Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

அத்தாவின் அறியுரையும் ரபியின் துபாய் பயணமும்....

அல்லாஹ்வின் அழகிய பெயரால்...
அத்தாவின் அறியுரையும் ரபியின் துபாய் பயணமும்....

ரபி – அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அத்தா.......

அத்தா – வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்).... ரபி....பி என்ன நல்லா இருக்கியா பாபபபப !

ரபி – அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன். நீங்க எப்படி இருக்கீங்க அத்தா....

அத்தா – அல்ஹம்துலில்லாஹ்.... என்ன பழைய மாதிரி எல்லாம் இப்ப வேலை செய்ய முடியல.

ரபி – என்ன தா செல்லுறீங்க ? என்ன செய்யீரது உடம்பிற்கு ?

அத்தா – என்னதா செல்லுறது. எங்க காலத்துல இருந்த குளத்தாள எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்.

ரபி – என்ன தா குளத்தாள என்ன ஆரோக்கியம் வரும் ?

அத்தா – உங்க அப்பனை போல அறிவில்லாமல் இருக்கியோ ! குளத்தாள எந்த அளவு நமதூர் மக்கள் பயன் அடைந்தார்கள் என்று உங்க நன்னி அத்தா இருந்தா உனக்கு செல்லி இருப்பார்.

ரபி – என்ன தா சொல்லூறீங்க ?

அத்தா – ஆமா ! குளம் இருந்த வரைக்கும் நமதூர் மக்களிடம் சக்கரை , இதயம் மற்றும் இரத்த கொதிப்பு போன்ற வியாதியை கேள்வி பட்டு இப்போமா ?
இப்ப பாரு ஆவூனா வீட்டுக்கு ஒரு ஆள் ஏதாவது ஒரு வியாதியில் ஆற்பட்டு கிடைக்கிறோம்.

ரபி – குளத்தாள இவ்வளவு நன்மைகள் உள்ளனவா ? அப்படினா எதனால குளத்தை பராமறிக்காம இருக்காங்க ? அப்ப நாங்கலாம் ஆரோக்கியமாக வாழ என்ன வழி ?

அத்தா – இதற்கான வழி எல்லாம் நம்முடைய தூதர் இடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அதை நாம் பின்பற்றும் வரை நாம் வழி தவருவதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார்கள். அதனையே விரும்பியுள்ளார்கள்.

சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்பு கேட்க துண்டியுள்ளார்கள்.

“ இறைவா ! கவலை , துயரம் , இயலாமை , சோம் பேறித்தனம் , கஞ்சத்தனம் , கோழைத்தனம் , கடன் , சுமை , மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் (புகாரி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்....

உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் , அம்பெறிதல் , குதிரையேற்றம் ஆகியவைகளை கற்றுக் கொடுங்கள்.

ரபி – ஆமா அத்தா இந்த ஹதீஸை நான் நஜாத் பள்ளிக்கு ஜூம்மா தொழுகை போகும் போது இதை கேள்விபட்டு இருக்கிறேன்.

அத்தா – இனி எங்க காலம் முடிந்து விட்டது. இனி உங்க காலம் தான். இனி வரும் காலம் நமதூருக்கு ஆரோக்கியம் என்பது எட்டா கனியாக மாறிவிடுமே என்பது போல உள்ளது நம்ம நிர்வாகிகளின் செயல்களை கானும் போது. ஆமா நீ துபாயிலிருந்து தானே வந்து இருக்கே ? திரும்ப போகும் போது ஒன்று நாபகம் வைத்துக்கொள். அங்கே தீன் இயக்கம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா ?

ரபி – தீன் இயக்கமா ? ஆ ஆமா ஆமா ஏதோ வருசத்துக்கு ஒர முறை சந்தா என்று வசூல் செய்ய வருவாங்களே அவங்கதானே தா ...

அத்தா – உம் உம் ..... அவங்க கிட்ட எடுத்து சொல்லங்க பா. குளத்தை வேலை பார்க்க பேசுங்க..........

ரபி – அவங்கள இன்னுமா நம்பி கொண்டு தான் இருக்கீங்களா?

அத்தா – அப்படி எல்லாம் பேசாதீங்க பா. இப்படி எல்லாம் இருந்தா நம்முடைய ஊரை யாரும் வழி நடத்துவது. உங்களை போன்றவர்கள் இப்படி இருப்பதால தான் ஊரில தகுதி இல்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தில் உள்ளனர்.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கிறான். அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களை (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் , ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களே நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (திருக்குர்ஆன் 3 : 164)

சரி மஃரிப் பாங்கு செல்லுராங்க வா தொழுகைக்கு போவோம்.....


2 கருத்துகள்:

  1. தீன் இயக்கம் என்று சொல்லாதிங்க அத்தா தீன் வட்டி இயக்கம் என்று சொல்லுங்க அப்பதான் சரியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ரபி: அட போங்க அத்தா முன்ன மாதிரி இப்போ தீன் இயக்கம் செயல்படல அத்தா
    அத்தா: என்ன செல்லுற ரபி. அத்தா முகத்தில் ஓர் அதிர்ச்சி!!!
    ரபி: அமாம் அத்தா வருடதிற்கு இரண்டு கூடம் போடுவதே பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு