Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தமிழகத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்: மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள்!


டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவுறுகின்றது.

21 ஆண்டுகள் கழிந்த பிறகும் அன்று நிகழ்ந்த அநீதிக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்தும், அதன் நினைவலைகளை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதற்கும் பல்வேறு வழிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இவ்வாண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக பல்வேறு எதிர்ப்பு நிகழ்வுகள் நடந்தேறின.

த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தியது. பாபர் மஸ்ஜித் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், இடித்தவர்கள் மீதான வழக்கை துரிதப்படுத்த வேண்டும், மீண்டும் பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மாவட்ட தலைநகரங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பாபரி மஸ்ஜித் இடிப்புக் குறித்த தகவல்களை பேச்சாளர்கள் தங்களது உரையில் குறிப்பிட்டனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ‘பாபரி மஸ்ஜித் மீட்பும், பாசிச எதிர்ப்பும் தேசத்தின் கடமை’ என்ற தலைப்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.


‘மறக்காமலிருப்பதே பாசிச எதிர்ப்பின் முதல் நிலை’ என்ற தலைப்பில் போஸ்டர் பிரச்சாரம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குறித்த தகவல்கள் அடங்கிய நோட்டீஸ் விநியோகம், பாபரி மஸ்ஜித் புகைப்படம் பதித்த டீ ஷர்ட்டுகள் அணிதல், பாபரி மஸ்ஜித் குறித்த ஆவண அனிமேஷன் சி.டி திரையிடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.


ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.


மனித நேய மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாகவும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

நன்றி நியூ இந்தியா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக