Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் பிரமிக்க வைக்கும் நிகழ்வு....!! Water Birth Get Knowledge



இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் பிரமிக்க வைக்கும் நிகழ்வு....!! Water Birth
Get Knowledge

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனான் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் அன்று என்ன பேசியதோ அவையனைத்தும் இன்று உலகில் நடப்பதை பல ஆண்டுகளாக உலகமே வியந்து வருகிறது. அப்படிப்பட்ட வியப்புகளில் இதுவும் ஒன்று.... அல்லாஹ் தன்னுடைய திருமறை திருக்குர்ஆனில் கூறுகிறான்... 

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்கு கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு 
மறக்கடிக்கப்பட் டவளாக இருந்திருக்கக் கூடாதா ? என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை 
ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலி ருந்து வானவர் அழைத்தார். (திருக்குர்ஆன் 19:23.24)

என்று திருக்குர்ஆன் பேசுகிறது.

திருக்குர்ஆனின் அந்த வசனத்திற்கும் கீழே உள்ள செய்தியையும் பாருங்கள். பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்காகவும் என்ன தொடர்பு ? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மேலும் 
மெய்பித்திருக்கிறது. பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியா விலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தை தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும்
முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட  நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது.
குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக