Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 ஜூலை, 2014

உணவில் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும்!

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டுமென உணவியல் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது. 
நாம் உண்ணும் உணவில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவை கலோரிகள் என்று கணக்கிடுகிறோம். அந்த கலோரி கணக்கின்படி தற்போது ஒருவர் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும்
செயற்கை சர்க்கரையின் அளவானாலும், பழச்சாறு, தேன் போன்றவற்றில் இயற்கையிலேயே இருக்கும் சர்க்கரையானாலும், ஒட்டுமொத்த உணவின் கலோரி அளவில் 10 சதவீதம் வரை சர்க்கரையில் இருந்து ஒருவர் பெறலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுவே அதிகபட்ச சர்க்கரையின் அளவாக ஒருவரின் உணவில் இருக்க வேண்டும் என்றும் அதுவே ஆரோக்கியமான உணவுமுறை என்றும் இதுவரை பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆலோசனைக்குழு பரிந்துரைத்து வந்திருக்கிறது. 
இந்த ஒட்டுமொத்த சர்க்கரையின் அளவை 10 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்கவேண்டும் என்று தற்போது பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. காரணம் ஒருவரின் உணவில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவரது உடல்பருமன் கூடுவதுடன், அவருக்கு சர்க்கரை நோயும் இதயநோர்களும் உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் பலமடங்கு அதிகரிப்பதாக இந்த அமைப்பின் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 
தற்போது மருத்துவர்களால் அனுமதிக்கப்படும் ஒருவரின் அன்றாட தேவையான 10 சதவீத கலோரிகளை அவர் சர்க்கரை மூலம் பெறலாம் என்கிற அணுகுமுறை உரிய பலனைத் தரவில்லை என்றும் மேலதிகமான இளம் தலைமுறையினர் கூடுதல் உடல் பருமனுடன் வளர்கிறார்கள் என்று தெரிவித்திருக்கும் உணவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த பிரச்சனையை எதிர்காலத்தில் குறைக்கவேண்டும் என்றால் உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். 
உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைக்கவேண்டும் என்கிற இந்த பரிந்துரை வரவேற்கத்தக்கது என்று கூறும் சென்னையின் பிரபல நீரிழிவுநோய்க்கான சிறப்பு மருத்துவர் ஏ ராமச்சந்திரன், இத்தகைய கட்டுப்பாடுகளை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அமுல்படுத்துவது கடினம் என்கிறார். 
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக