Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 6 ஜூலை, 2014

இன்று உலக தாவா ( அழைப்பு பணி ) தினம்....


ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த போது முஸ்லிம்களைப் பற்றி 
தவறாக எண்ணி இருந்தேன் காரணம் முஸ்லிம்கள் தான்!

இன்று சென்னையில் உலக தஃவா தினத்தையொட்டி சென்னைக் கடற்கரையில் மஸ்ஜிதுல் முஃமின் தஃவாவின் போது ஒரு வெங்கடேஷன் எனும் இந்து சகோதரர் நான் ஆர்.எஸ்.எஸ் இல் இருந்த போது மிகவும் தப்பும் தவறுமாக எங்களுக்கு கற்பிக்கப்பட்டது! ஆனால் பின்னர் ஒரு ந்ண்பர் மூலம் நான் அறிந்து கொண்டேன்! 

என்னைப் போல் நிறையப் பேர் தவறாக தான் புரிந்து வைத்துள்ளொம்! அதற்கு காரணம் நீங்கள்தான்! எங்களுக்கு நீங்கள் எடுத்து சொல்ல்வில்லை! பல வருடங்களுக்கு முன்னாலே பைபிள் மற்றும் கிறிதவ பிரசுரங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்! இப்பத் தான் தமிழ்ல குர் ஆனைக் கொடுகின்றிர்கள் என்றார்! ஆம் நாங்கள் தாமதம் தான் ! எஙகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டது என்று எடுத்து சொன்னோம்! 

அல்ஹம்து லில்லாஹ் இவரைப் போல் இன்னும் எத்தனை பேரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக