Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 டிசம்பர், 2013

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் ஒழுக்கக் கேடான வாழ்க்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை அறிவித்தது உச்சநீதிமன்றம்!

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தனியாகத் தவிக்க விட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு
அளித்த தீர்ப்பில்,”திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவமும் அல்ல.இதுபோல் சேர்ந்து வாழ்வோருக்கு வெளிநாடுகளில் சட்டப்பூர்வ அந்தஸ்துவழங்கப்படுகிறது.திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும், அவர்களுக்குப்பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நீதிபதி பினாகி சந்திர கோஷ்ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்துவாழும் பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய நெறிமுறைகளை அளித்துள்ளது.நிதி திரட்டுவது, வீட்டுக்குரிய ஏற்பாடுகள், பொறுப்பு ஒப்படைத்தல்,பாலியல் உறவு, குழந்தை வளர்ப்பு, வெளிப்படையாகப் பழகுதல் போன்றவற்றைஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கருதலாம்.கூட்டு வங்கிக் கணக்கு, இருவரது பெயரிலும் அசையா சொத்துக்களை வாங்குவதுஅல்லது பெண்ணின் பெயரில் வாங்குவது, வர்த்தகத்தில் நீண்ட நாள் முதலீடு,இருவரின் பெயரிலோ அல்லது ஒருவரது பெயரிலோ பங்குகளை வாங்குவது, வீட்டுபராமரிப்பு, சமையல் செய்வது, பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது, நீண்டநாள்நட்பு போன்றவற்றையும் ஆண்-பெண் இருவர் சேர்ந்து வாழ்ந்ததற்கானஅம்சங்களாகக் கூற முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக