Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 27 ஏப்ரல், 2013

உலக மலேரியா தினம்‏...


மலேரியாவினால் ஏற்படும் பாதிப்பை விளக்கவும் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் ஏப்ரல்-25 ஆம் தேதி ‘உலக மலேரியா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்கென முழக்கங்கங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ஐ.நா அமைப்பு. அதன்படி இந்த ஆண்டு(2013) “மலேரியாவினை தோற்கடிப்போம்! எதிர்காலத்தை முதலீடு செய்வோம்!” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆயுதங்கள் தயாரிப்பில் நாடுகள் போட்டி போட்டு வரும் நேரத்தில் சிறிய அளவிலான உருவம் கொண்ட மலேரியா நோயை உண்டாக்கும் கொசுவை ஒழிக்க இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் விளைவுதான் இன்று ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் பாதிப்புகள்.
தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர் சாக்கடை போன்றவை மூலம் நாம் கொசு உற்பத்தியை பெருக்கி வருகிறோம். மேலும் அழுகும் பொருட்களின் அழிப்பு தன்மையில் நாம் காட்டும் மெத்தனம் இவையாவும் கொசுவை உருவாக்கும் மூலதனமாக அமைந்து விடுகிறது.
மலேரியா நோய், கொசுக்கள் மூலம் பரவுகிறது என்பதை ரொனால்டு ரோஸ் என்ற பிரிட்டன் டாக்டர் கண்டுபிடித்தார். மருத்துவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக இவர் 1902 இல் நோபல் பரிசு பெற்றார். அனோபிலஸ் வகை பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன. இந்த நோய்  தொற்று நோய் வகையை சேர்ந்தது. ஆகவே இதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் மரணத்தை தழுவ நேரிடும்.
மலேரியாவின் நோய் அறிகுறிகள்: காய்ச்சல், அதிகமான குளிர், வியர்த்துக் கொட்டுதல், தசை வலிகள், தலைவலி, சில நேரங்களில் வாந்தியும் பேதியுமாதல், சிறு நீரகம் செயலிழத்தல், வலிப்பு, உணர்ச்சி இழந்த ஆழ்ந்த உறக்க நிலை (கோமா) ஆகியவை ஏற்படக்கூடும்.
கொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும்.
இந்நோயினால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 35 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் பேர் மரணமடைகின்றனர். இதில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என யுனிசெப் நிறுவனம் கூறுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இறக்கும் 5 குழந்தைகளில் ஒன்று மலேரியாவால்தான் இறக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, கானா, கென்யா, ஜாம்பியா மொசம்பிக் உள்ளிட்ட நாடுகள் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மலேரியா நோயினை உண்டாக்கும் கொசுவானது வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் உற்பத்தியாகின்றன.
இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் உலக அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்திலும் மலேரியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்படுகிறன. மேலும் நீர் தேங்கும் வகையில் வீடு மற்றும் பொது இடங்களில் உள்ள டயர்கள், தேங்காய் ஓடுகள், காலி டப்பாக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன.
இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியன் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், மற்றொரு புள்ளி விவரம், இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் மலேரியா காய்ச்சலால் இறக்கிறார்கள் என்கிறது.
இந்தியாவில் ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் , மேற்குவங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சேரி மற்றும் குடிசை வாழ் பகுதிமக்களுக்கு மலேரியா தாக்க்கம் அதிகம். இந்தியாவில் மலேரியா ஒழிக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென பல கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது.
கொசு மற்றும் மலேரியாவை ஒழிக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா ஒழிக்கும் பணி திருப்தி அளிக்கிறது அந்த அமைப்பு. உலக வங்கி மூலம் இது வரை 200 மில்லியனுக்கும் அதிகமான கொசு வலைகள் உலக வங்கி நிதி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக தயாரிக்க தற்போதும் நிதி அளிக்க ஐ.நா., வின் வேண்டுகோளை ஏற்று முன்வந்துள்ளது உலக வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
கொசுக்களைத் தடுக்கும் ஏற்பாடுகளையும், மலேரியாவைத் தடுக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வதின் மூலம் மட்டுமே மலேரியாவிலிருந்து காப்பற்றிக் கொள்ள இயலும்.
ஆகவே மலேரியா குறித்த விழிப்புணர்வை பெறுவதோடு மட்டுமல்லாமல் நம்மால் முடிந்த அளவு அதனைக் குறித்த விழிப்புணர்வை மற்றவர்களிடமும் நாம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். மலேரியாவினை தோற்கடிப்போம், ஆரோக்கியமான எதிர்காலத்தை முதலீடு செய்வோம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக