Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மேன்மை தரும் நோன்பு


மேன்மை தரும் நோன்பு
நாம் யாரை வன்ங்குகிறோம்?
ரஹ்மானையா?... ரமலானையா?...


ரமலான் என்பது ஒரு பருவகால கொண்டாட்டமாக (சீசன்) மாறிவிட்டது. பள்ளிவாசல்களைப் பாரருங்கள் அப்படித்தான் தெரிகின்றது.

ரமலான் மாதத தலைப்பிறை கண்டுவிட்டால் சுனாமி பொல் மக்கள் கூட்டம் ஆரவாரித்து பள்ளிவாசலை நோக்கிப்படையெடுக்கிறது.
பின்னர் நடுப்பிறையின்போது நலிவடைந்து, பிறை 27 அன்று மீண்டும் ஒரு கோதிநிலை அடைந்து, ஷவ்வால் பிறையுடன் ஆறிப்போய் விடுகிறது என்று ஒர் அறிஞர் கூறினார்.
மிகச்சரியான கணிபு.

ஆம், மக்களைப் பாருங்கள். ரமலானின் ஆரம்ப நாட்களில் பள்ளிவாசலை நோக்கி அலையலையாகப் புறப்பட்டு, ரமலான் முடிந்த பின் பள்ளிவாசல் நோக்கி அலையலையாகப்புறப்பட்டு, ரமலான் முடிந்த பின் பள்ளிவாசல் பக்கமே தலை வைத்தும் படுக்காமல் இருப்பவர்களைப் பார்க்கும்போது இது சரியான கணிப்பாகவே தோன்றுகிறது.
இவர்கள்..எல்லாம் வல்ல ரஹ்மானை அல்லமாறாக ரமலானையே 
வணங்குகிறார்கள். ரமலான் வரும் போகும். ஆனால் ரஹ்மான்..?
நித்திய ஜீவன். என்றும் உயிருடன் அல்லவா இருக்கின்றான்.
ரஹ்மானை வண்ங்கியிருந்தால் ரமலான் முடிந்த பின்பும் பள்ளிவாசலுக்கு வந்திருப்பார்கள். ரமலானை வணங்கிய காரணத்தால் தான் ஒரு மாதத்துடன் தங்கள் வணக்கங்களை முடித்துக்கொண்டுவிட்டார்கள்.

இந்த மாதத்துடன் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கும் தொடர்பு மார்க்கத்துடன் இருந்திருந்தால் எவ்வள்வு நன்றாக இருக்கும்!
ரமலான் மாதத்துடன் இருக்கும் தொடர்பு போன்று அந்த மாதம் கொண்டுவந்த திருக்குர்ஆன்மீதும், அந்த குர்ஆன் கொண்டுவந்த மார்க்கத்தின் மீதும் இருந்திருந்தால் எவ்வள்வு நன்றாக இருந்திருக்கும்!

மார்க்கத்துடன் கொள்ள வேண்டிய தொடர்பு என்றால் என்ன? மார்க்கம் சரியானவை என்று வலியுறுத்தும் அனைத்தையும் சரியென்று என்று வலியுறுத்தும் அனைத்தையும் சரியென்று எற்றுக்கொண்டு, பிழை என்று கூறும் அனைத்தையும் பிழையாகப்பார்க்கின்ற நம்பிக்கை கொண்ட உள்ளத்தை உருவாக்க வெண்டும்.
இத்தகைய உள்ளம் உருவாகிவிட்டால், இறைவன் சரி என்று கூறியவற்றை தயக்கமின்றி, சிரமம் பாராது, இழப்புகளை அஞ்சாது, பாராட்டுகளுக்கு வளைந்து கொடுக்காது பின்பற்றும் மனோநிலை உருவாகும். இறைவன் பிழை என்று கூறியவற்றை தயக்கம் காட்டாது, ஆசைகளுக்கு அடிபணியாது விட்டுவிடும்.
மார்க்கத்துடன் இருக்கும் உறவுதான் பூமியில் வாழும் சாதாரன் மனிதனை வானளாவ் உயர்த்துகிறது. பிறக்கும்போது அற்பமாக இருந்த ஒருவனை இறக்கும்போது மா மனிதனாக மரணிக்கச் செய்கிறது. சுயநலம் மிகுந்த மனிதனை மக்கள் சேவகனாக மாற்றுகிறது.
எனவே மாதத்துடன் இருக்கும் உறவை பலப்படுத்துவதுபொல், மார்க்கத்துடன் இருக்கும் உறவையும் பலப்படுத்தவோம்.

நன்றி தாருஸ்ஸலாம் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக