Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

திருச்சியை தினரடித்த முஸ்லீம்களின் தாய் சபை....

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நேற்று திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்தடை அதனால் தொழில்கள் மூடப்படும் சூழ்நிலை இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாக்குகள் சிதறி விடும் சூழலை ஏற்படுத்தி விடாத நிலைப்பாட்டை உருவாக்கிடுமாறு தமிழக கட்சிகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஜனநாயக சமய சார்பற்ற சமூக நீதியை நிலைநிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை தொடருமாறு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
10 சதவீதம் இட ஒதுக்கீடு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அரசியல் சாசனத்தின் 44–வது பிரிவை நீக் கவேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதமும், அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் பிறப்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கி அதில் 6 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான தனி உள் ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தி தரவேண்டும். இஸ்லாமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்பினர் சான்று வழங்க வேண்டும்.
பள்ளிவாசல் திருமண பதிவை ஏற்று பாஸ்போர்ட்டு வழங்க அனுமதிக்க வேண்டும், காஜி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியில் முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும், திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரணி
முன்னதாக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகில் இருந்து முஸ்லிம் லீக் பேரணி புறப்பட்டது. இந்த பேரணியில் மாவட்ட வாரியாக தொண்டர்கள் கலந்து கொண்டு அணிவகுத்து வந்தனர். பேரணி சாஸ்திரி சாலை, தென்னூர் வழியாக மாநாட்டு திடலை அடைந்தது.
மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான இ.அகமது, தேசிய செயலாளர் முகமது பஷீர், மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர், அப்துல் ரகுமான் எம்.பி, பொருளாளர் ஷாஜகான், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பாரூக், மாவட்ட நிர்வாகிகள் ஹபிபுர் ரகுமான், அப்துல் சலீம், அப்துல் முத்தலீப், முகமது பாரூக் உள்பட பலரும் பேசினார்கள்.



5 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்...
    ஜனாசாவை அல்லாவினால் மட்டுமை எழுப்ப முடியும்...ஏற்கன்வை இந்தியன் முஸ்லிம் லீக் ஜனாசாவா ஆகி விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர்களை ஏளனம் செய்வது,குறைமதியுடன் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு,உன்னாலோ அல்லது நீ சார்ந்த இயக்கத்தாலோ இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்யப்பார்.நன்மையில் முந்திக்கொள்-வதில் போட்டி இருக்கலாம், ஆனால் நம் சமுதாய இயக்கங்கள் அடுத்தவர்களிடம் குறைகாணுவதில்தான் தங்கள் நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்கள். இந்த ஈன புத்தி மாறாதவரை சமுதாய முன்னேற்றம்,ஒற்றுமை என்பது கேள்விக்குறியே?

      நீக்கு
  2. மாஷா அல்லாஹ் ....
    கிட்ட தட்ட பல லட்சம் பேர் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆனால் செய்தி தாள்கள் மற்றும் சேனல்களில் வரதது மிகவும் வருத்தமாக இருக்கிறது சகோதரா

    பதிலளிநீக்கு
  4. ஆனால் செய்தி தாள்கள் மற்றும் சேனல்களில் வரதது மிகவும் வருத்தமாக இருக்கிறது சகோதரா

    பதிலளிநீக்கு