Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 : இன்னொரு இன்னல் வருடம் கடக்கிறது!

சிறுபான்மை  மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக துயரம் தந்து இன்னொரு வருடம் கழிகிறது. ஆம்! இந்திய வரலாற்றின் பல கறுப்புப் பக்கங்களை தாங்கி 2013 நம்மிடமிருந்து விடை பெறுகிறது.

இந்திய நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அவலமாகக் கருதப்படுவது நரேந்திர மோடி தலையெடுத்தது. அவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததுதான் 2013ன் உச்சகட்ட கொடூரம்!

புறக்கணிப்போம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை..

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி - TNTJ


இன்று 29.12.2013 சென்னையில் நடைபெற்ற உரிமை முழக்க பொது கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நமதூரில் இன்று மூன்று இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப பட்டது.  

பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்-ஆட்சியர் தரேஸ் அஹமது !

அரசுத் திட்டங்களை செயல்படுத்த, பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில்,  பொதுமக்களுக்கான அனைத்து  நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும். அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர் மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம்.

திருச்சியை தினரடித்த முஸ்லீம்களின் தாய் சபை....

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூகத்தை வழிகெடுக்க ஒரு திட்டம்!

இந்த உலகில் பல மதங்கள் தோன்றியது. ஆனால் அதன் பொய் நிலையைப் பார்த்து மக்கள் அதை விட்டு விலகி அந்த மதம் அழிந்து விட்டதை நாம் பார்த்து இருக்கிறோம். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கம் இன்றும் தனிச் சிறப்பும் புகழும் உடைய மார்க்கம். இன்றும் மக்கள் அணி அணியாக இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். காரணம், இஸ்லாத்தில் மட்டும்தான் அவர்களுக்கு சம உரிமையும், சகோதரத்துவமும் உண்டு என்று அவர்கள் விளங்கிக் கொண்டனர்.

வியாழன், 26 டிசம்பர், 2013

பாதைமாறிய தீன் இயக்கம்...!!!!?

அப்புரம் என்ன வழக்கம் போலதான் தீன் இயக்க காரிய கமிட்டி கூட்டம்?

நம்பிக்கையாளர்களே ! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விற்கு பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீத மிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.
அல்குர்ஆன் 2:278

“ எல்லோரிடமும் ஒரளவு திருட்டுத்தனம் இருக்கிறது என்பதை நீங்கள் நம்புகீன்றீர்களா ? நான் அதை நம்புகின்றேன்.

முதியோர் இல்லங்கள் தேவைதானா?

ஒரு வயதான முதியவர் அவரது இல்லத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். அவரோடு அவரின் மகனும் அமர்ந்திருந்தான். அந்த முதியவர் தன் மகனைப் பல சிரமங்களுக்கிடையில் உயர் கல்வி வரை படிக்க வைத்திருந்தார்.

எங்கிருந்தோ வந்த ஒரு காகம் அந்த வீட்டின் மதிற் சுவரில் வந்து அமர்ந்தது. இப்பொழுது அந்த முதிய வயது தந்தை தன் மகனிடம் கேட்டார்: “என்ன இது?” மகன் பதிலளித்தான்: “இது ஒரு காகம்.”

சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் தந்தை கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “இது ஒரு காகம்.”

புதன், 25 டிசம்பர், 2013

இஸ்லாம் ஒன்றே தீர்வு!

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர்தான் “மூன்றாவது உலகம்” என்ற பதம் உருவாகிறது. இரண்டாம் உலகப் போர் என்பது காலனியாதிக்க நாடுகளிலிருந்து உருவான நேச நாடுகளைக் குறிக்கும்.

காலனியாதிக்கக் காலத்திற்குப் பின்னர் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு என்பது ஏகாதிபத்தியமாகவும், சுரண்டல் அமைப்பைக் கொண்டதாகவுமே இருந்தன.

அந்தச் சுரண்டல் அமைப்பில் வளங்கள் பெருமளவில் இடமாற்றம் செய்யப்பட்டன. பணக்கார நாடுகள் மேலும் வளம் கொழிக்கும் நாடுகளாயின. ஏழை நாடுகள் இன்னும் ஏழ்மையாகிப் போயின.

திங்கள், 23 டிசம்பர், 2013

முஸஃபர் நகர்: குளிரை தாக்குப் பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் உதவி!

உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் துயரமான சூழல் கடுமையான குளிரால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அங்கு நடத்தி வந்த துயர் துடைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முகாம்களில் நிவாரணப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் மவ்லானா முஹம்மது ஸதாப் தெரிவித்தார்.

அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்....



இன்று 23.12.2013 அதிகாலை 03:30 மணி முதல் அமீரத்தின் ஒரு பகுதியான

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

உயிரினும் மேலான உத்தம நபி!

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார். (சூரா அல் அஹ்ஸாப் 33:6)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒரு முறை உமர் (ரலி) தன் உயிருக்கு அடுத்தபடியாக அண்ணலாரை அதிகமதிகம் நேசிப்பதாகக் கூறினார். “நீர் உம் உயிரை விட அதிகமாக என்னை நேசித்தால்தான் உம்முடைய ஈமான் பூரணமடையும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நமது மாவட்டத்தில் அறிவகம் தாவா குழுவால் நடைபெற்ற அழைப்பு பணி....


“ இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள்  ” என அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், தங்கள் ஹஜ்ஜின் உரையின் இறுதியில் கூறினார்கள்.

சனி, 21 டிசம்பர், 2013

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்
















மாக்காவின்இமாம் சவுத் ஷரீம் அவர்கள் TWITTER ரில்

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்

عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "لن تقوم الساعة حتى تعود أرض العرب مروجًا وأنهارًا". رواه الإمام مسلم في صحيحه حديث رقم 1681 : 

அரபு பிரதேசங்கள் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாகவும் சோலை வனங்களாகவும் மாறிய பிறகே யுகமுடிவு நாள் நிகழும்
நபிகள் நாயகம்
முஸ்லிம் 1681
கடந்த சில தினங்களாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேர்கு பகுதிகளிலும் சிரியா லப்னான் ஏஜிப்ட் போன்ற நாடுகளிலும் கடுமையான பனிபொழிவுகளும் பனிமழைகளும் பொழிந்து அந்த பகுதிகளை பனி பிரதேசங்களாகவே மாற்றியுள்ளது

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெரம்பலூர் மாவட்ட தமுமுக விற்கு விருது – மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அஹமது வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சென்ற ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று

வியாழன், 19 டிசம்பர், 2013

ஓரினசேர்க்கையும் காங்கிரசும்.....


பாபாவின் மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . செய்தியாளர்களிடம் பேசும் போது 

புதன், 18 டிசம்பர், 2013

துபை மீண்டும் பொற்காலத்தை நோக்கி…!

100 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் சுமையால் உலகத்திலேயே உயரம் கூடிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை (முதலில் புர்ஜ் துபாய் எனப் பெயரிடப்பட்டிருந்தது. புர்ஜ் என்றால் டவர் என்று பொருள்)  அபுதாபிக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட  துபை, தனது பொற்காலத்தை நோக்கி மீண்டும் பிரகாசிக்க துவங்கியுள்ளது.

புர்ஜ் கலீஃபாவை இதுவரை ஆறரை கோடி பேர் கண்டு சென்றுள்ளனர். அவர்கள், அருகில் உள்ள ஆடம்பர ஷாப்பிங் மால்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய ஆடைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

திங்கள், 16 டிசம்பர், 2013

மோடி என்ற போலி பலுனை ஒற்றுமை என்னும் ஊசியால் குத்த ஓன்று இணைய வேண்டிய தருணம் இது

காலம் ஓர் ஆயுதம்!

‘காலம் ஓர் ஆயுதம்’ என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.

ஆமினா: (அஸர் தொழுகைக்குப் பின்) அன்புச் சகோதாரி ஆயிஷா… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

அழிவை நோக்கி காங்கிரஸ்....


ஞாயிறு, 15 டிசம்பர், 2013

அத்தாவின் அறியுரையும் ரபியின் துபாய் பயணமும்....

அல்லாஹ்வின் அழகிய பெயரால்...
அத்தாவின் அறியுரையும் ரபியின் துபாய் பயணமும்....

ரபி – அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அத்தா.......

அத்தா – வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்).... ரபி....பி என்ன நல்லா இருக்கியா பாபபபப !

பெரம்பலூர் மாவட்டத்திற்கான திட்டங்கள் அறிவிப்பு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

சமீபத்தில் 11, 12 மற்றும் 13.12.2013 ஆகிய நாட்களில் சென்னையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை தங்களின் பார்வைக்கு

வியாழன், 12 டிசம்பர், 2013

கண்கலங்க வைத்த ஓவியம்...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் கண்கலங்க வைத்த ஓவியம் மற்றும் சிரியாவின் உண்மை புகைப்படமும் தாய் மடியை தேடி அலையும் சிறுவர்கள் சிரியாவின் வீதிகளில் விலை மதிப்பற்ற எம் பிள்ளைகள் கேட்பாரின்றி கிடக்கிறான் ஆனால் அவனது சகோதரனான நாம் நமது பிள்ளைகளுடன் இங்கு சொகுசு மெத்தையில் உருண்டு வருகிறோம் . அல்லாஹ்தான் நம்மை பாதுகாக்க வேண்டும் எப்பொழுது விழிப்பாய் என் சகோதரா அந்த சிறுவர்களின் கேள்விகளுக்கு எப்பொழுது பதில் கொடுப்பாய் உலகத்தின் கண்களுக்கு இந்த புகை படங்களை காட்டுங்கள் கலங்காத கண் உண்டா என்பதை நான் பார்க்க விரும்புகிறேன் ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல் யா அல்லாஹ் ஒன்றும் அறியா அந்த பிஞ்சுகளில் சொந்தங்களை நீ பாதுகாப்பாயாக அவர்களின் தேவைகளை நீ பூர்த்தி செய்வாயாக ஆமீன் அந்த பிஞ்சுகளுக்காக மனம் இறங்கும்

படம் சொல்லும் பாடம்...


பிறர் மீது குப்பைகளை கொட்டாதீர்கள்.

புதன், 11 டிசம்பர், 2013

செவ்வாய், 10 டிசம்பர், 2013

குழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்!


"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…" - சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறினான்.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…

திங்கள், 9 டிசம்பர், 2013

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
 முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

ரியல் எஸ்டேட் மனைகளுக்கான அங்கீகாரமும் நிபந்தனைகளும்

ஒரு மனையை வாங்குவது பெரிய விஷயமில்லை. அந்த மனைக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதே முக்கியம். பலரும் அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கிவிட்டுப் பின்னர் அல்லல்படுவார்கள். ஒரு மனையை அரசும் அவ்வளவு சுலபத்தில் அங்கீகரித்து விடுவதில்லை. மனைகளை அங்கீகரிப்பதற்காகவே நிறைய வழிகாட்டு நிபந்தனைகளை வகுத்துள்ளது அரசு. அவற்றை மனை வாங்குபவர்களும் தெரிந்துகொள்வது பயன் தரும்.

ஜூம்மா சிந்தனை....

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும்!

பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 222)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “யா அல்லாஹ்! நல்ல காரியங்களைச் செய்யும்பொழுது நன்மையாக உணர்கிரார்களே, தீய காரியங்களைச் செய்யும் பொழுது, அதனைத் தவறாக உணர்ந்து, அதற்காக பாவமன்னிப்பு கோருகிறார்களே அந்தக் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுவாயாக!” (ஆதாரம்: இப்னு மாஜா)

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் பிரமிக்க வைக்கும் நிகழ்வு....!! Water Birth Get Knowledge



இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் பிரமிக்க வைக்கும் நிகழ்வு....!! Water Birth
Get Knowledge

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனான் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் அன்று என்ன பேசியதோ அவையனைத்தும் இன்று உலகில் நடப்பதை பல ஆண்டுகளாக உலகமே வியந்து வருகிறது. அப்படிப்பட்ட வியப்புகளில் இதுவும் ஒன்று....

தமிழகத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்: மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள்!


டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவுறுகின்றது.

சனி, 7 டிசம்பர், 2013

பெரம்பலூரில் த.மு.மு.க நடத்திய டிசம்பர் 6 போராட்டம்...



பெரம்பலூரில் த.மு.மு.க நடத்திய டிசம்பர் 6 போராட்டத்தின் ஒரு பகுதி. பெரம்பலூர் டிசம்பர் 6 போராட்டப்படங்கள் டிசம்பர் 6.....!! இந்தியாவின்

பாபரி மஸ்ஜித் மீட்பு குறித்து நோட்டீஸ் பிரச்சாரம் - பாப்புலர் ஃப்ரண்ட்...



நமதூரில் நேற்று என்றும் நம் நினைவில் மறக்காமல் இருப்பது ஃபாசிஸ எதிர்ப்பின் முதல் நிலை என்ற முழக்கத்தோடு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய பாபர் மஸ்ஜித் மீட்பு குறித்து நோட்டீஸ் பிரச்சாரம்!

வியாழன், 5 டிசம்பர், 2013

தீர்வை தேடி அலையும் ஜமாலியா நகர்....

நமதூர் (லெப்பைக்குடிக்காடு) பரந்து விரிந்த ஒரு ஊர். மக்கள் தொகையில் நமது மாட்டத்தில் உள்ள பேரூராட்சியில் நமதூர் முதல் இடத்தை வகிக்கிறது. மக்கள் தொகையிலும் மட்டுமல்ல சமூக ஒற்றுமையுடன் வாழும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டத்திற்கு முன்மாதிரியாக விளங்குகிறது. இவ்வாறு பரந்து விரிந்த்தொரு பன்முகத்தன்மை கொண்ட ஊரின் நிர்வாகம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏமாற்றத்தின் 21 ஆண்டுகள்:நாளை பாபரி மஸ்ஜித் தினம்!

உலக நாடுகளின் முன்னால் இந்தியாவை தலைக்குனிய வைத்து,போலீசும், ராணுவமும், அரசும், நீதி பீடமும் பார்வையாளர்களாக மாறஹிந்துத்துவா பாசிச சக்திகள் இந்தியாவின் வரலாற்றுச்சின்னமும்,முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜிதை தகர்த்து நாளை 21ஆண்டுகள் நிறைவுறுகிறது.1992- டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி பாபரி மஸ்ஜிதின் கும்பாக்களுடன்நாட்டின் கண்ணியம் வீழ்ந்தது.

புதன், 4 டிசம்பர், 2013

சி.ஐ.ஏ.வின் கரங்களில் ஆதார் அட்டை ஆவணங்கள்?

ஆதாரின் ரகசியத்தை பாதுகாப்பதில் நாட்டு மக்கள் எழுப்பும் கவலை பொய்யாகவில்லை. இதன் அறிகுறியை இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பு சுட்டிக்காட்டுகிறது.

இந்திய குடிமக்களின் அடிப்படை விவரங்களை ஆவணப்படுத்திய ஆதார் விவரங்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் கரங்களுக்கு செல்வதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தெரு முனை பிரச்சாரம் தாருஸ்ஸலாம்......


29/11/13 வெள்ளி அன்று மார்க்க  தெருமுனை பிரச்சாரம் சகோதரர் பாபுலர் சுல்தான் வீட்டில் [மேற்கு நடுத்தெரு] நடைபெற்றது.சகோ பிஸ்மில்லாஹ் கான் பைஜீ   அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்...

திங்கள், 2 டிசம்பர், 2013

தொடர்ந்து சாதனை படைத்து வரும் நமதூர் விஸ்டம் பள்ளி மாணவர்கள்...


வேப்பந்தட்டை அருகே உள்ள அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மனைவிக்கு 15 நாள்! கள்ளக் காதலிக்கு 15 நாள்! – லோக் அதாலத்தின் தீர்ப்பு!

முறைகேடான உறவுகள் பெருகி வரும் வேளையில் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறித்து தள்ளாடும் இந்தியாவின் நீதிமன்றங்கள் விசித்திரமான தீர்ப்புகளை அறிவித்து வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் ஓம்கார் ஈஸ்வர் என்ற பகுதியைச் சார்ந்த மின்சார துறையில் இருந்து ஓய்வு பெற்ற நபர், அதிகமான நேரத்தை கள்ளக் காதலியுடன் செலவழிப்பதாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தை அணுகினார் அவர் மனைவி.

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் ஒழுக்கக் கேடான வாழ்க்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை அறிவித்தது உச்சநீதிமன்றம்!

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தனியாகத் தவிக்க விட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

நாங்கள் (பிஜேபி) தான்....

ஆங்கிலம் எளிமையான மொழி தான்...சில இடங்களில் கவனமாக கையாளாவிட்டால் சொந்த செலவில் சூனியம் வைத்த கதை ஆகி விடும்...டெல்லி பிஜேபியின் இந்த போஸ்டர் போல ........