Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 21 ஜூலை, 2014

இறுதிப் பத்தில் இஃதிகாஃப்


இறுதிப் பத்தில் இஃதிகாஃப்

இறைவனை வழிபடும் எண்ணத்துடனும், அவனது நெருக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இறை இல்லாத்தில் பயபக்தியுடன் சிறிது காலம் தங்கி இருப்பது இஃதிகாஃப் என்று கூறப்படும்.
அச்சமயம் மிக அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தவிர, இறை இல்லத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது. பாலுறவு சம்பந்தமான நடவடிக் கைகளில் அறவே ஈடுபடக்கூடாது.

ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில்இஃதிகாஃப் இருப்பது நபி வழி ஆகும். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்து வந்துள்ளார்கள்" என்று இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார். (புகாரி, முஸ்லிம்).
எப்போதுமே இறை வழிபாட்டில் ஈடுபட்டிருப்பது நபிகளவாழக்கம், என்றாலும், ரமலான் மாத்தில் அவர்களுடைய இந்த ஆர்வம் இன்னும் அதிகமாகிவிடும். அதிலும் குறிப்பாக ரமலானின் கடைசிப் பத்து நாட்களை முழுக்க முழுக்கன் இறை வணக்கத்திலேயேகழிப்பார்கள்.பள்ளிவாசலில் சென்று அமர்வார்கள். உபரித் தொழுகையிலும், திருக்குர்ஆன் ஒதுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் ஈடுபட்டிருப்பார்கள்.
ரமலானுக்குப்பின் வரக்கூடிய பதினோரு மாதங்களில் ஷைத்தானுடனும்,ஷைத்தானிய சக்திகளுடனும் போராடுவதற்கு போதிய ஆன்மிக வலிமையை இறை நம்பிக்கையாளன் இந்த ரமலான் மாதத்தில் பெறுகின்றான். எனவே அண்ணலார் (ஸல்) அவர்கள் அத்தகையவலிமையைப் பெற கடைசிப் பத்து நாட்களில் முழுக்க முழுக்க இறை வணக்கத்தில் ஈடுபடடிருப்பார்கள்.
இது கட்டாயக் கடமையாக இல்லாவிட்டாலும், வலியுறுத்தப்பட்ட நபி வழி (சுன்னா) ஆகும்.
ஆண்டில் சில நாட்கள் மக்கள், குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடனான உலகத் தொடர்புகளைக் கைவிட்டு ஒதுங்கித் தனிமையில் இறை இல்லத்தில் இருக்கின்ற அரிய வாய்ப்பு இஃதிகாஃப் மூலம் கிடைக்கிறது. இஃதிகாஃப் மூலம் மன அழக்காறுகள் கழவப்பட்டு, உளத்தூய்மையும் மன அமைதியும் உருவாகும்.(ஃபத்ஹூல் பாரி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறை திருப்தியை நாடி யார் ஒரு நாள் இஃதிகாஃப் இருக்கின்றாரோ அவருக்கு, கிழக்கு மற்றும் மேற்கின் தூரத்தைப் போன்று மூன்று மடங்கு தூரம் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை தூரமாக்குவான்" (தபரானி).
இஃதிகாஃப் இருப்பவர் வீண் விவகார்ங்களைத் தவிர்த்து நற்செயல்களில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். திருக்குர்ஆனை பொருள் அறிந்து வாசித்தல், நபிமார்களின் வரலாறுகளைப் படித்தல் ஆகியவை மூலம் இறை நினைவிலேயே இருக்குமாறு வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி தாருஸ்ஸலாம் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக