அல்லாஹுவின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
திருமண நாகரீகம்.
லெப்பைக்குடிக்காடு நகர குடிமக்கள் பொருளாதாரத்திலும், நாகரீகத்திலும் மேம்பட்டுள்ளனர் என்பதை பறை சாற்றும் வகையில்
இந்த கட்டுரை தொடுக்கப்பட்டுள்ளது. லெப்பைக்குடிக்காடு சுன்னத்வல்
ஜமாஅத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும் திருமணங்களைப் பற்றிய இச்செய்திகள் மக்களறிய
செய்யும் நோக்கோடு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையை,
குடிமக்களின் பொது விமர்சனத்திற்கு
விடுகின்றோம்.
லெப்பைக்குடிக்காடு – சுன்னத்வல்ஜமாஅத்திருமணம்.
1.
முதல்நிச்சயம். (சின்னநிச்சயம்)
பெண்வீட்டாரின்சீர்வரிசை
1.
ஜாங்கிரி 5 கிலோ
2.
மைசூர்பாகு 5 கிலோ
3.
லட்டு 5
கிலோ
4.
பாதுஷா 5 கிலோ
5.
ஹல்வா 5
கிலோ
6.
காரச்சேவ் 5
கிலோ
7.
மிக்சர் 5
கிலொ
8.
ஆப்பிள் 5 கிலோ
9.
ஆரஞ்சு 5 கிலோ
10. சாத்துகுடி 5 கிலோ
11.
திராட்சை 5
கிலோ
12. மாம்பழம் 5 கிலோ
13. வாழைபழம் 5 கிலோ
குறைந்தது 13 முதல் 15 தட்டு வரை மாப்பிள்ளை வீட்டுக்கு
கொடுத்து விட வேண்டும். அதன் பின் கேட்டு பெறுபவரை பொருத்தது. இது அல்லாது, மதியம் நிகழ்வு நடப்பதாக இருப்பின், 40 பெண்மணிகள் பெண்வீட்டிற்கு வருவார்கள். அவர்களுக்கு மதியம் ஆட்டுக்கறி பிரியாணி, கோழிவருவல், முட்டை, இனிப்பு SWEET உட்பட உணவு வழங்கப்பட வேண்டும். அத்தோடு, 10 கிலோ இறைச்சி பிரியாணியுடன் சகல வஸ்துக்களுடன், மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்து விடவேண்டும்.
அதுவே மஃரிப் தொழுகையை உதரித் தள்ளி
விட்டு நடப்பதாக இருப்பின், 50-60 பெண்மணிகள் பெண் வீட்டிற்கு வருவார்கள்.
வந்தவர்களுக்கு ஒரு ஜாங்கிரி, 100 கிராம் மிக்சர், 4மேரி பிஸ்கட் கொண்ட பொட்டலத்துடன் ஒரு
டீ வழங்கப்பட வேண்டும். செலவு குறைந்த பட்சம் ரூ.25,000=
2.
பெரியபரிசம் (பெரியநிச்சயம்)
இதில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக கலந்துக் கொள்வார்கள்.
விருந்தினர் ஆண்கள் : 100 ஆண் வீட்டாரும், மேற்கு, கிழக்கு இரு ஜமாஅத்தாரும் பெண் வீட்டுக்கு அசருக்குப் பின் வருவார்கள். சுமார் 150-175 பேருக்கு 2 பிஸ்கட் பாக்கெட்டு வீதமும், பருக தேநீர், வெற்றிலை பாக்கு வழங்கப்படும்.
விருந்தினர்பெண்கள் : சீர்வரிசை.
1.படையான்(அரிசிவடகம்) 100 கிலோசுமார். (25 அன்னக்கூடை)
2.
பப்படம் 10
கிலோ
3.
இடிஆப்பம்மாவு 110
கிலோ
4.
ரவை 5
கிலோ
5.
வெள்ளைஉளுந்து 5
கிலோ
6.
கேழ்வரகுமாவு 5 கிலோ
7.
ஓட்ஸ் 5
கிலோ
8.
கோதுமைமாவு 5
கிலோ
9.
மைதாமாவு 5 கிலோ
10. சீனிசக்கரை 5 கிலோ
11.
சேமியா (பலரகம்) 15
கிலோ
12. மக்ரோனி (பலரகம்) 15
கிலோ
13. முட்டை 90 எண்ணம்
14. தேங்காய் 15 எண்ணம்
15. அரிசி (பச்சை) 100 கிலோ
16. அரிசி (புழுங்கல்) 100
கிலோ
17. ஜாங்கிரி 15 கிலோமூன்றுதட்டு
18. மைசூர்பாகு 15 கிலோமூன்றுதட்டு
19. லட்டு 15 கிலோமூன்றுதட்டு
20. பாதுஷா 15
கிலோமூன்றுதட்டு
21. ஹல்வா 5 கிலோஒருதட்டு
22. பூந்தி 15 கிலோமூன்றுதட்டு
23. காரச்சேவ் 15
கிலோமூன்றுதட்டு
24. மிக்சர் 15
கிலொமூன்றுதட்டு
25. ஆப்பிள் 15
கிலோமூன்றுதட்டு
26. ஆரஞ்சு 15
கிலோமூன்றுதட்டு
27. சாத்துகுடி 15 கிலோமூன்றுதட்டு
28. திராட்சை 15 கிலோமூன்றுதட்டு
29. மாம்பழம் 15 கிலோமூன்றுதட்டு
30. வாழைபழம் 15
கிலோமூன்றுதட்டு
31. கேசரி 5 கிலோ
32. தம்சேமியா 5 கிலோ
33. பாயாசம் 2 வாளி
34. உளுந்துவடை 200
எண்ணம்
35. 60கிலோ இறைச்சிபிரியாணியுடன், கோழிவருவல், 11 வகைஉபஉணவு
ஆகியவைகளை மாப்பிள்ளை வீட்டுக்கு
கொடுத்து விட வேண்டும். அன்று மஃரிப் தொழுகையை உதரித் தள்ளிவிட்டு, 150 பெண்மணிகள் பெண் வீட்டிற்கு வருவார்கள். வந்தவர்களுக்கு ஒரு ஜாங்கிரி,
100 கிராம் மிக்சர், 4 மேரி பிஸ்கட் கொண்ட பொட்டலத்துடன்
ஒரு தே நீர் மானமும் வழங்கப்பட வேண்டும். செலவு குறைந்த பட்சம் ரூ.1,25,000=
3.
இடைப்பட்ட நாளில் செலவு. நிச்சய நாளுக்கும் திருமண நாளுக்கும்
இடையில் வரும் பண்டிகை மெஹ்ராஜ், பராத், முஹர்ரம், இரண்டு பெரு நாட்கள் வருமாயின், எல்லா பண்டிகை நாட்களுக்கும்
50 பேர் சாப்பிட மதியம் பிரியாணி, மறு நாள் காலைக்கு பல கார உணவு, அனுப்பப் பட வேண்டும். செலவு40,000/-
4.
பீவீசோறு (திருமண முந்தைய இரவு) மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் அரிசி தவசிகளை பெண் வீட்டார் மாப்பிள்ளை
வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வாங்கிய அரிசி தவசிகளை வைத்து சுமார் 50 பேருக்கு இரவு உணவு அளிக்கப்பட வேண்டும். இது மாப்பிள்ளை வீட்டு சாப்பாடாக இருப்பதால், எளிமைகாணப்படும். செலவு 10,000/-
5.
திரு மண நாள் விருந்து செலவு இரு வீட்டருக்கு
பாதிபாதி என்று சொல்லப் பட்டாலும், மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் வாய்
கணக்கை மட்டுமே ஏற்று, அவர்கள் கேட்கும் தொகையை, பெண் வீட்டார் நாழிகை தாமதிக்காமல் தந்துவிட வேண்டும். செலவு சுமார் ரூ.2,50,000=
6.
பெண் அழைப்பு, திருமணத்திற்குப் பின் பெண்ணை மாப்பிள்ளையுடன்
அவர் வீட்டாருக்கு பெண்ணை அனுப்பாமல், பெண் அழைப்பு மற்றும் சம்பந்தம்
கலந்தல் என்ற சடங்கை நடத்திய பின்னரே, பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதற்காக பெண் அழைப்பு மற்றும் சம்பந்தம் கலந்தல் என்ற சடங்கை, 50 ஆண்களும், 50 பெண்களும் தனித் தனியாக, தொழுகை நேரத்தை பாழ் படுத்தி பெண்ணை அழைக்க வருவார்கள். அப்போது இனிப்பு, காரம், தே நீர் விருந்து அளிக்கப்பட வேண்டும். செலவு ரூ. 5,000/-
7.
மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு. பெண்ணை அழைக்க வந்த மாப்பிள்ளையை
கவரவப்படுத்த, தங்க ஆபரணம் சுமார் 56 கிராம், கை கடிகாரம், குடை, டார்ச்லைட், மிதி அணி, மேலாடை, கீழாடை ஆகியன மாப்பிள்ளைக்கு கட்டாய
அன்பளிப்பு வழங்கப்பட வேண்டும். செலவு ரூ. 2,25,000/-
8.
நல்லசோறு. முக்கியஸ்தர்கள் என்று கருதப் படும்
நபர்களை சுமார் 50 ஆண்களுக்கு குறிப்பாக மாப்பிள்ளைக்கு நெருக்கமானவர்களுக்கு VVIP விருந்து பல உப உணவுடன் விருந்து படைக்கப்பட வேண்டும். இது மதியமும், இரவும். செலவு 25,000/-
9.
நோன்பு சோறு. திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளில்
வரும் பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும், சுமார் 20பேர் சாப்பிடும் அளவுக்கு பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரியாணி சாப்பாடு கொடுத்து விட வேண்டும். இதற்கு மாறாக, வேலை சுமையை குறைத்து கருனை அடிப்படையில்
இரண்டு ஆண்டுகளுக்கான செலவை ரொக்கமாக மாப்பிள்ளை வீட்டுக்கு பணமாக செலுத்தினால் போதுமானது. செலவு.1,00,000/-
10.
ஆகமொத்தத்தில், திருமணத்தால் பெண்வீட்டார், மாப்பிள்ளையின் பெற்றோரை திருப்தி
செய்ய செய்யும் செலவு மொத்தம் ரூ.8,00,000/= சுமார்.
11.
பெண்ணுக்காக போடும் நகை, உடை, கட்டில், பீரோ, பாத்திரம், பர்னீச்சர் வகையறாக்களை இவற்றோடு
சேர்க்கவில்லை. அவைகள் தனியாக மாப்பிள்ளை வீட்டார் கேட்பதும், வழங்கு வதுன் இரு சாராரையும் சாரும்..
12. மணமகள் கற்பவதி ஆகிவிட்டால், பெண்ணின் பூரண செலவு மற்றும் சேவைகள் அனைத்தும் பெண் வீட்டார்
கட்டாயமாக சந்திக்கவேண்டும். அதோடு, கற்பகாலத்தில், 5ம் மாதத்தில் வலை காப்பு விருந்து பெரிய அளவில் 200 பேருக்காகிலும் பெண் வீட்டார் செய்திட வேண்டும். இந்த விருந்துக்கு விடை விருந்து செய்வதற்கு உதவும் வகையில்
மாப்பிள்ளை வீட்டாருக்கு செலவை ரொக்கமாக ரூ.30,000/-இந்த விருந்தில் பெண் வீட்டார்
வழங்கி விட வேண்டும். செலவு 60,000/=
13. பிரசவ செலவு அனைத்தையும், பெண்ணை பெற்றவர்கள் ஏற்க வேண்டும்.செலவு ரூ.10,000 முதல் ரூ.50,000/-
14.
மகபேறு நடந்த பின்னர், பிறந்த பிள்ளைக்கு என்று தங்க ஆபரணம் 48 முதல் 64 கிராம் வரை பெண் வீட்டார் அணிவிக்க
வேண்டும். செலவு ரூ 1,50,000 முதல் ரூ.2,00,000/-
15.
பிள்ளை பிறந்த 39ம் நாள், 40ம் நாள் விருந்துக்கு செலவுரூ.40,000/-
16.
பிறந்த பிள்ளை 3வயது வளரும் வரைக்குண்டான அனைத்து செலவு வழங்க ஒப்புக் கொண்ட பிறகும், பிள்ளை அத்தா வீட்டில் இருக்கையில் உபயோகப்படுத்தும் பொருள்களையும், தண்டவரியும் கொடுக்க வேண்டும். செலவு சாமானுக்கு மட்டும் செலவு 10,000/=
17. பிள்ளைக்காக அகீகா கொடுப்பதை மறந்துவிட்டு, ஆண் பிள்ளைக்கு கத்னா சுன்னத்து சீர் வரிசை என்றும், பெண் பிள்ளைக்கு காது குத்து சீர் வரிசை விருந்து என்றும் செய்வற்கு
செலவு ரூ 60,000/=
இந்த குறிப்புகள் பூர்த்தியாகமலிருக்கிறது. செய்திகள் சேகரிக்க, சேகரிக்க குறிப்புகள் வளர்ந்துக்
கொண்டே போகிறது. எனவெ, கிடைத்த இந்த குறிப்புகளை படித்தறிந்து, லெப்பைக்குடிக்காடு குடிமக்களின் நாகரீகம் காத்து நடக்க மக்களை
வெண்டுகின்றோம்.
வாழ்வு வாழ்வதற்கு .சம்பாதித்தவை செலவு செய்வதற்கு.
மின்னஞ்சல் மூலமாக
அபு ஹசன்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பதிலளிநீக்குasslamu alaikkum warah...
வரதட்சனை missing ?
எச்சரிக்கை.....
லெப்பைக்குடிக்காடு (சுன்னத்வல்) ஜமாஅத் பொறுப்பாளர்கள? அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் பொறுப்பு நிறைந்த பதவியில் இருப்பவர்கள் ஆவர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதலான கேள்விகளும் மறுமையில் உள்ளன.
பெருமானார் (ஸல்) முஸ்லிம்கள் அனைவரையும் எச்சரித்தார்கள்: "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களுடைய பொறுப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். (மக்கள்)தலைவர் ஒருவர், அவருடைய பொறுப்பின் கீழிருந்த அனைவரையும் குறித்து விசாரிக்கப் படுவார். ஒரு குடும்பத் தலைவன், அவனுடைய குடும்பத்தார் குறித்து விசாரிக்கப் படுவான். ஒரு மனைவி, அவளுடைய கணவனின் உடைமைகளையும் பிள்ளைகளையும் குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு (வேலைக்கார)அடிமை, அவனுடைய முதலாளியால் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரிக்கப் படுவான். இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; உங்களுடைய பொறுப்புகள் குறித்து விசாரிக்கப் படுவீர்கள்" (புகாரீ). "
.
வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 24:21
அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?
வாழ்வை சீரழிக்கும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நீங்கள் சிந்திக்க வேண்டாமா??
திருமணம் பணத்தினால் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் சீதனம் ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும்.
இன்ஷா அல்லாஹ்.....
இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)
BY
OLI MOHAMED ILYAS
ஏக இறைவனின் திருபயாரால் ...
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
சகோ : ஒலி அவர்களே நீங்கள் ....
என சொல்ல வரீங்க ............
ஏக இறைவனின் திருபயாரால் ...
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ள சகோதர்களே நான் சொல்ல கூடிய செய்தி உண்மை (சத்தியம்)
இது நபி வழிக்கு மாறானவை இப்படி செய்தால் அல்லாஹ் நம்மை நரகத்தில் போடுவான். (நம் அனைவரையும் அல்லாஹ் காபாத்த வேன்டும் .)இதுபோன்ற செயலை செய்யவே கூடாது .
நாம்தான் மணபெண்ணுக்கு மஹர் கொடுக்க வேன்டும். இஸ்லாம் இதை தான் கூறுகிறது .
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். திரு குரான் - 4:4
"மஹர் என்றால் என்ன?"
"திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய தொகை"
திருமண நாகரீகம்...என்று அநியாயம் செய்யாதீர்
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.- திரு குரான் 4:110.
. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
திரு குரான்-7:41
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.-திரு குரான் 8:25.
வரதட்சனை ஒழிப்பு குழு
Nanbar Abu Hasan,
பதிலளிநீக்குIdhai(Ungalai) Naan Vanmaiyaga Kandikkirean.
Manadhil Pattadhai Ellam Ippadi Ezhidhi Vittal Manasula Enna Periya Magaan Endu Nenappa?
Idhu Kuritthu Neenga Marumaiyil Visarikkappaduveergal Enbadhai Ninaivukoorungal.
Enadhu Thirumanamun Sunnathval Jama-ath Muraippadi Nitchayikkappatu Nadandha Thirumanamthan.
Neengal (Madathhanamaga) Mele Kooruyadhaipondru Endha Ondraiyum Naangal Seiya Villai.
Ninaivirkolga! Yaaro Oruvar Seyyum Thavarai Suttikkaatta Veandumenil Adhu Kuritthu Ungaladhu Abiprayatthai Sollungal. Ippadi Markam(Islam) Kuritthu Muzhuvadhum Therindha Medhavi Poandru Pesadheergal.
அபுல் ஹசன் சொன்னவற்றில் எதை தவறு என்று சொல்கிறீர்கள், மேல் கண்ட சம்பவங்கள் ஊரில் நடப்பதில்லை என்று சொல்ல வருகிறீர்களா, முதலில் தவறை சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை பெறுங்கள்.அவர் ஒன்றும் மார்க்கம் முழுவதும் தெரிந்த மேதாவிபோன்று பேசவில்லை, அவருக்கு தெரிந்தவற்றைதான் பேசியிருக்கின்றார்.
நீக்குPeyar theriyadha arivaali annanukk.
நீக்குOoril nadappadhi vidu unadha veettil enna nadakkiradhu?
Naan sonnadhu enadhu thirumanam sunnath jama-ath muraippadi nitchayikkappattu nadaipetra thirumanam adhil mele kurippittadhu poandru edhum nadaipera villai enbadhuthan.
Adhuttavar seyyum thavarai suttikkattum mun mudhalil unadhu thavarai sariseidhukol.
Peyar theriyadha arivaali annanukk.
நீக்குOoril nadappadhi vidu unadha veettil enna nadakkiradhu?
Naan sonnadhu enadhu thirumanam sunnath jama-ath muraippadi nitchayikkappattu nadaipetra thirumanam adhil mele kurippittadhu poandru edhum nadaipera villai enbadhuthan.
Adhuttavar seyyum thavarai suttikkattum mun mudhalil unadhu thavarai sariseidhukol.
சகோதரர்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ,
நீக்குசகோதரர் ஷா அவர்கள் மட்டும்தான் நமதூரில் திருமணம் முடித்தவர் போல பேசுகிறார்.உங்களைப் போல் ஒரு சில சகோதரர்கள் சீர் வரிசை எதுவும் வாங்காமல் திருமணம் செய்வது உண்மை தான்.இந்தக் கட்டுரை ஆசிரியர் அபுல் ஹசன் அவர்கள் ஊரில் நடக்கும் பெரும்பான்மை திருமணங்களை குறிப்பிட்டு கட்டுரை எழுதி உள்ளார்.இதில் எள்ளளவும் தவறு இல்லை.கொஞ்சம் விட்டுருக்க வாய்ய்ப்புகள் இருக்கே தவிர தவறு இருக்க வாய்ப்பில்லை.நீங்கள் வாங்க வில்லை என்றால் உங்களுக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் இல்லை.நீங்க ஒதுங்கிக வேண்டியது தான்.
என்னுடைய நண்பனின் சகோதரியுடைய திருமணம் ஓரிரு மாதத்தில் நடக்க இருக்கிறது.என்னிடம் போன் போட்டு பொலம்புரான் இவங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க போராய்ங்களா?? இல்ல சீர் வரிசையா கல்யாணம் பண்ணிக்க போராய்ங்களா என்று.அந்த அளவுக்கு லிஸ்ட் கொடுத்து இருக்காங்களாம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன திருமறையில் சூரா அந்நிஸா அத்தியாயம் 5லே குறிப்பிடும் பொழுது "நீங்கள் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து திருமணம் செய்து கொள்ள சொல்லுகிறான்.ஆனால் இவர்கள் பெண் வீட்டாரிடம் இருந்து பிச்சை எடுத்து சாப்பிடுகிறார்கள்.அவ்வாறு சாப்பிடுவோர் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்
உங்கள் சகோதரன் முஹம்மத்
சகோதரன் முஹம்மத்,
நீக்குஅபுல் ஹசன், லெப்பைக்குடிக்காடு சுன்னத்வல் ஜமாஅத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும் திருமணங்களைப் பற்றிய இச்செய்திகள் மக்களறிய செய்யும் நோக்கோடு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை. Endruthan Kooriullar.
Neengal Kooruvadhu Poal, ஊரில் நடக்கும் பெரும்பான்மை திருமணங்களை குறிப்பிட்டு கட்டுரை Ena Ezhudha Villai.
Aagave! Avaravar Seitha Nanmaikku Pagaramaga Allahvidam Adhu Poandru 10madangu Narkooli Undu. Aaanal, Theemaikku (Allah Paadhukaatthu Arul Purivaanaga)...
Mohammed, Mudhalil Ungaladhu Nanbaraiyum Avaradhu Veettinaraiyum Thiruttha Murpadungal (Ippadi Vetti Advise Pannuradha Vittutu).
Avar thanadhu Thangai Thirumanatthai Patri Ungalidam Pulabpugiraar Endral? Mele Kurippittadhu Poandru Yaaravadhu Varadhatchanai Keattal Neenga Yeanda Kodukka Sammadhikkireenga? Appadi Pattavargalidam Yean Sambandham Vatchukureenga?
Nengale Thavaru Seiya Thunai Poveergalam! Appuram Adha Keatkuraanunga, Idhai Keatkuraanung, Naanban Phone Poattu Polamburaan.... What is this nonsense?
If you want me to continue pls let me know.
//Neengal Kooruvadhu Poal, ஊரில் நடக்கும் பெரும்பான்மை திருமணங்களை குறிப்பிட்டு கட்டுரை Ena Ezhudha Villai.//
நீக்குஓ அப்படிஎன்றால் பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டாரால் பிடுங்கப் படும் சீர்வரிசை பற்றி நமதூர் ஜமாத்திற்கு தெரியாது என்று சொல்கின்றீர்களா??.பெண் வீட்டாரிடம் இருந்து சீர் வரிசை லொட்டு லொசுக்கு என வாங்கப் படுவது அனைத்தும் நமதூர் ஜமாத்திற்கு தெரிந்த விசயமே.அவர்கள் அதை கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள்.அப்படிஎன்றால் இது அவர்களின் மேற்ப்பார்வையில் நடக்கும் திருமணம் தானே.
//Mohammed, Mudhalil Ungaladhu Nanbaraiyum Avaradhu Veettinaraiyum Thiruttha Murpadungal (Ippadi Vetti Advise Pannuradha Vittutu).//
Avar thanadhu Thangai Thirumanatthai Patri Ungalidam Pulabpugiraar Endral? Mele Kurippittadhu Poandru Yaaravadhu Varadhatchanai Keattal Neenga Yeanda Kodukka Sammadhikkireenga? Appadi Pattavargalidam Yean Sambandham Vatchukureenga?
Nengale Thavaru Seiya Thunai Poveergalam! Appuram Adha Keatkuraanunga, Idhai Keatkuraanung, Naanban Phone Poattu Polamburaan.... What is this nonsense?//
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் சகோதரர்.ஊருக்கு அறிவுரை சொல்லும் பல பேர் தங்கள் திருமணத்தை மார்க்க அடிப்படையில் செய்வதில்லை.நானே ஏன் கண் கூடாக இதை பார்த்திருக்கிறேன்.ஆனால் நாம் இங்கு வருத்தப் படுவதற்கு காரணம் தொப்பிக்கு அறிவிப்பு பலகை வைத்து இவர்கள் மட்டும் தான் தொழுக வரவேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கும் நமதூர் ஜமாத அல்லாஹ்வும் அவனது தூததரும் கற்று தராத ஒரு மாற்று மத கலாசாரத்தை பின்பற்றி நடக்கும் திருமணதிற்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து திருமணம் முடித்து வைப்பது தான் நம்மை ஆதங்கப் பட வைக்கிறது.
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தலையாய பணியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மீது கடமையாக்கி வைத்திருக்கிறான்.நாம் செய்யும் ஒரு நன்மைக்கு 10 மடங்கு அதிகமான நன்மை அல்லாஹ் நமக்கு வழங்குவான் என தெரிந்த உங்களுக்கு
நாம் சரியாக இருந்தால் மட்டும் போதும் பிறர் எவ்வாறு போனால் நமக்கு என்ன என்று நினைத்து ஒரு தீமை நடக்கும் பொழுது அதை தடுத்து நிறுத்தாமல் ஒதுங்கி நிற்பதும் அல்லாஹ்விடத்திலே குற்றம் தான் என்ற உண்மை உங்களுக்கு தெரியாமல் போனதன் மர்மம் என்ன சகோதரர்.
உங்கள் சகோதரன் முஹம்மத்
//If you want me to continue pls let me know.//
நீக்குஉங்களுடன் விவாதம் தொடர்கிறேன் என்று எவ்வாறு உங்களுக்கு தெரிவிப்பது என்று எனக்கு தெரியவில்லை.comment follow up பாக்ஸ் வைக்க சொல்லி நான் ஏற்கனவே இந்த தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து விட்டேன்.யாரெல்லாம் புதியதாக கமெண்ட் பதிகிரார்களோ அவை தெரியும் படி வைத்தால் நாம் வாதம் செய்ய ஏதுவாக இருக்கும்.இன்ஷா அல்லாஹ் அதற்க்குண்டான முயற்சியை தல நிர்வாகம் செய்ய வேண்டும்.
உங்கள் சகோதரன் முஹம்மத்
சம்பாதித்த பணத்தை சரியான வழியில் செலவிட வேண்டும்.வாழ்வு வாழ்வதற்கு .சம்பாதித்தவை செலவு செய்வதற்கு
பதிலளிநீக்குஏக இறைவனின் திருபயாரால் ...
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
சகோ : அபு ஹசன் அவர்களே நீங்கள்
எழுதியவை உண்மையான நிகழ்ச்சிகளா ??
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் அபு ஹசன் அவர்களே நிங்கள் சொன்ன மேற்கண்ட கட்டுரயில் சில வட்ரை நான் முரண்படுகிறேன்.
பதிலளிநீக்கு1. ஜமாஅத் என்பது நாம் நம்மில் ஒருவரை தேர்ந்தேடுத்து நம்மால் கொண்டு வர பட்ட கொள்கைகலை செயல் படுத்துவது.
2.ஆக நாம் அதை பின்பட்ற படுகிருமா என்னபது கேள்வி.
3. செலவு விசயம்! உங்கள் நண்பர் தனது தங்கை திருமணதிற்காக ரூ - 8,00,000/-யே செலவு செய்ய நிர்பந்திகபட்டாள் அதை அவர் (அந்த திருமண சம்மந்தத்தை) தவிர்த்து கொள்ள வேண்டும்.
4. இல்லை அவர் செலவு செய்ய முன் வந்தாள் அவர் தன் தங்கைகு ஒரு வசதியான வாழ்க்கையே ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறார். அந்த செலவு (வீண் வேரையும் செய்யாமல்) செய்தால் தவறு கிடையாது.இது அவர் அவர் விருப்பம்.
ஒரு மனிதன் தான் சம்பாதித்த ஒன்றை உரிய முறையயில் ஜகாத் கொடுத்து மிதமுள்ள சொத்தை ஹலாலான முரெயில் செலவு செய்வது எந்த விதத்திலும் தவறு இல்லை.
இந்த மாதிரி ஒரு திருமண நாகரீகத்தை .
பதிலளிநீக்குகாரி துப்புங்க நண்பர்களே, சகோதர்களே
(தூப் தூப் தூப் )
ஏக இறைவனின் திருபயாரால் ...
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ள சகோதர்களே நான் சொல்ல கூடிய செய்தி உண்மை (சத்தியம்)
இது நபி வழிக்கு மாறானவை இப்படி செய்தால் அல்லாஹ் நம்மை நரகத்தில் போடுவான். (நம் அனைவரையும் அல்லாஹ் காபாத்த வேன்டும் .)இதுபோன்ற செயலை செய்யவே கூடாது .
நாம்தான் மணபெண்ணுக்கு மஹர் கொடுக்க வேன்டும். இஸ்லாம் இதை தான் கூறுகிறது .
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். திரு குரான் - 4:4
"மஹர் என்றால் என்ன?"
"திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய தொகை"
திருமண நாகரீகம்...என்று அநியாயம் செய்யாதீர்
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.- திரு குரான் 4:110.
. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
திரு குரான்-7:41
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.-திரு குரான் 8:25.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் அபு ஹசன் அவர்களே நிங்கள் சொன்ன மேற்கண்ட கட்டுரயில் சில வட்ரை நான் முரண்படுகிறேன்.
பதிலளிநீக்கு1. ஜமாஅத் என்பது நாம் நம்மில் ஒருவரை தேர்ந்தேடுத்து நம்மால் கொண்டு வர பட்ட கொள்கைகலை செயல் படுத்துவது.
2.ஆக நாம் அதை பின்பட்ற படுகிருமா என்னபது கேள்வி.
3. செலவு விசயம்! உங்கள் நண்பர் தனது தங்கை திருமணதிற்காக ரூ - 8,00,000/-யே செலவு செய்ய நிர்பந்திகபட்டாள் அதை அவர் (அந்த திருமண சம்மந்தத்தை) தவிர்த்து கொள்ள வேண்டும்.
4. இல்லை அவர் செலவு செய்ய முன் வந்தாள் அவர் தன் தங்கைகு ஒரு வசதியான வாழ்க்கையே ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறார். அந்த செலவு (வீண் வேரையும் செய்யாமல்) செய்தால் தவறு கிடையாது.இது அவர் அவர் விருப்பம்.
ஒரு மனிதன் தான் சம்பாதித்த ஒன்றை உரிய முறையயில் ஜகாத் கொடுத்து மிதமுள்ள சொத்தை ஹலாலான முரெயில் செலவு செய்வது எந்த விதத்திலும் தவறு இல்லை.
பதிலளிநீக்கு2:215 يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
2:219 يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ
இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
8:3 الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
8:3. அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
Ponkada lousnkalaaaaaaa.....
பதிலளிநீக்கு