பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக கடந்த 10 ம் தேதி அன்று அ. தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்தில் தமிழ் மகன் உசேன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது, தமிழ்மகன்உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
எனக்கு மீண்டும் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவர் பொறுப்பு கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன். இந்த பதவியில் இருக்கும் வரை முதல்வருக்கும், சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.பச்சைமால், வி.மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ். அப்துல் ரஹீம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், அரசு தலைமை ஹாஜி முப்தி முகமது சலாவூதின் அயூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி ஒன் இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக