Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 24 மே, 2014

தமிழ் நாட்டிற்கும் நமதூருக்கும் பெருமை சேர்த்த மாணவிகள்....

திருநெல்வேலி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பத்தமடை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி பாஹிரா
பானுவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் நெல்லை சரக காவல் துறை டி. ஐ .ஜி சுமித் சரண் சாதனை படைத்த மாணவியை தனது அலுவலகத்திற்கு வர வழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.


நமதூர் மாணவி 10 ம் வகுப்பில் 495 எடுத்த சாஜினா பர்வீன் சாதனை படைத்து உள்ளார். கீழே உள்ள படம் நமதூர் மாணவி தனது தந்தையுடன்.

இந்த இரண்டு சகோதரிகளை நமதூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 


6 கருத்துகள்: