Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 7 ஜூலை, 2013

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்!!!

அல்லாஹ்வின் திரு பெயாரால்..... 
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்இஸ்லாம் ஒரு தூய மார்க்கம்இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகியஅல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும்உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம்.

மாறாக அன்று முதல்இன்று வரை னிமேல் காலங்கள் உள்ளவரை வாழ்ந்வாழ்கின்றஇனி வாழும் மக்களுக்காக எல்லாக்காலத்திலும்
ல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான்இஸ்லாம்இஸ்லாத்தின் ொள்கை கோட்பாடுகள்வணக்க வழிபாடுகள் அனைத்துமே இறைவனால் திருமறை குர்ஆனில்சொல்லப் பட்டவைகளும் இறுதி நபி பெருமானார் (ஸல்அவர்களால் சொல்லப் பட்டவைகளும் செய்து காட்டப் பட்டவைகளும்அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.

திரு மறையில் கூறப்படாதவைகளும் திரு நபி (ஸல்அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும் கொள்கை கோட்பாடுகளாகவணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதுதிரு மறை நிறைவு பெற்ற பிறகு – திரு நபி (ஸல்அவர்களின்மறைவுக்குப் பிறகு ேறு யாராவது புதிய வணக்க வழிபாடுகளை புதுமையான செயல்களை உருவாக்கி ‘இவைகளும் இஸ்லாத்தில்உள்ளவை தான்’ என்று கூறினால்அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்அவர்களுக்கும் திரானவர்கள் என்பதில்எள்ளளவும் சந்கேமில்லைஅவர்கள் எவ்வளவு ெரிய மேதைகளாக இருந்தாலும் மாபெரும் அறிஞர்களாக அங்கீகரிக்கப்ட்டவர்களாக இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்அவர்களும் எதைச் செய்யும்படி ஏவினார்களோ அதை மட்டுமே ெய்ய வேண்டும்அதில்நம் வசதிக்குத் தகுந்தபடி குறைத்துக் கொள்வதும் குற்றம்நம் விருப்பத்திற் கேற்றபடி கூட்டிக் கொள்வதும் குற்றம்மேலும்அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில்வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ ரிமையில்லைஆகவேஅல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமானவழிகேட்டிலேயே ருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33 36) என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்அவர்களும் காட்டித் தராத அத்தனை பழக்கங்களும் மூடப்பழக்கங்களேசொல்லித் தராதஅத்தனை நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே. இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ மூடப்பழக்கங்கள் மூட நம்பிக்கைகள் அநாச்சாரங்கள் பித்அத்துகள் நீக்கமற எங்கெங்கும் நிறைந்து விட்டனஅல்லாஹ்வுக்கும் அவனதுிருத் தூதர் (ஸல்அவர்களுக்கும் மாற்றமான காரியங்களைக் கண்டு பிடித்துக் களையெடுப்பது அவசியத்திலும் அவசியம்.
ஏனெனில் அனஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நீங்கள் சில பாவச் செயல்களைப் புரிகிறீர்கள் வை உங்கள் பார்வையில்முடியை விட மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்அவற்றை நாங்கள் நபி (ஸலஅவர்கள் காலத்தில் மூபிகாத் என்றே கருதிவந்தோம். (மூபிகாத் என்றால் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பொருள்ஆதாரம்புகாரி இடைக் காலத்தில் ஏற்பட்ட மடமைகள்இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம்இதன் கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்க முடியும்ருக்கவும் வேண்டும்உலகில் உள் அனைத்து மதங்களையும் விட இஸ்லாமியமார்க்கத்திற்கு மட்டுமே ரிய தனிச் சிறப்புக்களில் இதுவும் ஒன்றுபல்வேறு கால கட்டங்களிலும் பல வேறு சமூகங்களைச்சேர்ந்தவர்கள் சத்தியத்தை உணர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அணி திரண்டு வந்தார்கள்.

பல் வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது – ஏற்கனவே தாங்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தங்களையும் அறியாமல் தங்களுடன் கொண்டுவந்து விட்டனர்பல்வேறுசமூகத்தினரிடையே பரவி வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயத்தினரும் – பிற சமூக கலாச்சாரங்களை பார்த்துப் பார்த்துப்பழகிப்போய் – தங்களையும் அறியாமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

இப்படிச் சிறுகச் சிறுக முஸ்லிம்களுக்கு மத்தியில் நுழைந்து விட்ட மூடப் பழக்கங்கள் கண்மூடிப் பழக்கங்கள்நாளடைவில் வேர்விட்டு கிளை பரப்பி முழு அளவில் ுஸ்லிம் சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டனஅம்பெய்துுறிபார்த்து அதற்கேற்ப நடந்தவர்கள் – நிர்வாணமாக கஃபாவை வலம் ுற்றி வந்தவர்கள் – மதுவின் போதையில் மதி மயங்கிக்கிடந்தவர்கள் – பெண் குழந்தைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்தவர்கள் – அறியாமைக் காலத்தின் அநாச்சாரங்களில்மூழ்கிக் கிடந்தவர்கள் – இவர்களெல்லாம் அண்ணல் நபி (ஸலஅவர்களின் போதனைகளை ஏற்றுத்திய இஸ்லாத்திற்கு வந்தபோது ுழுக்க முழுக்க அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வந்தார்கள்.

அப்படிப்பட்ட நபித் தோழர்களின் சரித்திரங்களைச் சற்றேனும் சிந்தித்தால்….. முன்னோர்கள் மூதாதையர் செய்த மூடப்பழக்கங்களிலிருந்தும் பிற சமூக மக்களின் கலாச்சாரங்களிலிருந்து நம்மையும் அறியாமல் நம்மிடையே தொற்றிக் கொண்டு விட்டஅநாச்சாரங்களிலிருந்தும் நாமும் விடுபட முடியும்அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ல்அவர்களும் காட்டிய நேரியவழியில்நம் வாழ்க்கையை அமைத்துக் ொள்ள முடியும். ‘முன்னோர்கள் செய்தார்கள்’ என்பதற்காகவும் காலங் காலமாகச் செய்யப் பட்டுவருகின்றன என்பதற்காகவும் பெரும் பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவும் மூடப் பழக்கங்களை ஒரு போதும் நியாயப்படுத்தக் கூடாதுசெய்யும் காரியங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் ங்கீகரிக்கப் படாதவையாக இருப்பின் – தயக்கமின்றி அவற்றைத்தவிர்க்க முன் வர வேண்டும்.

அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும் இத் தூதரின் பாலும் வாருங்கள்’ என அவர்களுக்குக் ூறப்பட்டால்எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் (ந்த ார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானதுஎன்று அவர்கள் கூறுகிறார்கள்என்னஅவர்களுடைய தந்தையர் (மூதாதையர்ஒன்றும் அறியாதவர்களாகவம் நேர்வழியில் நடக்காதவர்களாக இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்) (அல் குர்ஆன் 5 :104)
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின் பற்றுவீரானால் வர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டுவழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்றவெறும் யூகங்களைத் ான் அவர்கள் பின்பற்றுகிறார்கள்இன்னும் அவர்கள்கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.(அல் ுர்ஆன் 6 :116)

காலமும் நேரமும்”
காலமும் நேரமும் நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின் பற்றும் பழக்கம்இஸ்லாத்தில்நல்ல நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்குஏற்ற செயலும் அல்லஅல்லாஹ்வுக்கு உகந் செயலும் அல்ல.
நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன.காலமும் நேரமும் அவர்களுக்கு கைகொடுக்வில்லைஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து – முகூர்த்த நேரம் என்று பிறசமூகத்தவர் குறிப்பிடுவதை முபாரக்கான நேரம் என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்றுவிட்டதாக ஆகிவிடாதுபசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லைபிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லைஉயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.

ரயில் பயணங்கள் ராகு காலத்தில் ரத்து செய்யப் படுவதில்லைஎமகண்டம் பார்த்து எந்த விமானமும் ாத்திருப்பதில்லை.வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பிறந்த குழந்தையைக் காரணம் ாட்டி ‘இது பிறந்த நேரம் சரியில்லைஎன்னுசொல்வதும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் ீட்டுக்கு வந்த மருமகளைக் காரணம் காட்டி ‘இவள் வந்த நேரம்சரியில்லை’ என்று சொல்வதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால் ‘ஆரம்பித்த நேரம் சரியில்லை’ என்று சொல்வதும் மிகப்பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.

சிலர் நீண்ட காலமாக வறுமையிலும் – சிரமத்திலும் இருந்திருப்பார்கள் அதன் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு பொருளாதாரவசதியை அதிகரித்திருப்பான்அந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி ‘இது பிறந்த அதிர்ஷ்டம்’ என்றுசொல்வார்கள்இதுவும் தவறு தான்அல்லாஹ் வழங்கிய அருள் என்பதை மறந்து குழந்தையை அதிர்ஷ்டம் என்று நம்புவதும்தவறஎல்லாக் குழந்தையையும் சமமாகக் கருதாமல் ஒரு குழந்தையை மட்டும் அதிர்ஷ்டக் குழந்தை என்று கருதுவதும் தவறு.

வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தேல்வியும் – அல்லாஹ்வின் நாட்டப் படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி வேண்டும்.நினைத்த காரியம் நடக்காமல் போவதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும் இதைவிடச் சிறந்ததை நமக்குத்ருவதற்காகவோ அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காகவோ இறைவனுடைய ஏற்பாடாகஇருக்கக் கூடும்அதை ிட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம்ஏனனில் இறைவன்கூறுகிறான். ‘ காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்.’ (ஹதீஸ் குத்ஸி) இறை நம்பிக்கை மது உள்ளத்தில் ஆழமாகப்பதிய வேண்டும்அப்போது தான் கால நேரத்தின் மீதுள்ள நம்பிக்கை நம்மை ிட்டு மறையும்.
ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் நல்ல நேரமேஒவ்வொரு ஆண்டின் 365 நாட்களும் நல்ல நாட்களேநமது பேச்சும் செயலும்நல்லவையாக ருக்க வேண்டும்இது தான் முக்கியம்.

ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு எதுவும்எங்களை அணுகாதுஅவன் தான் எங்களுடைய ாதுகாவலன்என்று (நபியேநீர் ூறும்மூமின்கள் அல்லாஹ்வின் ீதே முழு நம்பிக்கை வைப்பார்களா! (அல் குர்ஆன் 9 51) சகுனம்பார்ப்பது சரியானதல்ல ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது ‘எங்கே போகிறீர்கள்?’ என்று யாராவது கேட்டு விட்டால்போகிற காரியம் நடக்காது ன்று நம்புவதும் – நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச்செல்வதும் – போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற ாரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் – விதவைப் பெண்கள்எதிரில் வந்தால் அபசகுனம் என்று ினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.

நாம் நமது வேலையாகப் போகிறோம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம்பூனை தனது வேலையாகப் போகிறதுமது வேலையைக் கெடுப்பது பூனையின்வேலையல்லமூளை என்று ஒன்று ருந்தால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம்மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ சொல்வது உண்மை என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் – ‘பாலன்ஸ்’ தவறி பல்லி விழுந்துவிட்டால் பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி ‘பல்லி விழும் லன்’ பார்ப்பதும் மூடநம்பிக்கைகளில் உள்ளவை என்பதைப் புரிந்துக் கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லைதேதி பார்க்க காலண்டர் வாங்கும் போதுபல்லி விழும் பலனும் ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினால் போதும்பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்துவிடுபடலாம்.

மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய – குர்ஆன் வசனங்களும் பெருமானார் (ஸல்அவர்களின் பொன் மொழிகளும் அடங்கியஇஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டனநல்ல சகுனம் கெட்ட சகுனம் எதுவுமேஇஸ்லாத்தில் இல்லைஎவ்வித சகுனமும் பார்க்கக்கூடாதுசகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும்ஏற்படுத்தமாட்டா. நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது ‘ஈமான்’ என்னும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்அல்லாஹ் விதித்த படி தான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கைஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும்அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும்ற்படாது.

நல்லது என்று நாம் நினைத்திருந் காரியம் நடக்காமல் போகலாம்தை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம்கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம்நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம்நமக்கு அது தான்சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம்அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம்நடந்துமுடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சகுனத்தின் அடிப்படையில்நடந்ததாகவோ நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது. ‘மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும்தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றிசுவர்க்கம் செல்வார்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (லிஆதாரம்புகாரி)

திரு மணத்தில் தீய பழக்கங்கள்

திரு மணத்தில் தீய பழக்கங்கள் டங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூ ‘சீர் திருத்தத்திருமணங்கள்’ என்னும் பெயரில் இந் நாகரீகக் ாலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர்ஆனால் உண்மையான சீர்திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம்சமுதாயத்தினர் சிலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சுபொறுக்குதில்லையேமஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்’ வழக்கம் கருகமணி என்னும்பெயரில் முஸ்லிம் முதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான கிமைஅளிப்பதும்திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் 
பழத்துக்கும் வெத்திலைபார்க்குகும்  முக்கியத்துவம்கொடுப்பதும் அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும் மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்றுகும்மாளம் போடுவதும் பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும் ஆட்டுத்தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும்சத்தியத் தூதர் (ஸல்வர்கள் காட்டிய நெறியைக்கடைப் ிடிக்க வேண்டுமபெருமைக்காகவும் இ ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்அப்போதுதான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத்நிறைந்ததாகும்.’ என்பது நபி மொழி. (அறிவிப்பவர்ஆயிஷா (ரலிஆதாரம் அஹ்மத்) வரதட்சனை என்னும் ன்கொடுமைஒழிய வேண்டும்சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்தவேண்டும்.கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் ெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை ன்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத்தயாராகி விட்டனர்என்றாலும் இது ஒரு சாதனை அல்லமணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்கவேண்டும்இதுவே மார்க்கச் சட்டம்சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல்பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக்கழிக்கிறார்கள்மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து வி வேண்டும்மஹர்தொகையை இப்பேர்து கொடுப்பதால் ‘தலாக்’ ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர்இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல்செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இன்னும் உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும் அவ்விதமே சாலிஹான உங்கள் அடிமைகளுக்கும் திருமணம் செய்துவையுங்கள்அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கிவைப்பான்மேலும் அல்லாஹ் (கொடையில்விசாலமானவன். (யாவற்றையும்நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 24 32)

வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்:
வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள் வாழ்க்கையில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ற்படுவது அனைவருக்கும்இயல்புப்படி வீடு கட்டும்போது மார்க்கத்திற்கு முரணில்லா வகையிலும் ஷிர்க் (இணை வைத்தல்எந்த வகையிலும் ஏற்படாவண்ணமும் வீடு கட்டப்பட வேண்டும்வீடு கட்டுவதற்கு முன் வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து கட்டடப்பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவதுநல்லது தான்அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள்ஈமானை இழக்கின்றனர்.

மனையடி சாஸ்திரத்தில் ஒரு அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்றுகுறிப்பிடப் ட்டிருக்கும்அப்படியானால் அந் அளவைத் தவிர்த்துக் கட்டப் படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணம்அடைவதில்லையா?மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காதுஇரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பதுநிச்சயம்நாம் வசிக்க உருவாக்கும் வீட்டைஇ நம வசதிக்கு ஏற்றபடியும் இடத்திற்குத் தக்கபடியும் நீள அகலங்களை நாம் தான்தீர்மானிக்க வேண்டுமே தவிர – வாஸது சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது மனித வாழ்க்கையில் எவ்விதமாறுதலையும் ஏற்படுத்தாதுஎந்த சாஸ்திரமும் – சம்பிரதாயமும் ன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்டவீடுகளில் வசிப்போர் – நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்கமுழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?

கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் – அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் டுவதும்கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்துகட்டுபவர்களின் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் – அங்கீகரிப்பதும் – கதவு நிலை வைப்பதற்குக்கூட காலமும் நேரமும் பார்த்து பூவும் பொட்டும் வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் – காங்கிரீட் போடும் போது ஆடும்கோழியும் அறுத்து பலியிடுவதும் – கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசனிக்காய் கட்டித் தொங்க ீடுவதும் – புதிய வீடுகட்டி முடித்த பின் மூலைக்கு மூலை பாங்கு சொல்வதும் – முதல் வேலையாக ால் காய்ச்சுவதும் – கூலிக்கு ள் பிடித்துகுர்ஆனும் – மௌலூதும் ஓதுவதும் – இவைகள் யாவுமே புனித இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர வேண்டும்.
குர்ஆன் ஓதுவது எப்படித் தவறாகும்என்ற சந்தேகம் பலருக்கும் ழலாம்புதுமனை புகு விழாவுக்கு மட்டும் – அதுவும் கூலிக்குஆள் பிடித்து ஓதுவதற்கு அருளப்பட்டதல்ல குர்ஆன்குர்ஆன் எப்போதும் ஓதப்பட வேண்டும்குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஓதவேண்டும்சடங்காக்கப்படக் கூடாதுசொந்தமாக வீடு கட்டுவது என்பது சராசரி மனிதனுக்கு ஒரு சாதனை தான். எந்த வகையிலும்இந்த சாதனையில் அநாச்சாரம் நுழைந்து விடாமலும் ஷிர்க் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பிறந்தநாள்விழாவும்பெயர் சூட்டு விழாவும்:
பிறந்தநாள்விழாவும்பெயர் சூட்டு விழாவும் பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும்பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் றுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழிஆனால் இந்த சுன்னத் (நபி வழி)புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது. குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் ‘பெயர் சூட்டுவிழா’ என்று ‘அசரத்தைக’; கூப்பிட்டு பெயர் சூட்டப் படுகிறது.

குழந்தை பிறந்தாலும் 40. திரு ணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்தண்டலக்’ கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லைபெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து சரத்தைக் கூப்பிட்டுத் தான்பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ தந்தையோகூப்பிட வேண்டியது தான்இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லைசிலர் வருடந்தோறும் குழந்தையின் ிறந்த நாளைர்கொண்டாடுகின்றனர்லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ?தெரியவில்லை.

இன்னும் சிலர் அநாச்சாரத்தில் ன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி ெழுகுவர்த்தி ஏற்றிஇ கேக்வெட்டி ‘ஹேப்பி பர்த் டே’ கொண்டாடுகின்றனர்இது முழுக்க முழுக்க ஓர அந்நியக் கலாச்சாரம்இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில்அனுமதி ல்லை. ‘யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.’ என்பது பிமொழி. இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு யது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்கவேண்டும்ுர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும்ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும்முழுக்க முழுக்க முஸ்லிம்குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்வெட்கங்கெட் விருத்தசேதன விழா பெருமானார் (ஸல்அவர்களின்வழிமுறையைப் பின் பற்றிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் ‘சுன்னத்’ ஆகும்நகம் வெட்டுவதும் தாடி வைப்பதும்தேவையற்ற முடிகளைக் களைவதும் பல் துலக்குவதும் இன்னும் இத போன்ற ஏராளமான சுன்னத்துகள் ருக்கின்றன.இதற்கெல்லாம் யாரும் விழா நடத்தி விருந்து வைப்பதில்லை.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ என்னும் விருத்தசேதனம் செய்வதற்கு ‘சுன்னத்’ என்நு பெயர் ைத்து பத்திரிகை அடித்துஊர் வலம வைத்து விழா நடத்தி விருந்து போடுவதும் பெரும் பொருள் செலவு செய்து ஆடம்பரமாகக் கொண்டாடுவதும் பரவலாகக்கொண்டாடப் படுகிறது. இது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய தவறானப் பழக்கம்நகம் வெட்டுவதற்கு ஒப்பானஇந்த சாதாரனச்செயலைச் சிலர் – தம்மிடம் பணம் இருக்கின்றது என்ற காரணத்துக்கா – வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கதுபணக்காரர்கள் செய்யும் இந்த ண்பாடற்றச் செயலைப் பார்த்து – எத்தனையோ ஏழைக் குடும்பத்தினர் இதற்கெனஆகும் செலவுகளுக்கு அஞ்சி தம் குழந்தைகளுக்குப் பல வருடங்கள் வரை கத்னா செய்யாமல் காலம் கடத்துகின்றனர்.

வசதி படைத்தவர்கள் விருத்த சேதன விழா நடத்தும் செலவில் – தங்கள் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து –மருத்துவரிடம் அழைத்துச் சென்று (சுன்னத்கத்னா செய்வதற்கு முயற்சி எடுத்தால் உண்மையான ‘சுன்னத்தை நிறைவேற்றியநன்மையும் கிடைக்கும்மிகப் பெரும் அநாச்சாரத்தை தடுத்து நிறுத்திய புண்ணியமும் கிடைக்கும்.

மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா:
மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா பெண்கள் பருவம் அடைந்தால் அதற்காகப் பத்திரகை அடித்து உறவினர்களை அழைத்துபூமாலை போட்டு பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையாமறைக்கவேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து அறிவிக்க பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா?எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில்பருவம் அடைகின்றனர்போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?

பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடைஇயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தைபகிரங்கப் படுத்த ேண்டும் என்று அவசியமில்லைதனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக்கொண்டு ஆலோசனைகள் பெறலாம்இதை தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லைதிருமணத்திற்குத் தயாராக ஒருபெண் வீட்டில் ருப்பதைப் பலரும் அறிந்தால் பெண் கேட்டு வருவார்கள் என்று காரணம் சொல்வார்கள்பெண்கள் ஒரு குறிப்பிட்டவயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும்தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.

பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட் வயதை அடைந்ததும் தக்க துணையும் – தகுந்த காரணமும் இல்லாமல் வெளியில்அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்பாதுகாப்பான சூழலில் அமைந்த பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.அதுவும் பெண்கள் மட்டுமே தனியாகக் கல்வி கற்கும் கல்விக்கூடங்களில் சேர்க்க வேண்டும்குறிப்பாக மார்க்கக் கல்வியை கற்பிக்கவேண்டும்இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமியவழி நடப்போம்.
மின்அஞ்சல் மூலமாக 
Oli Mohamed Ilyas 

3 கருத்துகள்:

  1. அல்லாஹ்வின் திரு பெயாரால்...

    நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களா!!!

    3:31 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
    3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
    (அல் குரான்)

    3:32 قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
    3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.(அல் குரான்)

    ” உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப்பொந்துக்குள் புகுந்தாலும் கூட அதிலும் நீங்கள் புகுவீர்கள்”
    அறிவித்தவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ
    ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

    எவன் ஒருவன் மாற்று மத கலாச்சாரத்தில் ஒன்றை தனதாக்குகிறானோ அவன் அந்த மதத்தை சார்ந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."
    (ஸஹீஹ் புஹாரி)

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
    யார் பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ, அவரும் பிரமதத்தைச் சார்ந்தவரே!!

    நூல்: அபூதாவூத்:3512

    மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமியவழி நடப்போம்.

    by
    ABU SAALIHA

    பதிலளிநீக்கு
  2. Intha katturai engirunthu edukkappattullathu endra vivarathai anuppiyavar therivikka vendugiren. Allathu, avarathu sontha katuuraiya enbathaiyum therivikkavum.

    Nandri.

    பதிலளிநீக்கு