Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 31 ஜூலை, 2014

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் – சி.எஸ்.இ. எச்சரிக்கை

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

துபையில் மகிழ்ச்சியாகக் கழிந்த ஈகைத் திருநாள் கொண்டாட்டம்!



காலை 4 மணிக்கு எழுந்து குளித்து மஸ்ஜிதுக்குச் சென்று ஸுப்ஹு தொழுதேன். அப்பொழுதே புழுக்கம் அதிகமாக இருந்தது. மக்களால் மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் வெளியில்தான் தொழ வேண்டியதாயிற்று. அப்பொழுதே வியர்வை கொட்ட ஆரம்பித்துவிட்டது.

நமதூரை பலபடுத்துவோம் !

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருபெயரால்....
நமதூர் இணையத்தளத்தின் பெருநாள் வாழ்த்து செய்தி
எல்லாம் கடந்து போகும்

இப்புனித மிக்க மாதத்தில் சில மாற்றங்களுடன் நமதூர் மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது நமதூர் செய்தி (Labbaikudikadunews) குழுமம். இத்தருணத்தில் சில விசயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

நமதூரில் நடைபெற்ற ரமலான் 27 ....

நமது இமாம்கள் நம்மை சரியாக வழி நடத்துகின்றனரா ?


மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

சமூக பொறுப்புணர்வு இல்லாத சுவரெட்டிகள்...

நமதூரில் காணப்பெற்ற இரண்டாவது அற்புத போஸ்ட்டர்


ஆம் ! ஒழுக்க பலமும் , ஆன்மீக பலமும் கொண்ட கொள்கை இன்றும்

நமதூரில் காணப் பெற்ற சுவர்ரெட்டிகள்...

நம்முடைய சகோதரனுக்காக தூவா செய்வோமாக ...

சனி, 26 ஜூலை, 2014

மகிழ்ச்சிப் பெருநாள்!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளி டாக்டர் உதயகுமார். விடியல் வெள்ளியில் தொடர் எழுதி வருகிறார். அதில் இந்த மாதம் தங்கள் போராட்டம் காரணமாக அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சந்தித்த நெருக்கடிகள்; வழக்குகள்; அவதூறுகள்; மன உளைச்சல்கள். இவற்றை சொல்லி விட்டு, சில பல மனப் பயிற்சிகளை தான் மேற்கொண்டிருக்காவிட்டால் எப்போதோ நொறுங்கிப் போயிருப்போம் என்று சொல்கிறார்.
ஆமாம். வாழ்க்கையில் அடுக்கடுக்காக வரும் சோதனைகளை எல்லோராலும் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. சிலர் விரக்தியின் எல்லைக்கே சென்று விடுகின்றனர். அதனால் மன நலம் பாதிக்கப்படுகிறது. சிலர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர்.

நேற்று கொல்லப்பட்ட ஒரு காஸா இளைஞனின் சட்டைப் பையில் எடுக்கப்பட்ட இந்த துண்டு சீட்டில் அவன் எழுதியிருப்பது!


நேற்று கொல்லப்பட்ட ஒரு காஸா இளைஞனின் சட்டைப் பையில் எடுக்கப்பட்ட இந்த துண்டு சீட்டில் அவன் எழுதியிருப்பது!

எங்கும் ரத்தம், எங்கும் மரணம்

எங்கும் ரத்தம், எங்கும் மரணம்
உயிருக்கு உயிரான நண்பர்களே, நேற்று இரவு ரொம்பவும் கொடுமை. எத்தனையெத்தனை மக்கள்! குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை; எல்லோரும் அப்பாவிப் பொதுமக்கள்; படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய நடுங்கிக்கொண்டு, செத்துக்கொண்டு வண்டிகளில் மந்தைமந்தையாக ஏறிச்சென்று… அப்பப்பா! இப்படியொரு நிலைக்குத்தான் இறுதியில் கொண்டுவந்து விட்டிருக்கிறது இஸ்ரேலியப் படையெடுப்பு.

துபாயில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் ஹாபிழ் முதலிடம்!


அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த்த ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 

விரிவான விபரம் வருமாறு:- 
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீயிலுள்ள இந்திய சமூக கலாச்சார மையம் (Indian Social & Cultural Centre), அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து, மறைந்த ஷெய்க் ஸாயித்.பின் ஸுல்தான் அல் நஹ்யான் நினைவாக, அபூதபீயில் வசிக்கும் மக்களுக்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியை இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளது. 

துபாயில் ரமலான் 27 ....


அமீரகத்தில் நேற்று ரமலானின் 27-ஆம் கிழமை புனித லைலத்துல் கத்ர் இரவு  சுன்னத்துவல் ஜமாத் பிரகாரம் (இறையருள் வார்க்கும் மகத்தான இரவு) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


தேரா துபையின் கோட்டைப் பள்ளியில் இஸ்லாமிய தமிழுலகம் அறிந்த மார்க்க அறிஞர் பெங்களூர் ரஷாதியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் அல்ஹாஜ் மவ்லவி சைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிச்சத்தில் அழகுற எடுத்தியம்பினார்கள்.

வியாழன், 24 ஜூலை, 2014

நெல்லை தமுமுக வின் மனித நேயபணி ....


இந்தியாவிலேயே 115 ஆம்புலன்ஸ்களை வைத்திருக்கும் ஒரே தொண்டு இயக்கம் தமுமுக மட்டுமே என்பது யாவரும் அறிந்த ஒன்று.

நமதூரில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி ...


லெப்பைக்குடிக்காடு  நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

2027 இல் இஸ்ரேல் இருக்காது...

2027 இல் இஸ்ரேல் இருக்காது
- நேர்காணல் - ஷெய்க் அஹ்மத் யாஸீன்
(மிகப் பிரபலமான ஒரு நேர்காணல் இது. ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஷெய்க் அஹ்மத் யாஸீனை பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸுர் நேர்கண்டார். சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னரான இந்நேர்காணலை சடுதியாக காணக்கிடைத்தது. அதன் சிறியதொரு பகுதி இது. 2027 இல் இஸ்ரேல் இருக்காது என இந்நேர்காணலின் ஷெய்க் அஹ்மத் யாஸீன் வலியுறுத்தி கூறுகிறார்.)
அஹ்மத் மன்ஸுர்: இஸ்ரேல் உருவாகிய 1948 காலப்பகுதியை நீங்கள் கண்டுள்ளீர்கள். அது உருவாகி இப்போது (1998) 50 வருடங்கள் கடந்திருக்கின்றன. அதன் எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன?
அஹ்மத் யாஸீன்: நான் சொல்வது, இஸ்ரேல் அநியாயத்தின் மீதும் கற்பழிப்பின் மீதும் எழுந்துள்ளது. அநியாயம், கற்பழிப்பின் மீதெழும் நாடுகள் எல்லாம் அழிந்தே தீரும்.

புதன், 23 ஜூலை, 2014

பாலஸ்தீன் -காஸாவில்- முஸ்லிம்களின் நிலை

கஞ்சி காய்ச்ச விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் மூலம் நீக்கம்...


காரைக்கால், நேரு நகர் கஞ்சி காய்ச்ச விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் மூலம் நீக்கம் சீல் உடைக்கப்பட்டது - எல்லாஹ் புகழும் இறைவனுக்கே!!! களத்தில் தமுமுக

நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.

நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது,

நமதூரில் நடைபெற்ற இஃப்தார்...

கிழக்கு ஜூம்மா பள்ளி

நமதூரில் உள்ள அனைத்து பள்ளிவாசலிலும் நோன்பு திறப்பதற்காக வழக்கம் போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சுத்தம் ஈமானின் ஒரு பகுதி...



நமதூர் கிழக்கு ஜூம்மா பள்ளிவாசலில் உள்ள ஒழு செய்யும் தொட்டியை  (ஹவூஜ்) ரமலான் முன்பு சுத்தம் செய்யப்பட்டது. 

துபாயில் பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

துபாயில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்களை அந்நாட்டு அரசு இன்று அறிவித்தது.

அமெரிக்க புகையிலை நிறுவனத்துக்கு கடுமையான அபராதம்!

நுரையீரல் புற்று நோயினால், 18 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் மனைவிக்கு, 23.6 பில்லியன் டாலர்களை வழங்கும்படி அமெரிக்காவின் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களில், இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர் ஜெ ரெனால்ட்ஸுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு, பல வருடங்களாக அடிமைப்பட்டிருந்த, தனது கணவர் ராபின்சன், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தமைக்கு அந்த நிறுவனமே காரணம் என்று

நபிகள் போதனைகளை கடைபிடித்தால் இந்தியா அமைதிப் பூங்காவாக விளங்கும்: இஃப்தார் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

நபிகள் நாயகம் போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப் பூங்காவாக விளங்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக சார்பில் நந்தம்பாக்கத்தில் திங்கள்கிழமை மாலை நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இஸ்லாம் மார்க்கம் என்பது நல்வழி மார்க்கம். ஒற்றுமையுடன் இருப்பது, தர்மம் செய்வது, அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வது, கோபத்தை அடக்குவது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம். அவர், தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

திருடர்கள் ஜாக்கிரதை!


திருடர்கள் ஜாக்கிரதை!

திருச்சி ஏர்போர்ட்ல் மொபைல்களை திருடும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் :

திங்கள், 21 ஜூலை, 2014

கிழக்கு பள்ளிவாசலுக்கு புதிய நீர்தேக்க தொட்டி...



நமதூர் கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் கபர்ஸ்தானில் புதியதாக ஒரு நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகின்றது.

காஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!


இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈதுல் பித்ர் (பித்ரா கூட்டு வினியோகம்) - த.மு.மு.க


இறுதிப் பத்தில் இஃதிகாஃப்


இறுதிப் பத்தில் இஃதிகாஃப்

இறைவனை வழிபடும் எண்ணத்துடனும், அவனது நெருக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இறை இல்லாத்தில் பயபக்தியுடன் சிறிது காலம் தங்கி இருப்பது இஃதிகாஃப் என்று கூறப்படும்.
அச்சமயம் மிக அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தவிர, இறை இல்லத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது. பாலுறவு சம்பந்தமான நடவடிக் கைகளில் அறவே ஈடுபடக்கூடாது.

ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில்இஃதிகாஃப் இருப்பது நபி வழி ஆகும். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்து வந்துள்ளார்கள்" என்று இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார். (புகாரி, முஸ்லிம்).

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “ கிரீன் ” சிக்னல்...

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத்தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.

வேப்பூரில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி


ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வேப்பூரில் கட்டப்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி

அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.
நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.
மதீனாவை ஆண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற அவரின் தோழர் உமர் கத்தாப்(ரலி) அவர்கள், ‘தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?’ என்று வினவினார்கள்.

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா ?

ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது,முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் 3% பார்பனர் கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்துத்துவ இயக்கங்களின் அடிமைகளுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா...சேர வம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா.

சனி, 19 ஜூலை, 2014

துஆக்கள்” என்ன இணைவைத்தலா?

இறைத்தூதர் பிறந்து வாழ்ந்த மண்ணில்,இறையச்சம் நீங்கியதோ?
மனிதனின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் அல்லாஹ்வின் எண்ணமும்,அச்சமும் இருக்க வேண்டுமென்று போதித்து,வழிகாட்டிய எம்பெருமானார் பிறந்து வாழ்ந்த அரபு மண்ணில் தற்போதைய மனிதர்களிடம் பெரும்பாலும் அத்தகைய இறையச்சம் காணமுடியவில்லையே?
மனிதன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம்,வியாபாரத்தில் மோசடி.
தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவனது கூலியை கொடுத்து விடவேண்டுமென்ற அண்ணலாரின் அறநெறியை பின்பற்றாமை.

மன்னிப்பும், ஜன்னத்தும்!

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடை யோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (சூரா ஆல இம்ரான் 3 : 133)
இங்கே இறைவன் முதலில் மன்னிப்பின் பக்கம் விரைந்து வரச் சொல்கிறான். அதன் பின்னர் சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வரச் சொல்கிறான். ஏன் அப்படி?

வியாழன், 17 ஜூலை, 2014

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே ! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்.
அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.
நான் சுவர்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன்.

ஹமாஸ் இயக்கத்தின் பிரதித் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா ஆற்றிய உரையின் சுருக்கக் குறிப்புகள்.


ஹமாஸ் இயக்கத்தின் பிரதித் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா ஆற்றிய உரையின் சுருக்கக் குறிப்புகள்.


வீரச் சிங்கங்களே! நீங்கள், தரைவழியிலும் கடல்வழியிலும் வான்வழியிலும் ஏற்படுத்தியுள்ள அடைவுகள் மூலமும் அதிர்ச்சிகள் மூலமும் எங்களையும் எமது மக்களையும் எமது உம்மத்தையும் தலைநிமிரச் செய்துள்ளீர்கள்.

காஸா, போராளிகளின் மண்ணறை. ஹமாஸ் திடவுறுதியுடன் நிலைத்திருக்கும். அதனை கடுமையான முற்றுகையினாலும் கண்மூடித்தனமான தாக்குதலினாலும் அழிக்கலாம் என யாரும் நினைத்தால் அவர் பிரமையில் இருக்கிறார்.

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? தயவு செய்து பதில் தரவும்
ரோஷன்

பதில் :
ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

குஜராத் கலவரத்தை மறக்க வேண்டும்: பில் கிளிண்டன்

ஆசிய பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில் கிளிண்டன் நேற்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார். அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இன்று பார்வையிட்ட அவர் லக்னோவுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோதே அவரை கவனித்து வந்ததாகவும், அவரது பொருளாதாரக் கொள்கைகள் தன்னை பெரிதும் ஈர்த்ததாகவும் கிளிண்டன் கூறியுள்ளார்.

புதன், 16 ஜூலை, 2014

ஹமாஸ் - எதிர்த்து போராடும் இஸ்லாமிய இயக்கம்...


ஹர்கதுல் முகவ்வமதுல் இஸ்லாமிய்யா என்ற அரபு பதத்தின் சுருக்கமே ஹமாஸ். எதிர்த்து போராடும் இஸ்லாமிய இயக்கம் என்பது இதன் பொருள். ஷேக் அஹமது யாசீன் அப்துல் அஜீஸ் ரன்திஸி, ஷலாஸ் ஸஹாபா, முகம்மது ஹஸன் ஷமா, இப்ராஹீம் அல் யசூரி, அப்துல் ஃபத்தாஹ் ஹஸன் நோக்கான் மற்றும் இஸ்ஸா அல் நஜ்ஜார் ஆகிய ஏழு நபர்கள் இணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தனர்.

"1997ல் மிஷ் அலின் மீது ஒரு கொலை முயற்சியையும் நடந்தினர் மொஸாத் உளவாளிகள். கனடா நாட்டு பாஸ்போர்ட் மூலம் ஜோர்டானுக்கு வந்த இரு இஸ்ரேலிய உளவாளிகள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஹமாஸ் இயக்க அலுவலகத்திற்கு வெளியே வைத்து மிஷ் அலின் காதில் விஷ ஊசியை பாய்ச்சி விட்டு தப்பிச் சென்றனர்"...

பத்ருப் போர் – நீதிக்கான இடையுறாத போராட்டத்தின் உத்வேகம் !


நீதிக்கான போராட்டத்தின் வற்றாத நீரூற்றாக உத்வேகம் அளிப்பதே பத்ருப்போர். நீதிக்காக ஏங்குபவர்களுக்கு பத்ரு என்றைக்குமே அடங்காத ஆவேச உணர்வாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை நீதி என்பது உயிரைகொடுத்தேனும் நிலை நாட்டப்பட வேண்டும். காரணம், உலகின் சமநிலையை நிலைநிறுத்துவதற்கான ஆணிவேராக நீதி அமைந்துள்ளது.

திங்கள், 14 ஜூலை, 2014

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்!

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்!
1991-ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டின் நவீன வடிவமாக கடந்த வியாழக்கிழமை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருந்தது.1991-ஆம் ஆண்டு முதல் தொடரும் நவீன பொருளாதார கொள்கையை இன்னும் உறுதிப்படுத்துவதே ஜெட்லியின் பட்ஜெட் .

பட்ஜெட்டில் இழையோடும் இந்துத்துவா

சுதந்திர போராட்ட தலைவர்களை புறக்கணித்துவிட்டு  ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை சிறப்புத் திட்டங்களுக்கு மோடி அரசு சூட்டியுள்ளது.மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

ஞாயிறு, 13 ஜூலை, 2014

இஸ்ரேலுக்கு எதிரா நடைபெற்ற தேசிய அளவிலான ஆர்ப்பாட்டம்...

TNTJ சென்னை
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும்

மேன்மை தரும் நோன்பு


மேன்மை தரும் நோன்பு
நாம் யாரை வன்ங்குகிறோம்?
ரஹ்மானையா?... ரமலானையா?...


ரமலான் என்பது ஒரு பருவகால கொண்டாட்டமாக (சீசன்) மாறிவிட்டது. பள்ளிவாசல்களைப் பாரருங்கள் அப்படித்தான் தெரிகின்றது.

ஓர் உறுதி மிக்க தலைவர் - காலித் மிஷ் அல்



நேற்று மாலை ஆறு மணிக்கு ஹமாஸ் இயக்க தலைவர் காலித் மிஷ் அல் வெளியிட்ட செய்தி. யாருக்காகவும் நாங்கள் காத்திருக்கவில்லை, அல்லாஹ்
எங்களுக்கு வெற்றியைத் தருவான் ! அல்லாஹு அக்பர் ! எங்களுக்கு உலகின் பல பாகங்களிலும் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் 

சனி, 12 ஜூலை, 2014

கல்விக் கடன் பெற மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

12-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்காக வங்கிகளிடம் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஏ.ரவி என்பவரது மகன் 12-ம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தார். தனது மகனுக்கு பி.இ. பயில்வதற்காக ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கும்படி திருப்பூர் பெரமணல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரவி விண்ணப்பம் அளித்தார்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

பா.ஜ.க பட்ஜெட்

பா.ஜ.க பட்ஜெட் 1
# பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதல் இரட்டிப்பு. இந்த ஆண்டு முதல் 49 சத FDI.

பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம் 68 வங்கிக்கிளைகள் பங்கேற்பு. நமதூருக்கு ஆகஸ்ட் 2 தேதி நேரமுகம்...

பெரம்பலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 26 , ஆகஸ்ட் 2 ம் தேதிகளில் நடைபெற உள்ள கல்விக்கடன் வழங்கும் முகாம்களில் , 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் பங்கேற்க உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு.

வியாழன், 10 ஜூலை, 2014

நம் சமூகத்தின் மனசாட்சி யார் ?



நம் சமூகத்தின் மனசாட்சி யார் ?

லியான் யூரிஸ். இந்த பெயரை இதற்கு முன் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “ தி எக்ஸோடஸ் ” இவ்வுலகத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் தங்கள் கனவுகளை, நம்பிக்கைகளை, பண்பாட்டு அசைவுகளை, சரித்திரத்தை பற்றி எழுதிய எண்ணிலடங்கா புத்தகங்கள் உண்டு. ஆனால்,
எந்த புத்தகத்திற்கும் இல்லாத மாறுபட்ட அதிர்ச்சிகரமான பின்னணி இந்த புத்தகத்திற்கு உண்டு என்று நாம் உறுதியாக கூறலாம். ஆம் ! நாவலின் அடிநாதம் இது தான்.

அமீரகத்தில் உள்ளவர்கள் பெருநாள் கேக் ஆர்டர் பன்னனுமா ?

புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்
வி.களத்தூர்: புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மற்றும் லப்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை , தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
ஒரு கேக்கின் விலை 15 திர்ஹம் மட்டுமே!
ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே!
ஆர்டர் பெறும் கடைசி தேதி :25 : 07 : 2014.

புதன், 9 ஜூலை, 2014

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி!


பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பாக மாபெரும் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (08/07/2014) செவ்வாய்க்கிழமை எளம்பலூர் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தில்  நடைப்பெற்றது.