Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 16 மார்ச், 2016

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

மனிதன் விரும்பாத ஒரு விஷயம்பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன்தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை
நெஞ்சுவலியை லேசாக உணரும்போதோபயணம் செய்யும் வாகனம் தடுமாறும்போதோ மரண பயம் தொற்றிக்கொள்கின்றது.  பிரபலமான மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரிடம்,
"மரணத்தை பற்றியும் அதன் பிறகுள்ள வாழ்வை பற்றியும் என்ன நினைக்கிறீங்க?"
"ஒன்றுமில்லை"
சில நேரங்களில் மனிதன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறான்கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவிஷயத்தை தவிரஇந்த எழுத்தாளரை பாருங்க இவருடைய அறிவு ஃபேமஸைகாசு பணத்தை வாங்கி தந்ததே தவிரவெறொன்றும் உபயோகமில்லைஉண்மையில் இது அறிவே இல்லைஇவர்கள்தான், "எங்களுக்கு அறிவு இருந்திருந்தால்இப்படி கைசேதப் பட மாட்டோம்என்று மறுமையில் புலம்புவார்கள்நாம் பல நேரங்களில் இப்படி இருக்கின்றோமா?
வாழ்வை நம் மனம் விரும்பும் அளவுக்குநம் மனம் லயிக்கும் அளவுக்கு மரணத்தை ஏன் விரும்பவில்லை?. மரணத்தைநோக்கிய விஷயத்தில் ஏன் நம் மனம் லயிக்கவில்லைவாழ்வைமரணத்தை பற்றி எத்தனையோகருத்துக்கள் தத்துவங்கள்முன் வைக்கப்பட்டு மனித உள்ளத்தை மரணிக்க செய்திருக்கின்றதே தவிரமன அமைதியை வழங்கவில்லைஆனால்,இஸ்லாம் தனக்கே உரிய எளிமையான பாணியில் மரணத்தை பற்றிய உயர்ந்த கருத்தை முன்வைக்கிறது.
உண்மையில் எவர் மரணத்தை படிக்கின்றாரோபுரிந்து கொள்கின்றாரோ அவர் வாழ்வை புரிந்து கொள்கின்றார். "மரணத்தைபடைத்தோம்வாழ்வையும் படைத்தோம்என்று குர்ஆன் பேசுகின்றதுமனிதனே கொஞ்சம் நின்று குர்ஆன் பேசுவதை கேள்.
வாழ்வு தரப்பட்டுவிட்டதே என்று ஆர்ப்பரித்து அழிச்சாட்டியம் செய்யாதேமரணம் நிர்ணயிக்கப்பட்டதால் வாழ்வுதரப்பட்டிருக்கின்றது என்ற யதார்தத்தை புரிந்து கொள்எல்லோரும் வாழ்விலிருந்து மரணத்தை பார்க்கின்றார்கள்இஸ்லாம்மரணத்திலிருந்து வாழ்வை படிக்க சொல்கின்றதுபடிப்புதானே செயல்படுவதற்கான ஆரம்பம்எல்லோரும் மரணத்தை ஆககடைசியில், "வரும்போது பார்த்துக் கொள்வோம்என்று விட்டுவிடுகின்றார்கள்ஆனால் இஸ்லாம் மரணத்தை புத்தியில்நிறுத்தி வாழ்வை தொடங்கு என்று உலக ஓட்டத்தின் சிந்தனையை சரிசெய்கின்றது.
"அதிகமாக மரணத்தை நினைவு கூறுங்கள்" - என்ற நபிமொழி வாழ்வின் யதார்த்தத்தை நமக்கு சொல்லி தருகின்றதுஎப்படி?,நாம் ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைவு கூர்ந்தால் ஒரு நாள் அது வரும்போது இயல்பாய் எடுத்து கொள்வோம்.அடித்துக்கொண்டு ஆர்பாட்டம் செய்யமாட்டோம்.
"மனிதனின் உள்ளம் துருபிடிக்கின்றதுகுர்ஆன் படிப்பதின்/ஓதுவதின் மூலமும்மரணத்தை நினைவு கூறுவதின் மூலமும்உள்ளத்தின் துரு  நீங்குகிறது" - பாருங்கஎல்லோரும் உடல் அழகைஆரோக்கியத்தை பற்றி மட்டுமே சிந்தித்துகொண்டிருக்கும்போது பெருமானார் (ஸல்உள்ளத்தின் நோய்களையும் சிந்தியுங்கள்அதற்கும் மருந்திடுங்கள் என்கின்றார்கள்.உண்மையில் எத்தனை துருக்கள் உலக ஆசைபெண்கள் மீது மோகம்பதவி ஆசைமன இச்சைபெருமைஅலட்சியம்,தான்தோன்றித்தனம்சுயநலம் இப்படி எத்தனையோஇந்த துருக்களை நீக்க எந்த ஸ்பெசலிஸ்ட் மருத்துவரிடத்திலும்எந்தபிரபலமான மெடிக்கலிலும் மருத்துவமும் மருந்தும் கிடைக்காது.
இஸ்லாமிய படைத்தளபதிகள் எதிரிகளிடத்தில் இப்படி கூறுவார்களாம்: "நீங்கள் மதுவையும் பெண்களையும் நேசிப்பதுபோல்மரணத்தை நேசிக்கும் ஒரு கூட்டம் என் பின்னால் இருக்கின்றதுஅதனை எதிர்கொள்ள தயாராய் இருங்கள்"
மரணத்தை நேசிக்கும் கூட்டமாக முஸ்லிம்கள் அன்று இருந்ததால் இஸ்லாத்தின் குடையின் கீழ் உலகத்தை கொண்டுவந்தார்கள்இன்று உலகத்தின் குடையின் கீழ் இஸ்லாத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றோமோ என்று எண்ண தோன்றுகின்றது.வாழ்வதற்காக ஒவ்வொன்றையும் தயார் செய்து கட்டமைக்கின்றோம்மரணத்திற்கு பிறகும் வாழப்போகின்றோமே அந்தவாழ்வுக்காக தயாரிப்பு செய்து கட்டமைக்கின்றோமாஆகமரணம் முடிவல்லஅடுத்த வாழ்வுக்கான பிறப்பை போன்றது.இவ்வுலக பிறப்பை வரவாக இலாபமாக பார்கின்றோம். ஆனால்மரணம் எனும் அடுத்த வாழ்வுக்கான ஆரம்ப நிகழ்வைநேசிக்காமல் வெறுக்கின்றோமே?
"மரணத்தை வெறுப்பது நோய்அது இருந்தால் நீங்கள் தோற்று விடுவீர்கள்" - என்ற அண்ணலாரின் வார்த்தையிலிருந்துமரணத்தை நேசிப்பது வெற்றிக்கான அடையாளமாக நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகின்றதுஎல்லோரும் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆகவே மரணத்தை வெறுத்து தோல்வியின் பக்கம் நம்மை தள்ளாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.
சிறந்த படைத்தளபதிபல்வேறு போர்களில் வெற்றிபெற நிறைய பங்களிப்பு செய்திருக்கின்றார்பாலஸ்தீன்சிரியா வெற்றிக்குஇவர்களுடைய பங்களிப்பு அபரிதமானதுஅபூ உபைதா (ரலி): "மகனேஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒருநாள் மரணித்தேதீருவாய்ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது முக்கியமல்லமரணத்திற்கு முன் மறுமைக்காக தயாரித்துகொள்".இறுதி நஸியத்தில்சொன்ன வார்த்தைகளில் சிலஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணிக்கத்தானே போகின்றாய்ஆகவே மரணத்திற்கு தயாராகிகொள் அதுதான் முக்கியமே தவிரஎத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதல்ல என்கின்ற அறிவுரை போன்று உள்ளது.
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களிடத்தில் வந்தே தீரும், உறுதியான கோட்டைகளில் இருந்தாலும் கூட” - பணம், பதவி, செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்று வாழ்க்கையில் மிகைப்புடன் இருப்பதுபோல் நினைக்கின்றோம். ஆனால் மரணம் நம்மை மிகைக்க போகின்றது என்பதை மறக்க கூடாது. மரணத்திற்கு முன்னால் நம் பலம் என்று எதனை நினைத்து கர்வமாக, ஆணவமாக நடக்கின்றோமோ அவையெல்லாம் தோற்று ஓடப் போகின்றது.
இறைவனின் பாதையில் வாழ்கின்ற உள்ளம் அந்த பாதையில் மரணிப்பதை ஒருபோதும் வெறுக்காதுஇறைவனின் பாதையில்வாழ பழகுவதற்கு இறைவன் உதவி புரிவானாக!
--

(முற்றும்)
--குலாம் ஆசாத், லெப்பைக்குடிக்காடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக