Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 ஜூலை, 2014

நமதூரை பலபடுத்துவோம் !

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருபெயரால்....
நமதூர் இணையத்தளத்தின் பெருநாள் வாழ்த்து செய்தி
எல்லாம் கடந்து போகும்

இப்புனித மிக்க மாதத்தில் சில மாற்றங்களுடன் நமதூர் மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது நமதூர் செய்தி (Labbaikudikadunews) குழுமம். இத்தருணத்தில் சில விசயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

இறை நம்பிக்கையாளனுடைய வாழ்வில் வசந்தத்தையும் , நம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்ககூடிய மரணத்தையும் அறிவிக்கும் வகையிலும் மற்றுமோர் ரமலான் நம்மை கடந்து விட்டது.
நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த காலத்தை திரும்பிப் பார்த்தோமானால் நம்மில் பெரும்பாலானோர் மீண்டும் ஒருமுறை அந்த நாட்கள் வாராதா ? அப்படி வந்தால் நான் அதை செய்து விடுவேனே , இதனை சரி செய்து விடுவேனே “ என்று நினைத்துப்பார்ப்பது இயல்பு. ஆனால் , அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. மனிதனைப் படைத்த இறைவன் இவ்வுலகில் அவன் சுபிட்சமாக , அமைதியாக வாழ்வதற்கும் , மரணத்திற்க்குப்பின் உள்ள வாழ்வில் ஜெயம் பெறுவதற்குமான வழிவகைகளை இப்புவியில் ஏற்படுத்தாமல் இல்லை. அதனை மானுடர்களாகிய நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதுதான் பிரச்சனை.
நமதூரில் நடைபெறுகின்ற திருமண அனாச்சாரங்களை பற்றி பேசுகின்(றோம்)றனர் . ஆனால் தங்கள் வீடுகளில் நடைபெறுகின்றவற்றை வசதியாக விட்டு விடுகின்(றோம்)றனர் .
துபாயில் உள்ளவர்கள் நிர்வாகத்தையும் , நிர்வாகிகளையும் பற்றி கவலையுடன் பேசுகின்(றோம்)றனர் . ஆனால் என்றாவது தீன் இயக்க மீட்டீங்கில் கலந்து கொள்ளாமல் விட்டு விடுகின்(றோம்)றனர் .
இன்னும் ஊரை பற்றி எழுதி கொண்டே போகலாம் . ஆத்து கொல்லை , ஜமாலியா நகர் , பாதள சாக்கடை , கல்யாண மண்டபம் , பேரூராட்சி து.தலைவர் இது போன்ற என்னற்ற பிரச்சனைகளை பற்றி பேசுகின்(றோம்)றனர் . ஆனால் இதற்கான தீர்வு என்ன என்று கேட்டால் நமக்கு ஏன் வம்பு என மவுனமாக விட்டு விடுகின்(றோம்)றனர் .
யாரை ஏமாற்ற நாம் இந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருகின்றோம். பூமியின் சுழற்சியில் எல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோமா ? அவ்வாறல்ல ! எந்த மனிதரின் தேவைக்காகவும் , வசதிக்காகவும் பூமி வேகமாகவோ அல்லது நின்று நிதானித்தோ சுழலப்போவதில்லை. மனிதர்களின் செயல்பாடுகள்தான் அவனின் நன்மை , தீமை மற்றும் தேவைகளை தீர்மானிக்கும் காரணியாகும்.
குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமலான் மாதத்தின் நோக்கம் நம்மை “ தக்வா ” இறையச்சம் உடையவர்களாக மாற்றுவதுதான் என்கின்றான் இறைவன். இது போல பல ரமலான்கள் நம்மை கடந்து சென்று விட்டதே , என்ன மாற்றத்தை நம்முடைய உள்ளங்களில் கண்டுள்ளோம் , சமூகப்பணிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதையும் , கண்முன்னால் நடக்கும் அநீதியை கண்டு கொள்ளாமல் மவுனம் காப்பதும் இறையச்சத்தின் ஒரு பகுதி என்று நாம் நினைத்துக்கொண்டுள்ளோமா என்ன ?

ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு , “ எல்லாம் கடந்து போகும் ” என்பார்கள் . ஆம் ! இந்த ரமளானும் நம்மை கடந்து விட்டது . இனி வரும் மாதங்களை செயல்பாட்டிற்கும் , செயல்படுத்துவதற்க்குமுரிய மாதமாக மாற்றியமைப்போம். நம்மையும் நமது ஊரையும் நம் நமூகத்தையும் ஈருலகில் ஈடேற்றம் பெறச் செய்வோம். இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு 
நமதூர் செய்தி 
ஆசிரியர் குழுமம்

2 கருத்துகள்:

  1. EID UL FITR WISHES TO ALL.....
    ....ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. இயக்கங்கள் உருவாக்கத்தினால் நமதூருக்கு பயனா என்று முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும்...இயக்கங்களின் வளர்ச்சியே நமதூருக்கு வீழ்ச்சி.நமதூர் பிரச்சனையில் இயக்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளன.ஒரு விசயத்தில் ஒரு இயக்கமோ அல்லது தனி நபரோ தலையிட்டால் அதை மற்றோறு இயக்கம் அல்லது தனி நபர் சூழ்ச்சி நடை பெறுவதுதான் வேதனை...நமதூருக்கு எதிரி வெளியில் இல்லை//

    பதிலளிநீக்கு