Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 21 ஜூலை, 2014

வேப்பூரில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி


ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வேப்பூரில் கட்டப்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வேப்பூரில் கட்டப்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் கடந்த ஆண்டு 13.9.2013 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கென்று பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியினை காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கென்று விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேப்பூரிலேயே இக்கல்லூரிக்காக ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 21 வகுப்பறைகளும், உயிர் தொழில் நுட்பவியல், கணனி அறிவியல், இயற்பியல் உள்ளி;ட்ட 4 பாடங்களுக்கான குளிரூட்டப்பட்ட ஆய்வு கூடங்களும், நுலகமும், கலையரங்கமும், 3 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வகையில் இக்கல்லூரி மிகப்பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மட்டுமல்லாது, பெரம்பலூரை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோந்த பெண்களுக்கும் இக்கல்லூரி வரபிரசாதமாக உள்ளது. தற்போது தரைதளம் மற்றும் முதல்தளம் கட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது தளத்திற்கான கட்டிடப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

எளிய மக்களி;ன் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்விக்கடன் பெறுவதற்காக, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தி;ன் சார்பில் 26.07.2014 மற்றும் 2.8.2014 ஆகிய தினங்களில் கல்விக்கடன் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக்கிளைகள் கலந்து கொள்ள உள்ளன.

26.07.2014 அன்று பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களும், 2.8.2014 அன்று வேப்பூர், ஆலத்தூர் வட்டாரங்கள் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும், கலந்து கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் முறையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கல்லூரி முதல்வர் முனைவர்.மாலதி, வேப்பூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் திரு.பழனிச்சாமி, வேப்பூர் ஊராட்சிமன்றத்தலைவர் திரு.கருணாநிதி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக