வேப்பந்தட்டை அருகே உள்ள அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்திய பள்ளி விளை யாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கான தேர்வு ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உமர்முக்தர், முகமது இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அளவிலான போட்டி க்கு தேர்வு பெற்றனர். இவர்கள் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் இந்திய பள்ளி விளையாட்டு கழகத்தின் தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான தேசிய அளவிலான தேர்வு, தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவர் சையது தாஹீர்அலி தேர்வு பெற்றார்.
இதேபோல தேசிய அளவிலான மகளிர் எறிபந்து போட்டி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் இப்பள்ளியின் மாணவி சுஸ்மிதா தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார். இவர்கள் டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட் டியில் பங்கேற்பார்கள்.
தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஜியாவுதீன், முதல்வர் பவுல், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன் மற்றும் கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக