Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 8 ஜூலை, 2014

ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லாது – உச்ச நீதிமன்றம்

இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த வக்கீல் விஸ்வலோசன் மாதன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் நாட்டின் நீதி துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன. ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ‘ஃபத்வா’ உத்தரவு, அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கில் இன்று இறுதி கூறப்பட்ட தீர்ப்பில் , ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஷரியத் கோர்ட்டுகளுக்கு எந்த ஒரு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. மக்களின் அடிப்படை உரிமையை பறிக்க எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இல்லை. தனி மனித உரிமைகளை பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகள் சட்ட விரோதமானவை என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக