Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 20 மே, 2014

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கையை திரிக்க முடியும் – அமெரிக்க விஞ்ஞானிகள்!

இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரிக்க வழி கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மின்னணு வாக்கு இயந்திரம் எவர் கையிலும் கிடைக்காத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில், இவ்வகையில் வாக்கு எண்ணிக்கையைத் திரிக்க வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


மின்னணு வாக்கு இயந்திரம் ஒன்றோடு தாங்கள் உருவாக்கிய கருவியை இணைத்து விட்டால், ஒரு கைத்தொலைபேசியிலிருந்து குறுந்தகவல் அனுப்பி அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரித்து காட்ட முடியும் என்று மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்து காட்டியுள்ளனர். மின்னனு வாக்கு இயந்திரத்தில் இருக்கின்ற மின் திரைக்கு ஒப்பான  மின் திரையை செய்து, அந்த திரைக்குப் பின்னால் ஒரு மைக்ரோ பிராசசரையும் புளூடூத் ரேடியோ கருவியையும் பதுக்கிவைத்து இந்த கருவியை தாம் உருவாக்கியதாக இந்த ஆய்வை வழிநடத்திய பேராசிரிய அலெக்ஸ் ஹால்டர்மேன் பிபிசியிடம் கூறினார்.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான நிஜ வாக்கு எண்ணிக்கையை அந்த இயந்திரம் காட்ட முற்படும்போது, போலியான எண்ணிக்கைகளை இந்த திரைகள் காட்டுவதுபோல செய்ய முடியும் என்று அவர் விளக்கினார். தவிர மைக்ரோபிராசசர் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை விவரங்களை வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன் திரித்துவிட முடியும் என்றும் இந்த ஆய்வு காட்டியுள்ளது.
மற்ற நாடுகளின் வாக்கு இயந்திரங்களைக் காட்டிலும் வாக்கு எண்ணிக்கையை திரிக்க முடியாத பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் அதிகமுள்ள இயந்திரமாக இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்கள் கருதப்படுகின்றன. இந்த இயந்திரத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கணினிச் சில்லுகளில் பதியப்பட்டிருக்கும் வேட்பாளர் விவரங்களையோ, வாக்குகளின் எண்ணிக்கையையோ திரிப்பதற்கென்று மென்பொருட்கள் இல்லை என்று கருதப்படுகிறது. 
முடிவுகளை திரிக்க வழியுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிப்பது பற்றி பதில் தெரிவித்த இந்திய தேர்தல் துணை ஆணையாளர் அலோக் ஷுக்லா, இந்திய தேர்தல் நிர்வாக முறையில் மின்னணு வாக்கு இயந்திரம் யார் கையிலும் கிடைப்பதை தடுக்கும் விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்றும், அத்தனைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி இந்த இயந்திரத்தை எவர் ஒருவர் திறக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தவிர இயந்திரத்தில் தனித்தனியாக பல்வேறு கதவுகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன என்பதால் யாரும் ஊடுருவ முயன்றிருந்தால் தெரிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.தாளும் மெழுகும் கொண்டு வைக்கப்படும் இந்த சீலை போலியாகவும் வைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளையில் தேர்தல் முடிவை மாற்றக்கூடிய அளவுக்கு வாக்கு எண்ணிக்கையைத் திரிக்க வேண்டுமானால் ஏராளமான இயந்திரங்களில் மைக்ரோபிராசசரைப் பொருத்தினால் மட்டுமே சாத்தியம். இந்தியாவில் அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் 14 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக