Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 6 ஏப்ரல், 2013

நாளை யார் ?


லப்பைக்குடிக்காடு பேருராட்சியில் செயல் அலுவலர் மற்றும் பணி யாளர்களை துணைத் தலைவர் அலுவலகத்தில் உள்ளே வைத்து கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சி
குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சியின் தலைவராக சம்சூல்பஜ்ரியா உள்ளார்.
இவரது கணவர் ரஜினிபாருக் துணைத்தலைவராக உள்ளார்.செயல் அலுவலராக பரமேஸ் வரி பணியாற்றி வருகிறார்.
கதவை மூடினார்
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் செயல் அலுவலர் மற்றும்
பணியாளர்களை துணைத்தலைவர் அலுவலகத் தினுள் வைத்து கதவை மூடி யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்காததால் இது குறித்து செயல் அலுவலர் பரமேஸ்வரி காவல் துறைக்கு புகார் தெரிவித்தார்.
விடுவிப்பு
சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் துணைத்தலைவரிடம் மேற் கொண்ட விசாரணையின் அடிப்படையில் தாளிட்ட கதவு திறக்கப்பட்டு செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து செயல் அலு வலர் பரமேஸ்வரியிடம் கேட்ட போது துணைத் தலைவர் கடந்த ஒரு மாதமாக அலுவலகத்தில் அனைத்து அறைகளையும் பூட்டி சாவியை வைத்துக் கொள்கி றார். அலுவலக ரெக்கார்டு களையும் தன் பொறுப்பில் வைத்து கொண்டு முழுமை யாக செயல்பட விடுவதில்லை. தனது மனைவி தலைவராக இருப்பதால் துணைத் தலைவரான இவர் தலைவர் அறையில் அமர்ந்து கொண்டு அலுவலக விஷயங்களில் தலையிடுகிறார்.
கோட்டாட்சியர் ஆய்வு
இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு தேசிய அடையாள அட்டை தயா ரிப்பு பணியை துரிதபடுத்த வேண்டும் என்று கூறினார்
இதனையடுத்து பழுதாகி இருந்த இன்வெர்ட்டரை சரி செய்ய ஆட்கள் வந்திருந்தனர். இதற்காக இன்வெர்ட்டர் இருந்த கூட்ட அரங்கின் சாவியை கேட்க சென்ற அலுவலக பெண் ஊழியரை திட்டியும் சாவியை தர முடியாது என்று கூறி விட்டார்.
உள்பக்கமாக தாளிட்டார்
இதை தொடர்ந்து தலைவர் அறையில் துணைத்தலைவர் அமரக்கூடாது அலுவலகம் என் பொறுப்பில் தான் செயல் படவேண்டும் என்று கூறி னேன். அனைத்து செயல்பாடுகளுக்கும் செயல் அலுவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி தலைவர் அறையை விட்டு துணைத் தலைவரை வெளியேறுமாறு கூறி அந்த அறையை பூட்டச்சென்றேன்.
உடனே துணைத் தலைவர் ரஜினி பாருக் என்னிடம் மிரட்டல் தொணியில் பேசினார். மேலும் அலுவலக கேட்டை உள்பக்கமாக தாளிட்டு அனைத்து பணி யாளர்களையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.
உயர் அதிகாரிகளுக்கு புகார்
இது குறித்து நான் மாவட்ட எஸ்பிக்கு போன் மூலம் புகார் செய்தேன். உடனடியாக மங்களமேடு போலீசார் வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.பின்னரே எங்களை வெளி யேற துணைத்தலைவர் அனு மதித்தார். இது குறித்து நான் என் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்து உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து துணைத் தலைவர் ரஜினிபாரூக்கிடம் கேட்டபோது அது போல் ஒன்றும் நடைபெறவில்லை என்று கூறினார்.
லப்பைகுடிக்காடு பேரு ராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர் களை துணைத் தலைவர் உள்ளே வைத்து கதவை மூடிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 கருத்துகள்:



  1. என்னதான் நடக்குது ஊருக்குள்ள !

    பதிலளிநீக்கு
  2. திருத்தும் அவர் ரஜினி பாருக் இல்ல முஹம்மது பாருக்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. dei unakku mohamed farook sonna yarunnu ketpa rajni farook sonnathala purinchi entha kelvi ketkura

      நீக்கு
  3. Assalamu alaikum meruku jamathin atharavu petra peruratchi thalaivarai vaimaya kandikkiran. Oru thalaivar ku undana thiramai,mariyathai,pengal edathil nadanthu kollum kanniyam patri theriya tha evarai merukku jamath uda nadi yaga evatrai evaruku karpithu tharu maru way tha nai udan kettu kolkiran. Men melum evaral samutha yat thirukum oorukum entha oru pathippum ella mal par thu kolvathu merku jamathin kadamai.(B.D.SHAHUL HAMEED 10 WARD COUNCILER)

    பதிலளிநீக்கு