Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு கூட்டம்

கடந்த 09-04-13 செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  நடைபெற்ற, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கு எதிராக செயல்படுகிறார் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திடம் இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்தனர்.

வி.களத்தூரில் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த 22 /01/2013 அன்று வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான  இஸ்லாமியர்களை 72 பேர் கைது செய்தும் 28 பேர் மீது FIR பதிவு செய்து,  
கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் முதலான கடும் குற்றப் பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்தனர், இந்துக்கள் தரப்பில் ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

வி.களத்தூர் இஸ்லாமியர் அனைவரும் மனித உரிமைஆணையம் பரிந்துரை செய்தததை அமல் படுத்த வேண்டும் என ஒருமனதாக கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக‌ பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ,
மாணவிகளில் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற 15 மாணவ,
மாணவிகளுக்கு ரூ. 40 ஆயிரம் பரிசுத் தொகையும், 11-ம் வகுப்பு பயிலும் 331 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2012 – 2013-ம் ஆண்டில் விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக கூட்டம் சலசலப்புடன்  நிறைவு  அடைந்தது.

குறிப்பு :
1. இந்த கூட்டத்தில் வழக்கம் போல் நமது சுன்னத்துவல் ஜமாத் கலந்து கொள்ள வில்லை.
2. ஜமாத் ஆதரவோடு வெற்றி பெற்ற நமது பேரூராட்சி து.தலைவர் அந்த கூட்டத்தில் கூறிய கருத்தினால் மற்ற ஊர் ஜமாத்தினால் கடும் கண்டத்தை பெற்றார்.

நன்றி :LBK TNTJ

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்
    எவ்வளவுஇருந்தாலும் தொடர்ந்து எழுதும் லப்பைகுடிகாடு நியூஸ்
    ஒரே குழப்பமா இருக்கு என்ன என்றால்
    தவ்ஹீத் ஜமாத் யார் நடத்துறாங்க
    தாருஸ்ஸலாம் யார் நடத்துறாங்க
    ஏன் தனியா பள்ளி கட்டினார்கள்
    தாருஸ்ஸலாம் பதவியில் உள்ளவர்கள்
    அந்த 7 பேர் யார் ? குழப்பவாதி யார்? என்றும்
    மக்களுக்கு தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.
    நன்றி.

    சபியுல்லா
    துபாய்

    பதிலளிநீக்கு
  2. அண்ணன் சபியுல்லா... அறிவுக்கு ஏற்றவாறு கேள்வி கேலுங்க ஊரு பலா கலுவாதிங்க..............அவன் என்ன செய்றான் இவன் என்ன செய்றான் என்று கேட்காதிங்க.................

    பதிலளிநீக்கு