Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 டிசம்பர், 2013

முஸஃபர் நகர்: குளிரை தாக்குப் பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் உதவி!

உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் துயரமான சூழல் கடுமையான குளிரால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அங்கு நடத்தி வந்த துயர் துடைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முகாம்களில் நிவாரணப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் மவ்லானா முஹம்மது ஸதாப் தெரிவித்தார்.


கடுமையான குளிரின் காரணமாக ஏராளமான குழந்தைகள் மரணித்த செய்தியைத் தொடர்ந்து, அச்சூழலுக்கு காரணமான நிலைமைகளை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்று மவ்லானா ஸதாப் கூறினார்.

போர்வைகள், படுக்கைகள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான உணவையும் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் விநியோகித்தனர். ஜோலா, லோயி, ஹுஸைன்பூர், கேடா, மலக்பூர், பாத்தெட், ரோதன், சுனேதி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் கடுமையான துயரத்தை அனுபவிக்கும் குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 300 கிட்டுகள் வழங்கப்பட்டன.

முஸஃபர் நகரில் உள்ள அகதிகள் முகாமில் 3-வது தடவையாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான குளிரில் குழந்தைகள் மரணித்த பிறகும் உ.பி. மாநில அரசு அசையாமல் இருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பது கண்டனத்திற்குரியது என்று ஸதாப் தெரிவித்தார்.

கூடாரங்களில் உள்ள அகதிகளை உடனடியாக கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இல்லையெனில் மரணங்களுக்கு பொறுப்பு உ.பி. மாநில அரசையே சாரும் என்று அவர் நினைவூட்டினார்.

மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

2 கருத்துகள்:

  1. அபுபக்கர் துபாய்24 டிசம்பர், 2013 அன்று AM 8:15

    பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்..

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

    அல்லாஹ் ஒவ்வொறு காலகட்டத்திலும் அவனுடைய மார்க்கத்தை மேலேங்க வைப்பதற்காக ஒரு சில போராலிகளை உண்டாக்குகிறான்.

    நிச்சயமாக சொல்லுகிறோன் நான் துபாயில் வசித்து வருகிறோன். இப்போது டிசம்பர் குளிர் காலம் எங்களால் அதிகாலை தொழுகைக்கு எழுந்திருக்கிறது என்பது இந்த குளிரீலால் போவையை இலுத்து போட்டு தூங்குவது தான் இதமாக உள்ளது. ஆனால் அதையும் மீறி கடமையை நிறைவேற்ற செல்லுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்....

    ஆனால் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் நம்முடைய இந்த சகோதரிகளுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் பாராமல் இப்படி தங்களை அர்ப்பணிக்கும் இந்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் உதவி செய்வானாக.

    பதிலளிநீக்கு