Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 4 ஜூலை, 2014

ஐ எஸ் ஐ எஸ் பரப்புரைகளால் மறைக்கப்படும் இஸ்ரேலின் அட்டூழியங்கள்!!

ஈராக்கில் சுன்னிப் போராளிகள் நடத்தும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் தீவிரமாக பரப்புரைச் செய்துவரும் வேளையில் இஸ்ரேல், காஸ்ஸாவிலும், மேற்குக் கரையிலும் நடத்தி வரும் அராஜகங்கள் புறக்கணிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.
தங்களை யாரும் கவனிக்காத வேளையில் ஃபலஸ்தீன் மக்களை குண்டுவீசி கொலைச்
செய்வதும், அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவதும் இஸ்ரேலின் வாடிக்கை. அருகில் உள்ள எகிப்தில் தங்களிடம் முன்கூட்டியே ஆலோசனை நடத்திய அல் ஸீஸி ஆட்சியை கைப்பற்றி அதிபராக இருப்பது இஸ்ரேலுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கிவிட்டது. 
குண்டுவீசப்படாத  நாள் எது?

ஜூன் 12-ஆம் தேதி முதல் ஃபலஸ்தீன் மக்களை இஸ்ரேல் ராணுவம் வேட்டையாடி வருகிறது. யூதப் படையினர் இளைஞர்களை கைதுச் செய்கின்றனர். அதனை எதிர்ப்பவர்களை சுட்டுக்கொலைச் செய்கின்றனர். காஸ்ஸாவில் குண்டுவீசப்படாத நாளே இல்லை.மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள்  எதனையும் விட்டுவைக்காமல் வெறிப்பிடித்த இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தகர்க்கிறது.
இதுவரை 600 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். மூளை வளர்ச்சிக் குன்றிய இளைஞரும், கர்ப்பிணியும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியானவர்களில் அடங்குவர்.மஹ்மூத் அப்பாஸ் ஆட்சி புரியும் மேற்குக் கரையில் உள்ள அலுவலகங்கள், வீடுகளில் நுழைந்து இஸ்ரேலிய படையினர் எல்லாவற்றையும் அழிக்கின்றனர்.
சட்டவிரோத குடியேற்றம்

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து வந்துள்ள யூத மத தீவிரவாதிகளுக்காக ஃபலஸ்தீன் மண்ணை ஆக்கிரமித்து வீடுகள் கட்டும் பணி ஜரூராக நடக்கிறது. சட்டவிரோதமாக வசித்துவந்த மூன்று குடியேற்றக்காரர்கள் காணாமல் போனதாக குற்றம் சாட்டி இந்த கொடூரங்களையெல்லாம் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுவருகிறது. எந்தவொரு ஃபலஸ்தீன இயக்கமும், இதற்காக பொறுப்பு ஏற்கவில்லை.
இந்நிலையில் காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் ஹமாஸ் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியபோதும், இஸ்ரேலை தாலாட்டும் ஐ.நா கூட  இதனை நம்பத் தயராக இல்லை.
ஹமாஸும், ஃபத்ஹும் இணைந்தது காரணமா?
ஹமாஸும், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான ஃபத்ஹும் இணைந்து ஒரு ஐக்கிய அரசை உருவாக்க தீர்மானித்ததே இஸ்ரேலுக்கு கோபத்தை கிளறக் காரணமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் காணாமல் போன சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இச்சம்பவம் நடப்பதற்கு முன்பாக இரண்டு ஃபலஸ்தீன் பாலகர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையோ, 250க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தோ ஒபாமாவுக்கும், அவரது சகாக்களுக்கும் கவலையில்லை.
யூதனின் நகம் மதிப்புமிக்கது??
காணாமல்போன இஸ்ரேலியர்கள் ஒரு ஃபலஸ்தீன் கிராமத்தை துப்பாக்கிமுனையில் கைப்பற்றி காலனியை நிறுவியர்கள். 10 லட்சம் அரபுக்களை விட ஒரு யூதனின் நகம் மதிப்புமிக்கது எனும் சிந்தனையை கொண்ட யூத ஆட்சியாளர்கள், ஃபலஸ்தீன் மண்ணில் இருந்து ஃபலஸ்தீனர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.
அவர்களை காணும்போது தன்னிலை மறந்து  சல்யூட் அடிப்பவர்களே வெள்ளைமாளிகையில் இருக்கிறார்கள். இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கதையாக மாறுவதற்கான காரணமும் இதுவே.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக