Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 ஜூலை, 2014

கஞ்சி காய்ச்ச விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் மூலம் நீக்கம்...


காரைக்கால், நேரு நகர் கஞ்சி காய்ச்ச விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் மூலம் நீக்கம் சீல் உடைக்கப்பட்டது - எல்லாஹ் புகழும் இறைவனுக்கே!!! களத்தில் தமுமுக

நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.

நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது, அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதர்க்காக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனை அறிந்த ஹிந்து முன்னணி, RSS, BJP யினர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முஸ்லிம்கள் இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்போகிறார்கள், மேலும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் (சுடுகாடு) இங்கு அமைக்க போகிறார்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி, இதே விஷயத்தை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச விட கூடாது என வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும் முறையாக நேரு நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் விசாரிக்காமல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்ச கூடாது என கூறி ஏராளமான போலிசாரையும் அங்கு குவித்தனர், தகவல் அறிந்த தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் அங்கு கூடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் அரசு சமாதான கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு நகர் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் நோன்புக்காக கஞ்சி மட்டுமே காய்ச்சுகிறோம், சங்பரிவார் குறிப்பிடுவதுபோல் பள்ளிவாசலோ, முஸ்லிம்களின் அடக்கஸ்தலமோ (சுடுகாடு) அங்கு அமைக்க மாட்டோம் என தெரியப்படுத்திய பின்பும் புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் சங்பரிவார்களின் பொய் கூற்றை ஏற்று முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சென்ற 3.7.2014 அன்று இரவு 9 மணிக்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என தடை விதித்து, பள்ளிவாசல் இடத்திற்கும் சீல் வைத்தது.

அதன் பிறகு இந்த விஷயத்தை முறையாக கையாள நினைத்த முஸ்லிம்கள் காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் A K முஹம்மது யாசின் தலைமையில் கூடி இந்த விஷயத்தை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு ஒரு கமிட்டி அமைக்கப்படடது.

அதனடிப்படையில் நேரு நகர் ஜமாஅத் தலைவர் அப்துல் ரசாக், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ‪#‎தமுமுக‬மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என அரசின் தடையை ரத்து செய்தும், பள்ளிவாசல் இடத்திற்கும் வைத்த சீலை உடனே எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணை பெற்று வந்தனர். இதற்காக 3 முறை தமுமுக நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றம் சென்று வந்தனர்.

அதனடிப்படையில் இன்று (22.7.2014) காலை மாவட்ட ஆட்சியரை சந்தித்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் தமுமுக நிர்வாகிகள் உயர்நீதிமன்ற ஆணையை வழங்கினர். ஆணையை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தாசில்தார் பிரான்சிஸ் அவர்களுக்கு கஞ்சி காய்ச்சும் இடத்திற்கு வைக்கப்பட்ட சீலை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பிரான்சிஸ் அவர்கள் சீலை அப்புறப்படுத்தினார். அல்லாஹ்வின் மிகபெரும் கிருபையால் மீண்டும் இன்று முதல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்சும் பணிகள் தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக