Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 22 மே, 2014

வசந்த காலம் ஆரம்பம்!

14வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்…!
எது நடக்கக் கூடாது என்று நாம் விரும்பினோமோ அது நடந்து விட்டது. நமது எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் தவிடு பொடியானது. உள்ளம் சோர்ந்து வாடி வதங்கி விட்டது. இறை தீர்ப்பை பொருந்திக் கொள்வதும், பொறுமையை மேற்கொள்வதும், எதிர்காலத்தை பற்றிய திடமான நம்பிக்கையும் மட்டுமே நம் மனக் காயத்திற்கு மருந்து என்பதால் நம்மை தேற்றிக் கொள்கிறோம்.

நமக்கு ஆறுதலும் தேறுதலும் நாள்தோறும் வழங்கும் நம் உற்ற தோழன் நம் வழிகாட்டி அல்லாஹ்வின் திருவேதம் இப்படி நம்மை ஆசுவாசப் படுத்துகிறது.
“நிச்சயமாக என் இறைவன் தான் நாடியவற்றை நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் மிக்க ஞானமுள்ளவன்.” (சூரா யூஸூஃப் – 12:100)
2009 லும், 2004 லும் நம்மை மகிழ்ச்சி அடைய வைத்த ரஹ்மானே இப்போது இந்த தீர்ப்பின் மூலம் நம்மை சோதிக்கின்றான். இந்த சோதனையில் இருந்து மீண்டு வரக் கூடிய சக்தியை நமக்கும் நம் சமூகத்திற்கும் தந்தருள்வானாக. நம்மை சீர்படுத்துவானாக. நம் பாவங்களை மன்னிப்பானாக. நம்மை அவனிடம் பணிய வைப்பானாக. இந்த சோதனையின் நன்மையினை தருவானாக. இதன் தீமையினை விட்டும் பாதுகாப்பானாக.
ரத்தக் கரை படிந்தவர்களை தலைமைப் பொறுப்பில் வைத்து அழகு பார்க்கும் வரலாறு இஸ்ரேலுக்கு மட்டுமே உண்டு. இப்போது நம் பாரதத் திருநாடு அத்தகைய பெருமையை பெற்றுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதந்யாஹூ, இந்திய – இஸ்ரேல் உறவுகள் இன்னும் ஆழமாக ஏற்பட மோடி ஆர்வமாக இருப்பதாக சொல்லியிருப்பது இயற்கையானதும் எதிர்பார்த்த ஒன்றுமாகும்.
பா.ஜ.க வின் இந்த வெற்றிக்கும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. பத்து ஆண்டு கால காங்கிரஸ் மீதான மக்கள் வெறுப்பு, காங்கிரசுக்கு மாற்றாக மதவாத பா.ஜ.க வை தவிர்த்து வலுவான கட்சி இல்லாதது, பெரு முதலாளிகளின் ஆதரவு, ஊடக பலம், புதிய வாக்காளர்களை ஈர்க்கும் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ். பின்புலம்…
என்ன இருந்தாலும் ஒரு மாபெரும் நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு ஒரு இனப்படுகொலை நாயகனையா தேர்ந்தெடுப்பது?. குஜராத்திற்கு மட்டுமே இருந்த இந்த அவப்பெயர் இப்போது ஓட்டு மொத்த நாட்டுக்குமா? மக்களின் மனசாட்சி மரத்து விட்டதா? மனிதாபிமானம் இறந்து விட்டதா? விளம்பரக் கலாச்சாரம் மிகைத்து விட்டதா? இந்தியாவின் ஆன்மா கதறுகிறது. எனக்கும் இதே கதிதான் என்று இலங்கையின் ஆன்மா விசும்புகிறது.
முஸ்லிம்கள் திகைத்து நிற்கிறார்கள். பயப்படவும் பீதி அடையவும் தேவையில்லை. இந்த ஆட்சிக்கு முன்னாலும் அவர்கள் அடக்குமுறையையும் அநீதியையுமே சந்தித்தார்கள். வீண் பழியையும் சிறைக் கொட்டடியையும் சந்தித்தார்கள். அந்த அநீதிக்கு எதிரான போராட்டக் களத்திலே அவர்கள் நிற்கிறார்கள். ரத்தம் சிந்துகிறார்கள். இந்த ஒடுக்குமுறைகள் அதிகமானால் முஸ்லிம்களின் போராட்டமும் அதிகமாகும். அதிர்ச்சியையும் பயத்தையும் விட சிந்தனையும் செயல்படுதலும் மேலானது. முஸ்லிம்களின் முயற்சியும் பிரார்த்தனையும் கண்ணீரும் ஒரு போதும் வீணாகாது இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை – அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களை நேசிக்கின்றான். (திருமறை குர்ஆன் 3:146)
இந்த அருங்குணங்களை அல்லாஹ்விடம் கேட்போம். வளர்த்துக் கொள்வோம். உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் செயலாற்றுவோம்.
புதிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இவர்கள் முஸ்லிம்களை அல்ல. இஸ்லாத்தையே கடுமையாக வெறுப்பவர்கள். அந்த வெறுப்பையே முஸ்லிம்களிடம் காட்டுபவர்கள். இந்த அளவிற்கு வெறுப்பை சுமந்து கொண்டு ஒருவன் பூமியில் வாழ முடியுமா? என்று என்னும் அளவு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை சுமப்பவர்கள். அந்த வெறுப்பின் செயல் வடிவத்தை தாங்கள் நடத்தும் கலவரங்களில் வெளிப்படுத்துபவர்கள். அழிவுக் கொள்கையான ஃபாசிசத்தை நெஞ்சில் ஏந்தியவர்கள்.
உலக முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், அவர்களை ஆளும் பொறுப்பு இவர்களிடம் வந்திருக்கிறது. இவர்கள் முஸ்லிம்களிடம் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை உலகமே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. தங்கள் வெறுப்புக் கொள்கையை, அழிவுக் கொள்கையை கை விட்டு திரைமறைவு வேலைகள் கீழருப்புகள் இல்லாமல் வெளிப்படையாக நேர்மையாக ஆட்சி நடத்தினால் அது நாட்டுக்கு நல்லது. பார்க்கலாம்.
எப்போதும் இல்லாத அளவு இந்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வாக்குகள் பிரிந்துள்ளது. அதிகாரத்தை நோக்கி சமூகம் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இது பெரிய பின்னடைவுதான். விகிதாச்சார பிரநிதித்துவம் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இந்தக் கோரிக்கை மேலும் தீவிரமடைய வேண்டும். முஸ்லிம்கள் அதை முன்னெடுக்க வேண்டும்.
இதை மட்டுமா முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும்? அவர்கள் தேங்கி நிற்கும் எத்தனையோ துறைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. முக்கியமாக ஊடகம். அச்சு மற்றும் காட்சி ஊடகம். இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஆயுதம் ஊடகம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. அது இன்று அவர்களுக்கு எதிராக உள்ளது. பொது சமூகத்தின் ஆதரவும் எதிர்ப்பும் இன்று ஊடகங்களால் தீர்மானிக்கப் படுகின்றன. எப்போதும் இல்லாத அளவு அதன் முக்கியத்துவம் இப்போது முஸ்லிம்களால் உணரப் பட்டு விட்டது.
தமிழகத்தில் கலகம் செய்யும் ஒரு அமைப்பு தான் தவறை உண்ர்ந்து அறிவிப்பு வெளியிட்டது அல்லாஹ் அளித்த இந்த சோதனையின் மூலமாக வந்த நன்மை. நம் தவறுகளை உணரவும் நம்மை சீர் செய்யவும் இந்த சோதனையை நாம் பயன் படுத்திக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களின் வசந்த காலம் இனி இந்தியாவில் ஆரம்பமாகும். அல்லாஹ் போதுமானவன்.
அன்றியும் முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்ட போது, “இதுதான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும் (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப் படுத்தாமல் இல்லை. (திருமறை குர்ஆன் 33:22)
யா அல்லாஹ்! எங்கள் ஈமானையும் இறை அச்சத்தையும் உனக்கு முற்றிலும் வழிபடுவதையும் அதிகப் படுத்துவாயாக.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக