Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 5 மே, 2014

வருமுன் காத்த பேரூராட்சி ....

நேற்று 04.05.2014 அன்று நமதூரில் உள்ள கிழக்கு அல்லமா இக்பால் சாலையில் உள்ள குடிதண்ணீர் திறப்பு தொட்டியை பேரூராட்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு சுத்தம் செய்யப்பட்டது.
கடந்த பல நாட்களாகவே இந்த தொட்டியில் உள்ள வால்வு கசிந்து வந்துள்ளது. இதனால் தண்ணீர் அவ்வபோது வெளியில் வருவதால் அந்த தொட்டியில் கொசுக்கல் அதிகமாக உற்பத்தி ஆகும் இடமாகவும், அதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வந்தது. ஒரு வலியாக நேற்று இந்த தொட்டியை சரி செய்யப்பட்டதால் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நிம்மதி அடைந்தனர். 


நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக