Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 21 டிசம்பர், 2013

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்
















மாக்காவின்இமாம் சவுத் ஷரீம் அவர்கள் TWITTER ரில்

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்

عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "لن تقوم الساعة حتى تعود أرض العرب مروجًا وأنهارًا". رواه الإمام مسلم في صحيحه حديث رقم 1681 : 

அரபு பிரதேசங்கள் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாகவும் சோலை வனங்களாகவும் மாறிய பிறகே யுகமுடிவு நாள் நிகழும்
நபிகள் நாயகம்
முஸ்லிம் 1681
கடந்த சில தினங்களாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேர்கு பகுதிகளிலும் சிரியா லப்னான் ஏஜிப்ட் போன்ற நாடுகளிலும் கடுமையான பனிபொழிவுகளும் பனிமழைகளும் பொழிந்து அந்த பகுதிகளை பனி பிரதேசங்களாகவே மாற்றியுள்ளது



இது அண்மை காலங்களில் அரேபியாவின் பாலைவன பிரேதேசங்களில் கண்டிராத காட்சியாகும் என ஊடகங்களும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்

மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும்மேர்கு மாகனங்களில் ஆய்வாளர்களையே வியக்க வைக்கும் விதத்தில் பொழிந்துள்ள பனி பொழிவுகள் முஹம்மது நபி இறைவனின் உண்மை துதர் என்பதை அறுதியிட்டு உறுதிகூறும் சான்றுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என மார்க்க அறிஞரும் மாக்காவின் கதீபும் இமாமுமான சவுத் ஷரீம் அவர்கள் குறிப்பிட்டார்கள்

சவுத் ஷரீம் அவர்கள் தனது TWITTER பக்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்கள் 

சோலைகளோ நதிகளின் ஓட்டுமோ இல்லாத பாலைவன பகுதியில் வாழ்ந்த நபிகள் நாயகம் இந்த பகுதிகள் ஒரு காலத்தில் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாக மாறும் அதன் விளைவாக இந்த பகுதிகள் சோலைகளாக மாறும் என்றும் கூறிய நபி மொழியை எடுத்து கூறி இந்த நபி மொழியை மெய்பிக்கும் விதமாகத்தான் இந்த பனி பொழிவுகள் அமைந்து உள்ளது என எழுதியுள்ளார்கள்

இந்த பனி பொழிவுகள் நதிகளுக்கும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையா உள்ளது 

கடந்த ஞாயிறன்று(15ஃ12ஃ2013) சவுதி அரேபியாவின் தபுக் நகரை சுற்றியுள்ள பகுதிகளின் மலை முகடுகளும் மேட்டு பகுதிகளும் பனி மலர்களைபோல் காட்சி தந்ததை பார்கும் போது தபுக் யுத்தத்தின் போது தபுக் மண்ணில் நின்று கொண்டு கண் மணி நபிகள் நாயகம் முஹாத் பின் ஜபலுக்கு கூறிய அறிவுரை நம்மை அதிசயிக்க வைக்கிறது நபிகள் நாயகம் முஹாத் பின் ஜபலை அழைத்து கூறினார்கள் முஹாத் பின் ஜபல் அவர்களே 

عن مُعَاذَ بْنَ جَبَلٍ أَخْبَرَهُ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَامَ غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يَجْمَعُ الصَّلاَةَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا حَتَّى إِذَا كَانَ يَوْمًا أَخَّرَ الصَّلاَةَ ثُمَّ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ دَخَلَ ثُمَّ خَرَجَ بَعْدَ ذَلِكَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا ثُمَّ قَالَ « إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يُضْحِىَ النَّهَارُ فَمَنْ جَاءَهَا مِنْكُمْ فَلاَ يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِىَ ». فَجِئْنَاهَا وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلاَنِ وَالْعَيْنُ مِثْلُ الشِّرَاكِ تَبِضُّ بِشَىْءٍ مِنْ مَاءٍ - قَالَ - فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا ». قَالاَ نَعَمْ. فَسَبَّهُمَا النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ - قَالَ - ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ قَلِيلاً قَلِيلاً حَتَّى اجْتَمَعَ فِى شَىْءٍ - قَالَ - وَغَسَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِيهِ يَدَيْهِ وَوَجْهَهُ ثُمَّ أَعَادَهُ فِيهَا فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ مُنْهَمِرٍ أَوْ قَالَ غَزِيرٍ - شَكَّ أَبُو عَلِىٍّ أَيُّهُمَا قَالَ - حَتَّى اسْتَقَى النَّاسُ ثُمَّ قَالَ « يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ أَنْ تَرَى مَا هَا هُنَا قَدْ مُلِئَ جِنَانًا ». رواه مسلم في صحيحه

நீங்கள் மிக நீண்ட காலம் வாழும் வாய்பை பெற்றால் இந்த பகுதிகள் தோட்டம் துறவுகளால் நிரம்பி வழியும் காட்சியை நீங்கள் காண முடியும்
முஸ்லிம்

இந்த நபிகள் சொல்லுக்கு சாட்சியாகத்தான் தபுக்கை சுற்றி நிகழ்ந்த காட்ச்சிகள் அமைகின்றது
குறிப்பு
நபிமொழியின் அரபு மூலத்தை முழுமையாக நாம் கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம் என்பதை கவனத்தில் கொள்க

இது முகநூல் இருந்து எடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக