Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....
lbk islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lbk islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2016

கண்கலங்க வைத்த ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த வாசகம்!!!


யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!


என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா !

புதன், 16 மார்ச், 2016

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

மனிதன் விரும்பாத ஒரு விஷயம்பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன்தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை

வியாழன், 10 மார்ச், 2016

ராஜாதிராஜன்!


ராஜாதிராஜன்! – MSAH

“அல் மலிக்” என்று அல்லாஹ்வைக் குறிக்கும் வார்த்தை திருக்குர்ஆனில் 11 இடங்களில் வருகிறது. “மலீக்” என்ற வார்த்தை ஒரு தடவை வருகிறது.
அல் மலிக், அல் மாலிக், மலீக் ஆகிய மூன்று பதங்களுமே ஒரே அர்த்தத்தையே அளிக்கின்றன. அதாவது, ‘முல்க்’கை உடையவன். ‘முல்க்’ என்ற வார்த்தை ஆற்றல், அதிகாரம், உரிமை, சொந்தம், அடக்குதல் என்று பல பொருள்களைக் கொண்டது.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 3

"என் மக்களே! நீங்கள் எதன் பக்கம் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்று தெரிந்துதான் ஒப்புக்கொள்கிறீர்களா? இவர் அல்லாஹ்வுடைய தூதர். இவர்களை அழைத்து சென்றால். ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்க எதிர்க்க வேண்டி வரும். கருப்பர் வெள்ளையர் என்றில்லாமல் அனைவரையும் எங்களை துண்டாட தயாரா என்று நீங்கள் அழைப்பது போன்ற காரியத்தை கையில் எடுக்கின்றீர்கள்.”

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 2

மதினாவாசிகளில் கஅப் (ரலி) பெசுகின்றார்.
செய்வோமா வேண்டாமா? என்னமாதிரி கஷ்டம் வரும். இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் அங்கு வந்திருந்த மதினாவாசிகள். "சத்தியத்தை ஏற்றுக் கொண்டோம் அதற்காக எதையும் இழப்போம் அவ்வளவுதான்" என்ற  மன நிலை.
 ”அல்லாஹ்வுடைய தூதரே! எங்களிடத்தில் என்ன ஒப்பந்தம் எதிர்பார்க்குறீங்க?”

சனி, 27 பிப்ரவரி, 2016

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் ...



அன்சாரிகள் என்று நாம் போற்றும், நேசிக்கும் ஓர் சமூகத்தை வரலாறு பதிவு செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்ட இடம்தான் அகபா. மக்காவிற்கு வெளியே உள்ள பள்ளத்தாக்கு பகுதி. படிக்கின்ற ஈமானிய உள்ளங்கள் அந்த 70 பேரில் நாம் ஒருவராக இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கமடைய செய்த நிகழ்வுதான் அகபா. எப்படி ஏக்கம் இல்லாமல் போகும் நபிகளாரிடத்தில் (ஸல்) சுவனத்தை வாக்குறுதியாக பெற்றவர்களாயிற்றே. வேறு என்ன வேண்டும் இந்த உலகில் இறையடியானுக்கு?

திங்கள், 15 பிப்ரவரி, 2016

சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி



சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி
நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா [ரலி] அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலி]மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா [ரலி] அவர்கள் கேட்டவுடன்.
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூரினார்.
சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்.

திங்கள், 18 ஜனவரி, 2016

"இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்" நூல் ஓர் பார்வை

"இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்" சஹீத். செய்யத் குதுப் அவர்களின் சிந்தனை நூலான இந்நூலை தமிழில் மு.குலாம் முஹம்மது அவர்களின் எளிய மொழிபெயர்ப்புடன் திண்ணை தோழர்கள் பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்துள்ளது. 288 பக்கம் கொண்ட இந்நூலின் விலை ரூ. 90 தான். இந்த புரட்சிக்கர கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் குறைந்த விலையில் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நன்று.

இந்நூலை இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு நூலாக கருதுகிறேன். ஏனென்றால் இந்நூலை எழுதியதற்காகவே சஹீத்.செய்யத் குதுப் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலி நீதிமன்ற விசாரணையின் மூலம். அந்த அளவிற்கு இஸ்லாத்தின் எதிரிகளை, அநீதியான ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்துள்ளது இந்நூல்.

இவர்களிடமிருந்து இறைவன் எம்மைப் பாதுகாப்பானாக!!

Image result for islam
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஜாஹிதீனாக வெளிக்கிளம்பிச் செல்கின்ற கணத்திலேயே இந்த உலகை வெற்றி கொண்டு விட்டீர்கள். முஸ்லிம்கள் என்றும் உலமாக்கள் என்றும் தலைவர்கள் என்றும் தம்மைக் காட்டிக் கொண்டு ஆதாரங்களையும், வழிகாட்டல்களையும் திரிவு படுத்தி மக்களை வழிகெடுத்து அல்லாஹ்வின் பாதையில் செல்வதிலிருந்து தடுப்பவர்களையும் நீங்கள் வெற்றி கொண்டுவிட்டீர்கள். 

     அத்தகையோரைப்பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனிலே "உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான் (9:47). என்று கூறுகின்றான். 

செவ்வாய், 5 ஜனவரி, 2016

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்! – MSAH
சமூகத்தில் மிக முக்கிய பிரிவினர்தாம் இளைஞர்கள். அந்த இளைஞர்களின் கரங்களில்தான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும், பாதுகாப்பும் அடங்கியிருக்கின்றன. ஒரு நல்ல சமூகத்தின் அடிப்படை அம்சம் என்பதே இளைஞர்கள்தாம்.
இளைஞர்களின் ஆற்றல், அறிவு, நேரம் போன்றவை ஆக்கபூர்வமான பாதையில் செலவழிக்கப்பட்டு அவர்களும், அவர்கள் மூலம் சமூகமும் பலனடைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித் தந்த பாதை.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

எயிட்ஸைத் தூரமாக்கும் இஸ்லாம்..!


இன்று காணப்படுகின்ற ஆட்கொல்லி நோய்களில் பிரதானமான ஒன்றாக எயிட்ஸ் நோய் கருதப்படுகின்றது. தீர்க்கமான நோய் நிவாரணி இன்னும் கண்டறியப்படாத நிலையில், அந்த நோய் ஏற்படுவதினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே அதற்கான சரியான பரிகாரமாகும். 

எயிட்ஸ் ஏற்படுகின்ற வழிமுறைகளில் முக்கியமான ஒன்றின் காரணமாகவும், அந்நோயின் வெளிப்படுகையின் தன்மை காரணமாகவும், அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்கி வைக்கின்றதொரு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்!!!

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள் ...

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
 செங்கம் எஸ்.அன்வர்ஷா
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி.

o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!

o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!

உங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள் ...


இன்றைய கால கட்டத்தில் மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள் தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர்.

வெளிப்படையான உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

தலைசிறந்த பாவமன்னிப்பு பிரார்த்தனை (செய்யிதுல் இஸ்திக்ஃபார்)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لآ اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَاْ عَبْدُكَ وَاَنَاْ عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُلَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَمنْبِىْ فَا اغْفِرْلِى فَاِنَّه لَا يَغْفِرُ الذَّنُوْبَ اِلَّا اَنْتَ

வெள்ளி, 17 ஜூலை, 2015

“நீ இப்படி அழுதால், இந்த முஹம்மதும் பெருநாளைக் கொண்டாட மாட்டார்”

மதீனா வீதிகளில் ஈத் எனும் பெருநாள் தொழுகைக்காக செல்லும் நபித்தோழர்களின் முழக்கம். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி… புத்தாடைகள்…. நறுமணங்கள்… எங்கும் உற்சாகப் பெருக்கு… முஹம்மது நபியவர்களும் தம் தோழர்களுடன் மதீனா பள்ளிவாசலை நோக்கி, இறைவனை புகழ்ந்தவாறு சென்று கொண்டிருக்க…. ஒரு சிறுவன் மட்டும் வீதியின் ஓரத்தில் தன் முகத்தை கைகளில் புதைத்தவாறு அழுதுகொண்டிருந்தான்.
நபியவர்கள் நின்றார். மற்றத் தோழர்களை, “நீங்கள் தொடருங்கள். நான் பின்பு உங்களை சந்திக்கிறேன்” என்றார். அழுத பாலகனின் அருகில் வந்து, அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஏன் அழுகிறாய் குழந்தாய்?’ என பரிவாகக் கேட்டார்.
“இன்று பெருநாள். எல்லா குழந்தைகளும் தம்

ஞாயிறு, 21 ஜூன், 2015

ஓ…மானிடனே,என்னை தெரிகிறதா?

இறை மாதங்கள் 11க்கு பின்னர் உன்னை காண வந்திருக்கும் ரமலான் நான் தான்.
கடந்த மாதங்களில் நீ யாரையெல்லாம் நேசித்தாயோ?அது எனக்கு தெரியாது?
ஆனால் இம்மாதம் முழுவதும் என்னை நீ நேசித்தால்..நான் உன் மண்ணறையிலிருந்து மறுமை வரை உன்னை விட்டும் பிரியாமல் உன் நலன் பேண உன்னையும்,என்னையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்றாடுவேன்.

பொறாமைப்படுபவர்கள் இறை அருளுக்கு எதிரானவர்கள் ...

பொறாமை என்பது பெரும்பாவங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு விதமான "மனநோய்". சக மனிதருக்கு கிடைத்திடும் வசதி வாய்ப்புகள், திறமை, பணம், அந்தஸ்து, பாராட்டுகள் ஆகியவற்றைக் காணும் போது, அவர் மீது பொறாமைப்பட்டு அவைகளை இல்லாமல் ஆக்குவதற்கு அந்த மனிதனைப் பற்றி கேவலமாகவும், இழிவாகவும் பேசி அவற்றை பறிப்பதற்குண்டான செயல்களில் ஈடுபடக்கூடிய மனோ நிலை மனிதனிடத்தில் இன்று மிக அதிகமாக காணப்படுகிறது. தன்னை விட அடுத்தவன் சிறப்புகளை, உயர்வுகளை அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.

வெள்ளி, 19 ஜூன், 2015

நபிகளாரின் பொன்மொழியை உண்மைப்படுத்திய விஞ்ஞானி!


நபிகளாரின் பொன்மொழியை உண்மைப்படுத்திய விஞ்ஞானி!

ஆய்வகங்களில் பெண்களால் தொல்லை:
- உண்மையை உடைத்துச் சொன்ன விஞ்ஞானி!
(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!)

புதன், 17 ஜூன், 2015

அஹ்லன் ரமலான்….! அஹ்லன்…! – முஹம்மது ஃபைஸ்

சம்பவம் ஒன்று:

அவர் ஒரு முதியவர். வாழ்வின் எல்லையில் நிற்பவர். மகப்பேறு இல்லாதவர். ஆனால் அதற்காக பரிதவிப்பவர். சோகம் என்னவெனில் அவரின் மனைவியும் மலட்டுத் தன்மை கொண்டவர். இந்த நிலையில் யார்தான் இவர்களுக்கு பிள்ளை வரம் கொடுக்க முடியும்?