Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஸ்கூல் சலோ பிரச்சாரம் டெல்லியில் துவங்கியது!


சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாறு துயில் கொள்ளும் டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் இந்நிகழ்ச்சி துவங்கியது.

குன்னம் வட்டத்தில் மே 2 ஆம் தேதி ஜமாபந்தி .....


குன்னம் வட்டத்தில் 1,422 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 2-ந் தேதி தொடங்குகிறது.

ஜமாபந்தி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும்.

2-ந் தேதி
இந்த வருவாய் தீர்வாயம் 2-ந் தேதி முதல் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆரம்ப மாகும். 2-ந் தேதி வடக்கலூர் பிர்காவிற்கு உட்பட்ட

மனித நேயம்

முகநூல் வெளியீடு 

சனி, 27 ஏப்ரல், 2013

வெளிநாட்டில் வசிக்கும் தியாகிகள்....

துபாயில் அல்லாஹ்வின் ரஹ்மத்....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

இன்று 27.04.2013 அமீரகத்தில் பரவலாக அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கி கொண்டு இருந்தன. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.


உலக மலேரியா தினம்‏ வீடியோ...

உலக மலேரியா தினம்‏...


மலேரியாவினால் ஏற்படும் பாதிப்பை விளக்கவும் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் ஏப்ரல்-25 ஆம் தேதி ‘உலக மலேரியா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்கென முழக்கங்கங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ஐ.நா அமைப்பு. அதன்படி இந்த ஆண்டு(2013) “மலேரியாவினை தோற்கடிப்போம்! எதிர்காலத்தை முதலீடு செய்வோம்!” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

மில்லத் அறக்கட்டளை சகோதரர்களுக்கு......


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
மில்லத் அறக்கட்டளை சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
      
உங்களது பணிகளை நாம் கண்டு கொண்டு வருகின்றோம். லெப்பைக்குடிகாடு வாழ் ஏழை பிள்ளைகளின் உயர்கல்வி படிக்க உங்கள் சக்திக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றீர்கள். நல்லவைகள் செய்ய ஆட்கள் முன் வரமாட்டார்கள், ஆனால், நடக்கும் வேலையை முடக்க புகழ்ச்சி செய்து கெடுப்பார்கள். இல்லையாயின் குறை சொல்லி விரட்டுவார்கள். இவைகள் சதாரண மனிதனின் சுபாவமாக இருந்தாலும், வெள்ளாற்று நீரை அறுந்திய நம்மவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் குசும்பு சுபாவம். புகழ்சி, இகழ்சி அனைத்தையும் செவியுராமல் சேவைகளை செய்து அநேக முஸ்லீம் ஏழை மாணவ செல்வங்கள் கல்வி உதவி பெற்று பலனடைய வேண்டும், இதன் மூலம் நமதூரில்  ஏழை குடும்பங்கள்

வியாழன், 25 ஏப்ரல், 2013

எங்கே சென்றது பொது சேவை......


எங்கே சென்றது பொது சேவை......
ஒரு காலம் இருந்த்து ஊர் பாரம்பரியம் மிக்கமாக ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மாணவர் மன்றம் என்ற பொது சேவை அமைப்பு நமது முன்னோர்களால் தோற்று விக்கப்பட்டு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தது தாங்கள் அறிந்த்தே.
இவர்களுடைய பொது பணியை சற்று சிந்தித்து பார்த்தால்....

மீண்டும் திறப்பார்களா?


மீண்டும் திறப்பார்களா? 
நமதூரில் சென்ற காலங்களில் இயங்கிவந்த பாரத ஸ்டேட் வங்கியினுடைய ATM  தற்போது மூடப்பட்டுள்ளது.
நமதூரில் ஸ்டேட் வங்கிக்கு செந்தமாக இரண்டு பணம் பெறும் இயந்திரம் உள்ளது. ஆனால் தற்போது அல்லமா இக்பால் சாலையில் இயங்கி வந்த 

வருமுன் காப்போம்.


வருமுன் காப்போம்.
நமதூரில் கிழக்குப் பகுதியில் உள்ள 6ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின்கம்பத்தினுள்ள கம்பி மிகவும் ஆபத்தான நிலமையில் உள்ளது.
கிழக்கு தெற்கு தெருவில் இருந்து ஆசியா பள்ளிக்கு இணைக்கும் சந்தில்

வந்தாரை வாழவைக்கும் நமதூர் மக்கள்.


வந்தாரை வாழவைக்கும் நமதூர் மக்கள்.

நமதூரில் கடந்த ஒரு மாதகாலமாக நடபாதை வியாபாரி மெத்த பொருட்களையும் கொண்டுவந்து வியாபாரம் செய்வதில் மும்புரமாக ஈடுபட்டுள்ளனர்.
அல்லாஹ் கூறுகிறான்.... வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்.

புதன், 24 ஏப்ரல், 2013

பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முதல்வர்


பெண்கள், குழந்தைகளை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களைக் கூட காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்துகிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும் என்றார்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மில்லத் கல்வி அரக்கட்டளை நமதூர் மக்களுக்கு எழுதிய கடிதம்.


மில்லத்  கல்வி அரக்கட்டளை நமதூர் மக்களுக்கு எழுதிய கடிதம்.
LBK News நிரூபர் அவர்களுக்கும் இதில் கமெண்ட் செய்த அணைத்து சகோதர்களுக்கும் மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பாக அஸ்ஸலாமு அலைக்கும். 

நாங்களே நேரில் சென்று கேட்டு இருந்தால் கூட இவ்வளவு கமெண்ட் கிடைத்து இருக்குமா என்றல் சந்தேகம் தான்.இந்த வாய்ப்பை ஏற்படுத்தி

நாளைய நமது ஊர் தலைமுறை.


அருளாலன் அன்பாலன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...,
நமதூரில் மாலை சுமார் 8 மணி அளவில் கலீமும் ராஜாவும் சவர்மா சாப்பிடுவதற்காக கடைதெருவிற்கு வந்தார்கள். கலீம் நமதூரில் வெங்கய வியாபாரி, ராஜாவுடைய அத்தா நமதூர்தான் ஆனால் சென்னை செட்டில்டு. இருவரும் சவர்மா கடையை நெருங்கியதும் கலீம் ஆடர் கொடுக்க கடைகாரரை நெருங்கினான். அப்பொழுது ராஜா தடுத்து நிருத்தினான்.
அந்த சமயத்தில்…,

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

இனி பஃஜ்ர் தொழுகையை விடுவீங்களா நீங்கள்?

இனி பஃஜ்ர் தொழுகையை விடுவீங்களா நீங்கள்?

நமதூரில் காணப்பட்ட சுவர் விளம்பரம் மற்றும் போஸ்ட்டர்கள்.....



திருச்சியில்… மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.


திருச்சியில்… மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
திருச்சியில் ஜமாத்துல் உலமா சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் தென்னூர்இஅண்ணாநகரில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

தன்மாணம் காப்போம் நூல் முடி அஜரத் நமது விளக்கம்


நாம் நூல் முடி அஜரத் தேவை என்ற கட்டுரைக்கு விளக்கம் கேட்டு அபு ஹசனுக்கு கடிதம் எழுதி இருந்தோம் அவர் நமது இனையத்திற்கு எழுதிய கடிதம்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வாசகர் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும்.
நூல் முடி அஜரத் தேவை.
       நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவர் அல்லாஹுவுக்கு இணை கற்பித்து விட்டார்கள்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல் அஹ்மத்-16781.
       நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான்யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறை வேற்றமாட்டான்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல் அஹ்மத்-16763.
        வணக்கத்திற்குறியவன் நாயன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்று ஈமான் கொண்டு,சாட்சியும் அளித்துள்ள நாம்அல்லாஹுவுக்கு பயந்தவர்களாக அல்லாஹுவின் மீது மட்டும் நம்பிக்கை கொண்டு வாழ்வு நடத்த உறுதியோடு இருப்போமாக.
       என்று தொடங்கும் இக்கட்டுரையின் சொந்தக்காரன் இதோ அபூ ஹசன். இதை எழுதும் போது, ஒர் முஸ்லீமாக இருந்து எழுதியுள்ளோனே தவிர, யாதொரு இயக்கத்தின் வால் பிடித்து எழுதவில்லை.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நமதூரில் இன்று நகர ஜமாத்துல் உலாமா வெளியிட்டுள்ள நோட்டீஸ்.....

1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்).

2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன் தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன்.

3. (அவன்தான்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன்.

4. தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே.

வியாழன், 18 ஏப்ரல், 2013

ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இணைய தளத்தின் விளக்கமும்.

ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இணைய தளத்தின் விளக்கமும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் நுல் முடி ஹஜரத் தேவை என்று வெளியிட்டு இருந்தோம்.
இதனை ஜமாத்துல் உலமாவில் இருந்து ஒரு மறுப்பும் கருத்தாக கிழக்கு பள்ளி இமாம் வெளியிட்டு இருந்தார்.

அஸ்ஸலாமு அலைக்கும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கட்டுரை வெளியிட்ட அபு ஹசனுக்கு,

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஒரு இலட்சியம் இரு பிரிவு ... ஏன் ?!

சென்று சேரவேண்டிய தெளிவான இடம் எது என்று தெரிந்த பிறகும் சென்று சேர்வதற்கான முறையான வாகனம் வந்திருந்தும்...

ஒன்று சேர்ந்து பயணிக்கும் ஒற்றுமையில்லாத காரணத்தினால் தனித்தனியே , நியாயம் பேசி , காரணம் காட்டி பிரிந்து நிற்கின்றனர்...

எதற்காக மெஜாரிட்டியை காட்டவா ? !... ஏன் நம்மிடம் ஒற்றுமை இல்லை ?!...

நமதூர் வாசிகள் சந்திப்பு நிகழ்ச்சி்...


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
 வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக அமீரகத்தில் பல்வோறு சமுக பணிகளை செய்து கொண்டு இருக்கும் எமிரட்ஸ் இந்தியா பிரெட்டர்னிட்டி போரம்( EIFF ) கடந்த 11.04.2013 அன்று நமதூர் வாசிகளின் சந்திப்பு நிகழ்ச்சி தேராவில் உள்ள நியூ அன்பு இல்லத்தில்

TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு!


குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு! 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலி ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

முஸ்லி ம்களின் ஜீவாதார கோரிக்கை

அல்லாஹ்வின் எச்சரிக்கை

இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப்பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
(Al Quran:7:155)




அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரகத்தில் பூமி அதிர்வு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது.
நாளுக்கு நாள் அநியாயங்களும் அகிரம்மங்களும் மிகைத்து வரும் அமீரகம்

திங்கள், 15 ஏப்ரல், 2013

நூல் முடி அஜரத் தேவை.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
     
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.  யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவர் அல்லாஹுவுக்குஇணை கற்பித்து விட்டார்கள்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல்  அஹ்மத்-16781.
        நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவருடைய காரியத்தைஅல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான்யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தைநிறை வேற்றமாட்டான்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல்  அஹ்மத்-16763.
         வணக்கத்திற்குறியவன் நாயன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்று ஈமான்கொண்டுசாட்சியும் அளித்துள்ள நாம்அல்லாஹுவுக்கு பயந்தவர்களாக அல்லாஹுவின் மீதுமட்டும் நம்பிக்கை கொண்டு வாழ்வு நடத்த உறுதியோடு இருப்போமாக.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு கூட்டம்

கடந்த 09-04-13 செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  நடைபெற்ற, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கு எதிராக செயல்படுகிறார் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திடம் இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்தனர்.

மில்லத் கல்வி அறக்கட்டளையின் மறுப்பு செய்தி.



மரியாதைக்குரிய LBK News நிருபர் அவர்களுக்கு மில்லத் கல்வி அறக்கட்டளையின் சார்பாக அஸ்ஸலாமு அலைக்கும் .

நீங்கள் செய்யும் நல்ல செயலுக்கு அல்லாஹ் மறுமையில் நற் கூலி  தருவானாக , ஆமீன்.

தங்களது web site - ல் 11/04/2013 அன்று மில்லத் கல்வி அறக்கட்டளையை பற்றி 

எங்கே செல்கிறது மில்லத் கல்வி அறக்கட்டளை?

வியாழன், 11 ஏப்ரல், 2013

எங்கே செல்கிறது மில்லத் கல்வி அறக்கட்டளை?

எங்கே செல்கிறது மில்லத் கல்வி அறக்கட்டளை?
கடந்த சில வருடங்கலகவே இந்த மில்லத் கல்வி அறக்கட்டளை நமதூர் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில் கல்வி உதவித்தொகை மற்றும் மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் போன்ற சமுதாய பணிகளை துரிதமாக இன்றலவும் செய்து வருவது தாங்கள் அறிந்ததே!
இதன் மூலம் இன்று நமதூரின் ஏழை எளிய மாணவர்கள் வாழ்க்கைத்தரம்

நமதூர் குடும்பம் நிகழ்ச்சி வரமா? சாபமா?

நமதூர் குடும்பம் நிகழ்ச்சி வரமா? சாபமா?
கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்றுவந்த நமதூர் குடும்ப நிகழ்ச்சி அமீரகத்தில் மீண்டும் வரும் 26-4-2013 அன்று நடைபெற உள்ளது.
ஊருக்காக நம்முடைய சமுதாயத்திற்காக யார் நலவான காரியங்கள் செய்தாலும் அதற்கு உருதுணையாக இந்த இணையதளம் முன் நிற்கும். இந்த நிகழ்சியின் நலவான காரியங்கள் தாங்கள் அறிந்ததே! அதே சமயத்தி்ல் இதில் இருக்கும் குறைகளையும் நாம் சிந்தித்துபார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
காரணம் இந்த நிகழ்சிக்காக நமதூரில் இருந்து வந்து கலந்துக்கொள்ளும் சில குடும்பத்தில் உள்ளவர்கள் கடனாளியாக ஊர் செல்வதுதான் மிச்சமாக உள்ளது. 
நமதூர் ஏன் ஆத்து நோன்பு தடைசெய்யப்பட்டது என்பதை தாங்கள் அறிந்ததே! அதன் முடிவைப்பார்த்தால் இதன் தொடக்கம்போல தெரிகிறது. ஏன் இதை கூறுகிறோம் என்றால் நமது மார்க்கம் அங்கிகரிக்காத ஒன்றை ஆண்களும் பெண்களும் ஒரு இடத்தில் கூடி இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் ஈடு படுவது ஆகுமானதா? என்று நமது சுன்னத்துவல் ஜமாத்

தாருஸ்ஸலாம் தவ்ஹீது ஜமாஅத் மாதாந்திர அமர்வு


   33:66  يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا
33:66நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
33:67   وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا
33:67“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள.
33:68   رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
33:68“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்!

குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, அதனை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கவும், நமது ஊர் சமுதாய மக்கள் அனைவரும் அதன்பால் அழைக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவானதுதான் தாருஸ்ஸலாம் தவ்ஹீது ஜமாஅத் (லப்பைகுடிக்காடு). அதன்   துபை மையம். சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை   (05 -04– 2013)  மக்ரிப் தொழுகைக்கு பிறகு  நமது ஜமாஅத்தின் மாதாந்திர அமர்வு, டாலரெக்ஸ்  டெக்ஸ்டைல்  பின்புறம் உள்ள லாஸ்ட் ஹவர்

நான்கு வயது குழந்தை இஸ்லாம் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்வது......

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நான்கு வயது குழந்தையின் இஸ்லாமிய சிந்தைனையை பாரீர். நம் குழந்தைகளையும் இது போன்ற சிந்தைனையுடன் வளர்ப்போமாக.

வாழ்க்கையை சுவைத்து மகிழ்வோம்!


செவ்வாய், 9 ஏப்ரல், 2013

அபுதாபியில் நில நடுக்கம் மக்கள் பீதியில் ரோட்டில் வந்து நின்றார்கள்

அபுதாபியில் இன்று 09.04.2013  மாலை 4 மணியளவில் 4.5 ரிக்டர் அளவு கோள் நில நடுக்கம் உனரப்பட்டது. குறிப்பாக அபுதாபி மால் , நஜ்தா,  ஆகிய

திங்கள், 8 ஏப்ரல், 2013

பொறுப்பற்ற ஊடகங்கள் முஸ்லிம்களை தீய சக்திகளாக சித்தரிக்கின்றன! - கட்ஜு!


பொறுப்பற்ற ஊடக பணியின் மூலமாக ஊடகங்கள் முஸ்லிம் சமுதாயத்தை தீய சக்திகளாக சித்தரிப்பதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப்
இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
தி ஹிந்து பத்திரிகை சார்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட “Reporting Terror: How Sensitive is the media?” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்ஜு. 

என்ஜினீயர் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு



என்ஜினீயர் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு

என்ஜினீயரிங் சர்வீசஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.6–5–13 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

நமதூரும் நமது பாதுகாப்பும் !!!




கடந்த 03/04/2013 புதன் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் நமதூரில் உள்ள கோவில் எதிரில் இருந்த மின்கம்பத்தை அவ்வழியாக சென்ற கறும்பு டிராக்டர்  பக்கவாட்டில் இடித்து  கடைவீதி வரை உடைந்த மின் கம்பத்தை இழுத்து சென்ற‌து. இதனால் அந்த பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

நமதூரில் 12மணியிலிருந்து 3மணிவரை பவர்கட் என்பதால் இறைவனின் கிருபையால் பெரும் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் போனது படைத்த வல்ல நாயன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

இது போன்ற விபத்து சம்பவங்கள் வருடந்தோறும் அளவிற்க்கு அதிகமான கரும்பு கொண்டு செல்லும் டிராக்டர்களால் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்...(புகைப்படம் இணைப்பு)

அல்லாஹ்வின் ரஹ்மத் நேற்று  06.04.2013 இரவிலிருந்து இறங்கி கொண்டு இருந்தது. இதனால் மக்கள் பொறும் மகிழ்சியில் ஆழ்ந்தனர். ஒரு புறம் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பொறுவாறியாக பாதிப்புகள் இல்லை. இன்று 07.04.2013 காலையில் சரியாக 10.15 மணியில் இருந்து பலத்த இடியுடன் கூடிய மழை அமீரகத்தின் துபாய் , சார்ஜா, அபுதாபி மற்றும் பல நகரங்களில் மழை இறங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். இதில் வழக்கம் போல குழந்தைகளும் மழை தண்ணீரில் விளையாடி தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்.... 

சனி, 6 ஏப்ரல், 2013

நாளை யார் ?


லப்பைக்குடிக்காடு பேருராட்சியில் செயல் அலுவலர் மற்றும் பணி யாளர்களை துணைத் தலைவர் அலுவலகத்தில் உள்ளே வைத்து கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சி
குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சியின் தலைவராக சம்சூல்பஜ்ரியா உள்ளார்.
இவரது கணவர் ரஜினிபாருக் துணைத்தலைவராக உள்ளார்.செயல் அலுவலராக பரமேஸ் வரி பணியாற்றி வருகிறார்.
கதவை மூடினார்
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் செயல் அலுவலர் மற்றும்

வியாழன், 4 ஏப்ரல், 2013

காவல்துறையில் இளநிலை அறிக்கையாளர் பணி பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு 8ம்தேதி கடைசி நாள்

பெரம்பலூர்,: காவல்துறையில் காலியாக உள்ள இளநிலை அறிக்கையாளர் பணியிடத்திற்கு பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடைசி நாள் வரும் 8ம்தேதியாகும்.
தமிழ்நாடு அரசு காவல்துறை துணைத்தலைவர் சி.ஐ.டி சிறப்பு பிரிவு துறையில் இளநிலை அறிக்கையாளர் (ஜீனியர் ரிப்போட்டர்) காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்கு கல்வித்தகுதி பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சியுடன் ஸ்டெனோ கிராபர் ஆங்கிலம் சுருக்கெழுத்து

பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம்

பெரம்பலூர்,: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் ராம் காம்பளக்சில் இயங்கி வந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம், நெ.73, பழைய எல்ஐசி பில்டிங், 2வது தளத்தில் கடந்த 1 ம்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது அனைத்து வேலைவாய்ப்பு

வரதட்சனை missing ? திருமண நாகரீகம்....(வாசகர் பக்கம்)......1

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
asslamu alaikkum warah...

வரதட்சனை missing ?

எச்சரிக்கை.....

லெப்பைக்குடிக்காடு (சுன்னத்வல்) ஜமாஅத் பொறுப்பாளர்கள? அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் பொறுப்பு நிறைந்த பதவியில் இருப்பவர்கள் ஆவர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதலான கேள்விகளும் மறுமையில் உள்ளன.

புதன், 3 ஏப்ரல், 2013

திருமண நாகரீகம்....(வாசகர் பக்கம்)......


அல்லாஹுவின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
திருமண நாகரீகம்.
        லெப்பைக்குடிக்காடு நகர குடிமக்கள் பொருளாதாரத்திலும், நாகரீகத்திலும் மேம்பட்டுள்ளனர் என்பதை பறை சாற்றும் வகையில் இந்த கட்டுரை தொடுக்கப்பட்டுள்ளது. லெப்பைக்குடிக்காடு சுன்னத்வல் ஜமாஅத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும் திருமணங்களைப் பற்றிய இச்செய்திகள் மக்களறிய செய்யும் நோக்கோடு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையை, குடிமக்களின் பொது விமர்சனத்திற்கு விடுகின்றோம்

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நல்லா கவனிங்களேன்!

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். உலகளவில் ஆட்டிசம் குறைபாடால்

மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினர் ஏப். 9-ல் பெரம்பலூர் வருகை


பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினர் ஏப். 9-ம் தேதி வர உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்?


எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்?
எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?
இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை  கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக் கூடியவர்கள்.  கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள்.
மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை. பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள்.கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளவல்களை பற்றிய நல்ல செய்திகள்.
கெட்ட செய்திகளும் உண்டு.