Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 5 டிசம்பர், 2013

ஏமாற்றத்தின் 21 ஆண்டுகள்:நாளை பாபரி மஸ்ஜித் தினம்!

உலக நாடுகளின் முன்னால் இந்தியாவை தலைக்குனிய வைத்து,போலீசும், ராணுவமும், அரசும், நீதி பீடமும் பார்வையாளர்களாக மாறஹிந்துத்துவா பாசிச சக்திகள் இந்தியாவின் வரலாற்றுச்சின்னமும்,முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜிதை தகர்த்து நாளை 21ஆண்டுகள் நிறைவுறுகிறது.1992- டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி பாபரி மஸ்ஜிதின் கும்பாக்களுடன்நாட்டின் கண்ணியம் வீழ்ந்தது.


அன்று ஒரு கறுப்பு ஞாயிறாக வரலாற்றில்பதிவானது.தேசத்தந்தை காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா கண்டமிகப்பெரிய தீவிரவாத செயலுக்கு உலகம் சாட்சியானது.உச்சநீதிமன்றத்திற்கு கூட சவால் விடுத்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயலுக்கு காரணமானவர்கள் இன்றும் சுதந்திரமாக சுகம்அனுபவிக்கின்றார்கள்.எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பால் தாக்கரே,அசோக் சிங்கால், உமா பாரதி, கிரிராஜ் கிஷோர், ஸாத்வி ரிதாம்பராஉள்ளிட்டோர் பாபரி மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டினார்கள் என்று லிபர்ஹான் கமிஷன் கண்டுபிடித்த பிறகும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்க ஒரு சிறுவிரலைக்கூட அசைக்க நமது சட்டங்களால் இயலவில்லை.

மஸ்ஜிதை தகர்ப்பதில் நேரடியாக பங்கேற்ற சங்க்பரிவார தலைவர்களுடன்,கரசேவகர்கள் என்ற காவி பயங்கரவாதிகள் இறையில்லமான பாபரி மஸ்ஜிதைஇடிக்கும்போது வெறும் 11 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட ராணுவத்தைசம்பவம் அங்கு செல்ல அனுமதிக்காமல் பாபரி மஸ்ஜித் முழுவதும்இடிக்கப்படும் வரை பூஜை அறையில் கதவை சாத்திவிட்டு உள்ளே இருந்த முன்னாள்பிரதமர் நரசிம்மராவ், 1989-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் நிலத்தில் ராமனுக்குகோயில் கட்ட அடிக்கல் நாட்ட அனுமதி அளித்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட மதசார்பற்ற(?) தலைவர்களும் இந்த பயங்கரவாத குற்றத்தில்சம பங்காளிகளே.

நரசிம்மராவால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் 16ஆண்டுகளுக்கு பிறகு பல கோடி ரூபாய்களை செலவழித்து அளித்த அறிக்கையில்சங்க்பரிவார தலைவர்கள் சதித்திட்டம் தீட்டி பாபரி மஸ்ஜிதை இடித்துதள்ளியதாக தெளிவாக தெரிவித்திருந்தார்.ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்புவழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ முதலில் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள்மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் சுமத்தாதது சந்தேகத்தைஏற்படுத்துகிறது.பின்னர் சதித்திட்டம் குற்றம் சுமத்தியபோது அலகாபாத்உயர்நீதிமன்றம் சி.பி.ஐயின் நடவடிக்கையை ரத்துச் செய்துஉத்தரவிட்டது.

இதற்கு எதிராக சி.பி.ஐ சமர்ப்பித்த மேல் முறையீடு தற்போதுஉச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.பாபரி மஸ்ஜித் நிலத்தின் உரிமைக்குறித்த வழக்கும் தற்போதுஉச்சநீதிமன்றத்தில் உள்ளது.பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.77 ஏக்கர்நிலத்தை ஹிந்து,முஸ்லிம், நிர்மோஹி அகாரா ஆகிய 3 தரப்பினருக்கும்பாகப்பிரிவினைச் செய்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அலகாபாத்உயர்நீதிமன்றம் ஓர் அதிசய தீர்ப்பை அளித்தது.எவ்வித ஆதாரமும், ஆவணங்களும்இன்றி கற்பனையான புராண கதைகளை ஆதாரமாக கொண்டு இத்தீர்ப்புவழங்கப்பட்டது.இத்தீர்ப்பை 2011-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதிஉச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது.

1993-ஆம் ஆண்டு ஜனவரி மாதம்அரசு கையகப்படுத்திய 67.03 ஏக்கர் நிலமும், 1994-ஆம் ஆண்டிலும், 2002-மார்ச் மாதத்திலும் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஸ்டேட்டஸ்கோ(பழைய நிலைதொடர) நீடிக்கச்செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் தற்போதும் பூஜைகள் தங்குதடையின்றி நடந்து வருகின்றன.நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஓரிறைவனை வணங்கிவந்த மஸ்ஜிதில் அவர்களுக்கு வழிப்பாட்டு  உரிமை மறுக்கப்பட்டு,ஹிந்துக்களுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கிய ஃபைசாபாத் நீதிமன்றத்தின்அநீதியான தீர்ப்பின் சாதகம் இன்றும் தொடருகிறது.14 கம்பெனி ஆயுத போலீஸ்பாதுகாப்பு வழங்கி கோடிக்கணக்கான ரூபாயை ஆண்டு தோறும் செலவிட்டு தற்காலிகசட்டவிரோத கோயிலை அரசு பராமரித்து வருகிறது.பாபரி மஸ்ஜிதை மறக்கடிக்கச் செய்ய அதனை இடித்தவர்களால் இன்று வரைஇயலவில்லை.பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் ஒரு நாள் நீதி வெற்றிப் பெறும்என்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் உள்ளனர்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக