Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 31 மே, 2014

இன்று 31.05.2014 உலக புகையிலை எதிப்பு தினம்

இன்று 31.05.2014 உலக புகையிலை எதிப்பு  தினம் 

துபாய்: கிட்டத்தட்ட 500 கடைகள் சனிக்கிழமை 24 மணி நேரம், புகையிலை பொருட்கள் விற்பனை நிறுத்த வேண்டும் - 2013 ல் 420 ஜம்ப் - உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆதரவு முயற்சியில். 

வாசிப்பு நம் சுவாசிப்பு!

கல்வித் தேடல் என்பது முஸ்லிம்களின் கடமை. இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிக்காத சமூகம் தனது வெற்றியைப் பற்றி யோசிக்க முடியாது.

வலைத்தளங்களின் வளர்ச்சியினாலும், முகநூல் போன்ற சமூகத் தளங்களின் ஆதிக்கத்தினாலும் இன்று வாசிப்புப் பழக்கம் வெகு வேகமாக விடைபெற்று வருகிறது. பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும், அத்தோடு தங்களது அறிவுத் தேடலை போதுமாக்கிக் கொள்ளும்

வரம்பு மீறுதல்...

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித்தராத விஷயங்களைச் செய்வதும்சொல்லித்தந்த விஷயங்களில் அவர்கள் கூறாத செயல்களை அதிகப்படியாக செய்வதும் அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு மாற்றமாக செய்வதும் வரம்பு மீறுதலாகும்.

இதைப்பற்றி அல்லாஹ் தான் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கேட்டு விட்டார்.   குர்ஆன்;33;36        

வெள்ளி, 30 மே, 2014

தான்சானிய குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வைத்து புதிய மலேரியா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி!

மலேரியா நோய் தாக்காமல் இருப்பதற்கான எதிர்ப்பு சக்தியை உடலில் இயற்கையாகவே பெற்றுள்ள தான்சானியப் பிள்ளைகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்க்கு புதிய தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
மலேரியாவை உண்டாக்கும் கிருமியைத் தாக்கி அழிக்கக்கூடிய Antibodies எனும்

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

வியாழன், 29 மே, 2014

எல் நீன்யோ – என்ன செய்யப்போகிறோம்?

எல் நீன்யோ' (El Nino) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது.

கஷ்மீர் 370-வது பிரிவு: தொடரும் சர்ச்சை!

புதுடெல்லி:கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மனம் மாற செய்யத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று நேற்று பொறுப்பேற்ற பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்து உருவாக்கிய சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.
ஜிதேந்தர் சிங், கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ன் நன்மை தீமை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தார். அந்த கருத்து பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

புதன், 28 மே, 2014

தியாகத்தின் நிழலில் இஸ்லாம்!

புதிதான கொள்கையின் காற்று வீச தொடங்கிய காலம். சமத்துவமும், சகோதரத்துவமும் என்னவென்றே தெரியாமல் இன்று இந்தியாவில் ஆரிய பாசிச வர்க்கங்கள் கொலை, கொள்ளை, இனவாதத்தின் பெயரில் வீடுகளை சூறையாடுவது, சக மனிதன் என்பதை மறந்து மனிதாபிமானம் என்றால் அதன் நிறம் என்ன என்று கேட்கும் அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றை பிளந்தெடுத்து தீக்கிரையாக்கும் கோரர்களை போன்று கொடியவர்களை கொண்ட அரபு மண் அது.

சான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாமென அறிவுறுத்தல்

சான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாமென அறிவுறுத்தல்

மதிப்பெண் சான்றிதழை லேமினேட் செய்ய வேண்டாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

செவ்வாய், 27 மே, 2014

தாய்மையின் அன்புக்கு 6 அடி உயர சுவர் மட்டுமல்ல எவ்வளவு பெரிய கோட்டையின் சுவர்களையும் தடைகளையும் தகர்க்கும் வல்லமை உண்டு


ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது 

அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை ..

கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது 

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!


நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!
இதுவரை இந்திய பிரதமர்கள் பதவி ஏற்பு விழாவில் இல்லாத நடைமுறையாக நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன் முறையாக வகுப்புவாத கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது வெளிநாட்டு பார்வையாளர்களையும், விருந்தினர்களையும், மதசார்பற்றவாதிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திங்கள், 26 மே, 2014

நமதூர் மேற்கு பள்ளிவாசலில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்...

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் மேற்கு ஜாமியா பள்ளிவாசல் இணைந்து நடத்தும் ஆரோக்கிய இதயத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம். இன்ஷா அல்லாஹ் வருகின்ற

துபாயில் வண்டியை ஓட்டுகின்றீர்களா ? அப்ப ஒங்கழுக்குதான்...

துபையில் இலவச வாகன பரிசோதனை முகாம் இன்று முதல், அதாவது 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 25 மே, 2014

துபாய் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

துபாய் ட்ராபிக் போலீஸ் விரைவில் Google Glass பயன்படுத்தப் போகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   சாலை  விதிகளை  மீறும் வாகன சாரதிகளது பழைய குற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், தேடப்படும் கார்களின்  பின்னணி தகவல்கள் பற்றி அறிந்து  கொள்ளவும், Google Glass உதவியாக இருக்கும் என துபாய் போலீஸ் நம்புவதாக, போலீஸ் உயரதிகாரி  ஒருவர்  தெரிவித்தார். 
தற்போது,  Google Glass  

அணைத்து இஸ்லாமிய இயக்க வெறியர்களுக்கும் !!

அணைத்து இஸ்லாமிய இயக்க வெறியர்களுக்கும் !!

அஸ்ஸலாமு அலைக்கும்...

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் வெற்றி பெற்றதை அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கும் அணைத்து இஸ்லாமிய இயக்கத்தினருக்கும் இந்த மடல் ஒரு நல்ல சிந்தனையை தூண்டும் என நம்புகிறேன். (இன்ஷா அல்லாஹ்)

சனி, 24 மே, 2014

அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்....

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகள் அளவில் 4 மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்றனர்.

51=100, 49=0: இது சரியா?

69 % மக்களின் எதிர்ப்பை பெற்றிருந்தும், பெரும்பான்மையாக  ஆட்சி அமைக்கவும், கணிசமான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள், ஒரு வாக்கு குறைவாக பெற்றிருப்பினும் அவர்களின் குரல், சட்டம் இயற்றும் அவைதனில்    ஒலிக்காது போவதற்கும், வழிவகுக்கிறது தற்போதைய தேர்தல் அமைப்பு. 

தமிழ் நாட்டிற்கும் நமதூருக்கும் பெருமை சேர்த்த மாணவிகள்....

திருநெல்வேலி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பத்தமடை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி பாஹிரா

வியாழன், 22 மே, 2014

வசந்த காலம் ஆரம்பம்!

14வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்…!
எது நடக்கக் கூடாது என்று நாம் விரும்பினோமோ அது நடந்து விட்டது. நமது எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் தவிடு பொடியானது. உள்ளம் சோர்ந்து வாடி வதங்கி விட்டது. இறை தீர்ப்பை பொருந்திக் கொள்வதும், பொறுமையை மேற்கொள்வதும், எதிர்காலத்தை பற்றிய திடமான நம்பிக்கையும் மட்டுமே நம் மனக் காயத்திற்கு மருந்து என்பதால் நம்மை தேற்றிக் கொள்கிறோம்.

ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக, நான் முன்பு பணியாற்றிய நாளிதழில், முன்பு கலகக்காரர் என்று தவறாக நினைத்துவந்த எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“மோடியை மதவாதி என்று இந்திய புத்திஜீவிகள் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”

தலைமையின் தனித்துவம்! உறுதியின் உறைவிடம்!

எனது பெயர் இங்கு முக்கியமல்ல. நான் முஸ்லிம் அல்லாதவன் என்பதும் ஓர் ஆராய்ச்சி மாணவன் என்பதும் இங்கு போதுமானது.
எனது ஆராய்ச்சி என்னவென்றால் உலகத் தலைவர்களும் அவர்களது தலைமைப் பண்புகளும் என்ற தலைப்பிலானது.

சட்டக் கல்வி : வழிகாட்டுதலும் சில அறிவுரைகளும்

சமூகம் அல்லது ஓர் நிறுவனத்தின் நன் நடத்தை மற்றும் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள்தான் சட்டம் எனப்படும். மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறைபடுத்தப்பட்ட இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடனும், நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்டம் வழிவகை செய்கிறது.
நிதியும் நீதியும் : 

நூலகம் கொண்டு ஒளி பெறட்டும் நமது இல்லங்கள் !

“கோவில் இல்லாத ஊர்களில் கூட குடியிருக்கலாம், ஆனால் நூலகம் இல்லாத ஊர்களில் குடியிருக்க கூடாது”  என்பார்கள். உண்மைதான்! நூலகம் என்பது ஒவ்வொரு ஊர்களிலும் மட்டுமின்றி வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாகும். உங்களுக்கு பிடித்த இன்பமான  ஒர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது, “என் மனதிற்க்கு பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே” என்றார். 
முன்போரு காலத்தில் எல்லா ஊர்களிலுமே நூலகம் இருந்தது.

புதன், 21 மே, 2014

ததஜ வின் புதிய பரிமாணங்கள்...


ஒரு இயக்கம் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது, கடந்த கால நிகழ்வுகளுக்கிடையில் தாங்கள் கவனிக்க மறந்து அப்படியே விட்டுவிட்ட பல தவறுகளை தார்மீகமான அடிப்படையில் கலந்தாலோசித்து தங்களிடம் இருந்த நன் மதிப்பு சிதிலமடைவதற்கு காரணமான காரணிகளை அலசி ஆராய்ந்து நல்ல முடிவுக்கு வந்திருக்கிறது..

செவ்வாய், 20 மே, 2014

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கையை திரிக்க முடியும் – அமெரிக்க விஞ்ஞானிகள்!

இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரிக்க வழி கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மின்னணு வாக்கு இயந்திரம் எவர் கையிலும் கிடைக்காத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில், இவ்வகையில் வாக்கு எண்ணிக்கையைத் திரிக்க வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

படித்ததில் பிடித்தது....

அரசியல் என்றால் என்ன??
“அப்பா, அரசியல்னா என்னாப்பா?” பையன் கேட்டான்.
தகப்பன் யோசித்தான். மகனுக்கு எளிதில் புரியும்படி விளக்க நினைத்தவன் இப்படிச் சொன்னான்:

ஆதமின் மகன் அபு! திரைப்படம் சொல்லும் செய்தி!

ஆதமின் மகன் அபு!
திரைப்படம் சொல்லும் செய்தி!

மலையாளத்தில் ஆதமின்ட மகன் அபு எனும் பெயரில் வெளிவந்து பல விருதுகளைப் பெற்ற திரைப்படத்தை ஹனிபா டெக்ஸ்டைல் நிறுவனம் தமிழில் மொழிமாற்றம் செய்து உள்ளனர்!
இன்று மாலை சென்னை RKV தியேட்டரில் இதன் பிரிவியு ஷோ நடை பெற்றது! பத்திரிகையாளர்கள், திரையுலகத்தினர, சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்!

சனி, 17 மே, 2014

ஒவ்வெறு கல்லும் ... ஒவ்வெறு அத்தாவும்....


நமதூர் கிழக்கு பழைய பள்ளிவாசலுக்கு ஓர் சிறப்பு வரலாறு உண்டு. ஆனால் அந்த வரலாற்றிற்கு சொந்த காரர்களாகிய பெரும்பாலானவர்கள் இப்போது நம்மிடத்தில் இல்லை. ( இறைவனின் நாட்டம்)

முகத்திரை கிழித்த பன்முகத் தேர்தல் !!!


“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல்” 
என்றொரு திருக்குறள் உண்டு. நமக்கு வரும் தீமைகளிலும்  ஒருவகை நன்மை உண்டு, அத் தீமை நாம் நெருக்கமாய் எண்ணும் மனிதர்களின் இயல்புகளை வெட்ட வெளிச்சமாக்கும் என்பது அதன் கருத்து. அத்தகைய சூழலை ஏற்படுத்தியது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.
ஆரியம் தழைக்கா தமிழகம்:

வெள்ளி, 16 மே, 2014

லப்பைகுடிகாட்டில் கழிவுநீர் வடிகால் வசதி கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


லப்பைகுடிகாட்டில் கழிவு நீர் வடிகால் வசதி செய்துதரகோரி பேரூராட்சி அலுவலகத்தை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நமதூரில் நேற்று நடந்த அல்லாஹ்வின் அத்தாட்சிகள்...


அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் நேற்று நமதூரில் இரவு நேரத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது. அதற்கு முன் கிட்ட தட்ட அஸர் மஃக்ரிப் நேரங்களில் குளிர்ந்த காற்று வீசியது. இந்த காற்று வீசும் போது நமக்கு

வியாழன், 15 மே, 2014

ஜமாலியா நகரில் புதியதாக போடப்பட்டுள்ள குடிநீர் தொட்டி....


ஜமாலியா நகரில் புதியதாக போடப்பட்டுள்ள குடிநீர் தொட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட போர் சில நாட்களுக்கு

புதன், 14 மே, 2014

இன்ஜினீயரிங் கவுன்சிலிங் சில அவசியங்களும்… சில ரகசியங்களும்!

பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தின் துறையினை சரியாக தேர்ந்தெடுக்கும் முக்கிய கட்டத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக பொறியியலே முன் நிற்கிறது. 
பொறியியல் படிப்பில் சேருவதற்காக கடந்த 3ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 13 மே, 2014

2014-2015ஆம் ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு

2014-2015ஆம் ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் - குரும்பலூர் மற்றும் வேப்பூரில் இயங்கி வருவதை அறிவீர்கள்.

நமதூரில் தொற்றுநோய் பரவும் அபாயம்....

நமதூரில் தொற்றுநோய் பரவும் அபாயம்....


நமதூரில் உள்ள மேற்கு நடுத்தெரு ( 13 வது வார்டு ) வில் சாக்கடை தண்ணீர் தெருவில் ஓடுவதால் தொற்றுநொய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திங்கள், 12 மே, 2014

மெர்ஸ் நோய் ஒட்டகங்களினால் பரவலாம்:சவூதி அரேபியா எச்சரிக்கை!

சவூதி அரேபியாவில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்க
காரணமாக இருந்துள்ள மெர்ஸ் என்ற நோய்க் கிருமிக்கும் ஒட்டகங்களுக்கும்
இடையே தொடர்பு இருக்கலாம் என்ற விதமாக அந்நாட்டின் அரசாங்கம் வலுவான
எச்சரிக்கையை தற்சமயம் விடுத்துள்ளது.

நமதூர் பசங்க முதல் பரிசுங்க ....

வி.களத்தூரில் இன்று (11.05.2014) தாருஸ்ஸலாம் வாலிபால் கிளப் (அணி ) சார்பாக வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.

ஞாயிறு, 11 மே, 2014

அஸ்மா (ரலி) : வீரமங்கையின் வீரவரலாறு!

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் ஆருயிர் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரலி) அவர்களின் வீர வரலாற்றைப் பார்ப்போம்.

சனி, 10 மே, 2014

வியாழன், 8 மே, 2014

தேர்வு முடிவு, வாழ்க்கையின் முடிவல்ல: தோல்வியிலிருந்து மீளத் தோள் கொடுப்போம்!



தேர்வு முடிவு, வாழ்க்கையின் முடிவல்ல: தோல்வியிலிருந்து மீளத் தோள் கொடுப்போம்!

பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணம் இது. வெற்றியாளர்கள், முதன்மையாளர்கள் என்ற பெருமிதங்கள் இடம்பிடிக்கும் அதே செய்தித்தாளில், வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தற்காக அரும்பும் முன்னரே வாழ்க்கையை முடித்துக்கொண்ட சில மாணவர்களையும் பார்க்க நேரும் அவலம் வருடாவருடம் தொடரவே செய்கிறது.

சிறந்த கல்லூரி எது ...?

I.I.T (Indian Institute of Technology)
 அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்..... ]
CBSE என்ற கல்வி நிறுவனத்தால் வருடந்தோரும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு தான் JEE (Joint Entrance Examination), இதில் பங்கு பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் முலம் இந்தியாவில் உள்ள தலை சிறந்த பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படித்து உங்கள் பிள்ளைகள்  இந்திய அளவில்  சிறந்த பொறியாளர் (Engineer) ஆகலாம். (இன்ஷாஅல்லாஹ்).

துபாயில் குடும்பத்துடன் செல்ல எந்த மாற்றமும் இல்லை...

துபாயில் கடந்த சில நாட்களாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய family விசா பற்றிய தகவல்களை நேற்று General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) தெளிவாக விவரித்துள்ளது .

புதன், 7 மே, 2014

பரவலாக நமதூரில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....


அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த மூன்று நாட்களாக நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது. அல்ஹம்துலில்லாஹ்...

செவ்வாய், 6 மே, 2014

பொறியியல்: அண்ணா பல்கலைக் கழக விண்ணப்ப வழிமுறைகள்

அரசாங்க பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல்  கல்லூரிகளில் இணைந்து பொறியியல் பயில,   அண்ணா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும்  கலந்தாய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மூன்று வழிகளில் விண்ணப்பம்…
1. நேரடியாக..
விண்ணப்ப படிவ விநியோக மையங்களில் நேரடியாக சென்று, சாதிச் சான்றின் நகல் மற்றும்  ரூ. 500 (SC/ST – ரூ. 250) செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

நிதியால் சுதந்திரத் “தீ”யை பற்ற வைத்த உமர் சுப்ஹானி

தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதிதிரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டிகூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ்நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தை பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென காந்திஜி அறிவித்தார்.

அல்லாஹ்வின் ரஹ்மத் ( மழை )....


நேற்று 05.05.2014 அதிகாலையிலிருந்து நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது. இதனால் நமதூர் மக்கள் அல்லாஹ்விற்கு நன்றியை

திங்கள், 5 மே, 2014

வருமுன் காத்த பேரூராட்சி ....

நேற்று 04.05.2014 அன்று நமதூரில் உள்ள கிழக்கு அல்லமா இக்பால் சாலையில் உள்ள குடிதண்ணீர் திறப்பு தொட்டியை பேரூராட்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு சுத்தம் செய்யப்பட்டது.

திருமணத் தகவல் திட்டம்....


ஞாயிறு, 4 மே, 2014

நமதூர் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு....



பெரம்பலூர் மாவட்டத்தில் 17.05.2012 முதல் வருவாயத்துறையினரால் வழங்கப்படும் சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றுகள் மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சான்றுகளை பெரம்பலூர், குரும்பலூர், குன்னம்,

வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்...

வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்
  
இந்திய சுதந்திர வரலாற்றை திப்பு சுல்தானை தவிர்த்து யாராலும் எழுதமுடியாது. அரசாண்ட இஸ்லாமிய மன்னர்களும் , ஆண்மிக உலமாக்களும், சமுதாய சிற்பிகளும், செல்வந்தர்களும், பெண்களும் சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று காவிகள் தான் போராடி பெற்றோம் என்று கூறிவருகின்றனர். அவர்கள் திப்புவின் வரலாற்றை கற்பனை கதை என்றூம் கூறுகின்றனர். அப்படி என்ன அவர்களுக்கு திப்புவின் மீது அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி. அப்படி பட்ட திப்புவை பற்றி நாம் அறிந்தது என்ன?