Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 12 ஜூலை, 2013

மாசடைந்த காற்று பலவீனமான இதயமுடையவர்களுக்கு ஆபத்து! - சர்வதேச ஆய்வு

மாசடைந்த காற்று பலவீனமான இதயம் உடையவர்களுக்கு மரணத்தைக் கூட விளைவிப்பதாக சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. மாசுக் காற்றுக் காரணமாக பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு அளவை விட பிரிட்டனின் பல நகரங்களின் காற்று மண்டலத்தில் மாசு அதிகமாக இருப்பதாக லான்செட் நடத்திய இந்த ஆய்வுக்கு பொருளுதவி செய்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் வெளியிடும் புகையால் மாரடைப்பு ஏற்படுவதாக முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வு, காற்று மாசடைவதற்கும் இதயம் செயலிழப்பதற்குமான தொடர்பை கண்டறிந்துள்ளது.
பொதுவாக மாரடைப்பு வந்த பிறகு இதயம் பலவீனமடைந்துவிடுகிறது. இந்த உடல்நிலையில் பிரிட்டனில் ஏழரை லட்சம் பேர் உள்ளனர்.
லான்செட் நடத்திய ஆய்வுக்காக அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் பல்லாயிரக் கணக்கானோரிடம் நடத்தப்பட்ட 35 ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாசுக்காற்றால் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
கார்பன் மோனாக்சைட், நைட்ரஜன் டை ஆக்சைட் போன்ற வாயுக்களும், பேருந்துகள், லாரிகள் போன்றவை வெளியிடும் புகையில் உள்ள மிகச் சிறு துகள்களும் நுரையீரல்களுக்கு அடியே ஆழமாக போய் விடுவதுடன், இரத்த நாளங்களில் அவை கலந்தும் விடுகின்றன.
இதன் காரணமாக பலவீனமான இதயத்தை உடையவர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளுக்கு அருகே வாழ்ந்தாலோ அல்லது சாலைகளில் அடிக்கடி பயணித்தாலோ அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
காற்று மாசடைவதை தடுக்கும் பொறிமுறைகளை உபயோகப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் எட்டாயிரம் இதயங்கள் செயலிழப்பதை ஆண்டுதோறும் தடுக்கலாம் என்று இந்த ஆய்வுக்கு தலைமை தங்கிய டாக்டர் அனூப் ஷா கூறியுள்ளார்.
காற்று மாசடைவதன் காரணமாக ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உலகில் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக