத்தாகும். இதை, வரக்கூடிய காலங்களில் ஜூனியர் விகடன் தொடராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

2. நக்கீரன் எழுதியிருந்த விதம்


இன்று ஆடிட்டர் ரமேஷ்! நாளை?, வெடி குண்டுகளுடன் திரியும் மத வெறியர்கள்! அதிர்ச்சி தகவல்கள்.

நக்கீரன் கொஞ்சமும் நடுநிலை இல்லாமல், அதே ஜூனியர் விகடனுக்கு நான் சளைத்தவன் அல்ல என்பதை நிருபிக்கும் விதமாக எழுதி இருந்தனர். அதில், அனைத்தும் முஸ்லிம்களின் அமைதியை குலைக்கும் விதமாகத்தான் இருந்தது. அதில், ஒன்று பிஜேபி தலைவர் ஒருவர் கூறியதாக, தேசவிரோத ஜிகதின் இது போன்ற தீவிரவாத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதி இருந்தனர். ஏன் நக்கீரனுக்கு காவி தீவரவாதம் பற்றி எழுத தெரியாதோ? அல்லது எழுத தெரியாத மாதிரி நடிகின்றதோ. இது நக்கீரன் முஸ்லிம்களுக்கு மேல் உள்ள கால்புனர்ச்சியை எடுத்து காட்டுகிறது.


3. குமுதம் ரிப்போர்டர் எழுதியிருந்த விதம்


தொடரும் அரசியல் கொலைகள்... யாருக்கு எச்சரிக்கை?
குமுதம் ரிப்போர்டர் தங்களுக்கு வந்த அனைத்தையும் மித மிஞ்சிய வகையில் எழுதி இருந்தது. அதில், பிஜேபி முக்கிய தலைவர் கூறியதாக, குறிப்பாக, மோடிக்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை பயமுறுத்தவே இது போன்று கொலைகள் நடந்து வருகிறது என்று கருதுகிறோம். இவை தொடருமானால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டியது வரும் என்று இருந்தது.
கடைசியாக, முடிக்கும் போது அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்தாவிட்டால், நாடாளமன்ற தேர்தலின் பொது மீண்டும் ஒரு கோவை குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் நடந்தாலும் நடக்கலாம் என்று முடிகிறது. இது போன்று மத வெறிகளை தூண்டக்கூடிய பேட்டிகளை வெளியிடுவது சமூகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எது, எப்படியோ இது போன்ற கொலைகளை வைத்து பிஜேபி தமிழகத்தில் தாமரையை வளர்த்து விடலாம் என்று நினைக்கிறது. ஆனால், கொஞ்சம் இருக்கின்ற தாமரையை இல்லாமல் ஆக்கி விடுமோ என்று சமுக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகும்.

அன்புடன்,

நெல்லை சலீம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக