Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 24 மே, 2014

அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்....

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகள் அளவில் 4 மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்றனர்.

10-ம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில்,  மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் என். ஸ்ரீராம் தமிழ் - 98, ஆங்கிலம் - 97, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்  எஸ். சந்தோஷ்குமார் தமிழ் - 96, ஆங்கிலம் - 95, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99 என மொத்தம் 490 மதிப்பெண்கள் பெற்று  இரண்டாமிடமும், அதே பள்ளி மாணவி எஸ். யாஷினி தமிழ் - 93, ஆங்கிலம் -  97, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 98 என மொத்தம் 488 மதிப்பெண்களும், லப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. அபிதா தமிழ் - 98, ஆங்கிலம் - 92, கணிதம் - 98, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 என மொத்தம் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக