Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 மார்ச், 2016

ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்


ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்

சட்டத்துறை வல்லுனரும், இரு மத்தியப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ள என்.ஆர். மாதவமேனனின் முக்கிய கட்டுரை.
மாதவ மேனனின் Draft National policy on Criminal Justice (2007) குறித்து நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்.
எனினும் குற்ற நீதி மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்த வல்லுனர் அவர். ‘தேசிய சட்டப் பள்ளிப் பல்கலைக் கழகத்தை’ நிறுவியவர். இரு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகச் செயல்பட்டவர். பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்.
மாதவ மேனன் அலிகர் முஸ்லிம் பலகலைக் கழக மாணவர் என்பதையும், அங்கு சில காலம் பேராசிரியராகப் பணியாற்றீயவர் என்பதையும் இந்தக் கட்டுரையை வாசித்த போதுதான் அறிந்து கொண்டேன்.

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி கருதியும், வளர்ச்சிப் போக்கில் முஸ்லிம்கள் மைய நீரோட்டத்திலிருந்டு விலகிவிடக் கூடாது என்கிற நோக்கத்துடனும் சென்ற நூற்றாண்டில் சர் சையத் அகமட் உட்பட முஸ்லிம் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின்சிறுபான்மை நிலையை அழிப்பது என இன்றைய பாஜக மட்டுமல்ல முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளும் முயற்சித்ததுண்டு. அதை எதிர்த்து முஸ்லிம் பெரியவர்கள் போராடிய வரலாற்றை ஒரு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் ‘மக்கள் உரிமை’ இதழில் நான்கு வாரங்கள் தொடராக எழுதியுள்ளேன்.
இப்போதைய பாஜக அரசும். HRD அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மீண்டும் அந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ள சூழலில் ஒரு முன்னாள் மாணவன் மற்றும் ஆசிரியனமென்கிற வகையில் அலிகர் முஸ்லிம் பல்களைக் கழகத்தின் முக்கியத்துவம், சாதி, மத வேறுபாடுகளின்றி அது ஆற்றி வரும் சேவை, எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முஸ்லிம் அடையாளம் காக்கப்பட வேண்டிய அவசியம் ஆகியவற்றை வற்புறுத்தி எழுதப்பட்ட இக்கட்டுரையை அவசியம் வாசியுகள்.
ஆளும் அரசின் இந்தக் குறுகிய நோக்கிலான நடவடிக்கையை, எந்தப் பலனையும், பதவி சுகங்களையும் கருதாமல் விமர்சித்டுள்ள பேரா. மாதவ மேனனுக்கு நம் நன்றிகள் உரித்தாகட்டும்.
http://www.thehindu.com/opinion/op-ed/why-amu-should-be-an-exception/article8381773.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக