நமதூர்
(லெப்பைக்குடிக்காடு) பரந்து விரிந்த ஒரு ஊர். மக்கள் தொகையில் நமது மாட்டத்தில்
உள்ள பேரூராட்சியில் நமதூர் முதல் இடத்தை வகிக்கிறது. மக்கள் தொகையிலும் மட்டுமல்ல
சமூக ஒற்றுமையுடன் வாழும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டத்திற்கு முன்மாதிரியாக
விளங்குகிறது. இவ்வாறு பரந்து விரிந்த்தொரு பன்முகத்தன்மை கொண்ட ஊரின் நிர்வாகம்
என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஊர் என்பது ஒரு புவிசார்
விளக்கம் மட்டும் அல்ல. ஜமாத்தின் கட்டுகோப்பு மட்டுமல்ல , மக்களின் நலன்னளும்,
சுகாதாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், நிர்வாகிகளின் (பணி) செயலுக்கு ஒரு
குறுகிய விளக்கமே அளிக்கப்பட்டு வருவது துரதிஷ்டவசமானது. வேலியே பயிரை மேய்வது போல
ஊர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜமாலியா நகர் விசியத்தில் மக்களின் வாழ்க்கையை
சீர்குலைப்பதை கிழக்கு மற்றும் மேற்கு ஜமாத் ஒரு சில நிர்வாகிகளின் மூலம் கண்டு
வருகிறோம். ஜமாலியா நகர் பிரச்சனை பற்றி எத்தனை முறை எடுத்து சொன்னாலும் இரண்டு
சுன்னத்துவல் ஜமாத் சார்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உருவாகவில்லை.
ஜமாலியா நகரில் நடந்த(தாக)
முறைகேடுகளை பற்றி கடந்த மாதம் நமதூரில் ஒரு நோட்டிஸ் வலம் வந்தது. அதில் ஒரு சில
குற்றச்சாட்டுகள், ஒரு சில பரிந்துரைகள் காணப்பட்டன.
ஆனால் இது வரைக்கும் அதை
(நோட்டிஸை) பற்றி யாரும் வாய் திறப்பதாக தெரியவில்லை. மக்கள் கண்டு கொள்ளாத இருப்பது
வேதனைக்கு உரியதாகும்.
வழக்கம் போல் தீன் இயக்கம்
மவுனம் காப்பது வேதனைக்குறியது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு
முன்னுறிமை கொடுத்து அவர்களது வாழ்க்கையில் அமைதி தவழ முயற்சி எடுப்பதற்கு பதிலாக,
நாங்கள் நிர்வாகிகள் என்ற மமதையில் திரிவது நல்லது அல்ல. நிர்வாகிகளின் இச்செயல்,
ஒரு பாரம்பரிய சுன்னத்துவல் ஜமாத்தை ஆளுவது மக்களின் பிரதி நிதிகளா? என்ற கேள்வியை
எழுப்புகிறது.
ஊரின் பெருவாரியான மக்களை
பீதியில் ஆழ்த்துவது தான் ஒரு சில நிர்வாகிகள் கருதுகின்றனர். சுன்னத்துவல் ஜமாத்
அச்சுருத்தலுக்கு தவ்ஹித் ஜமாத்தை பூச்சான்டிகாட்டி மக்களை ஒருவித முட்டாளாக
ஆழ்த்தி வருகிறது நிர்வாகம்.
ஊரின் பள்ளிவாசல் கடை வாடகை
விடுவதில் ஏழை எளிய மக்களை புறம்தள்ளி விட்டு ஆதிக்கவர்க்கத்தின் நலனுக்காக ஏழைகள்
எக்கே கெட்டாலும் எமக்கென்ன என்ற கொள்கையைத்தான் நமது நிர்வாகம் வேர்ரூண்டி
உள்ளது. (உதாரணம்-பேரூராட்சி தலைவர்)
ஜமாலியா நகர் என்ற பெயரில்
ஊர் மக்களை வஞ்சிக்கிறது ஜமாலியா நகர் அபிவிருந்து கமிட்டி. ஊரின் நடுத்தர மக்கள்
ஒழிந்தாலும் பரவாயில்லை தன்னுடைய விசுவாசிகள் பலனடைய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர
இவர்களின் பிண்னணியில் உள்ள நோக்கம் தான் என்ன?
ஒரு காலத்தில் நிர்வாகத்தை
எதிர்தவர் இன்று பஞ்சாயத்து போர்டு தலைவராக்கி அழகு பார்க்கிறது
நிர்வாகம்.
இத்தகையதொரு நெஞ்சுரம் இல்லாத நிர்வாகத்தால்
எவ்வாறு ஊரையும், மக்களையும் பாதுகாக்க முடியும்? இதற்கு மாற்றீடாக வர துடிப்பவர்களோ
வெறுப்பை கொள்கையாக கொண்டவர்கள். இவர்களால் மக்களை ஓர் நிலை படுத்த முடியுமா?
ஊரில் உள்ள அனைத்து மக்களை
அரவணித்து கொண்டு, எந்தச் சூழலிலும் அநீதி இழைக்காத கொள்கையை கொண்டவர்கள் நம்ம ஊரை
ஆள வேண்டும்.
இவ்வுலகில் இஸ்லாம்
என்றதொரு கொள்கை நீண்ட தொரு காலம் உலகை ஆண்டுள்ளது. அந்த கொள்கை எங்கெல்லாம்
கோலோச்சியதோ அவ்விடங்களில் மக்கள் நீதியுடனும், நேர்மையுடனும் ஆளப்பட்டார்கள்.
முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முஸலிம் அல்லாதோரும் இந்த ஆட்சியை விரும்பினர்.
இஸ்லாத்தை வாழ்வியல்
நெறியாக கொண்ட ஆட்சியாளர்கள் இறைவேதமான திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்திற்கேற்ப
அரசை வழிநடத்தினார்கள்.
“ முஃமின்களே! நியாயத்தை
நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு
கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத்
தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபத்திக்கு மிக
நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
செய்யவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.“ (அல்குர்அன் 5 : 8)
இந்த வசனத்திற்கான நடைமுறை
உதாரணங்களை இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் நெடுங்கிலும் காண முடியும். முஸ்லிம்களின்
வரலாற்றை பல ஆண்டுகள் ஆய்வுச் செய்த வரலாற்றாசிரியர் பிலிப் ஹெச் ஹிட்டி இவ்வாறு
குறிப்பிடுகிறார்.
“ இஸ்லாம் வெற்றி கொண்ட
பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தை உடனே எற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் உடனே
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நிர்பந்திக்கப்படவும் இல்லை. மாறாக, பல ஆண்டுகள்
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த பின்னரே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
காரணம் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து அவர்களுக்கு கிடைத்த நீதி, பாதுகாப்பு
மற்றும் அதன் மூலம் கிடைத்த நிம்மதியாகும்.”
திறந்த மனதுடன்,
மாச்சரியங்களை ஒதுக்கி வைத்து விட்டு நமதூர் (சுன்னத்துவல் ஜமாத்) நிர்வாகிகள்
நமது மார்க்கத்தின் உள்ள சட்ட திட்டங்களை பின்பற்ற கடமைப்பட்டுள்ளார்கள். இது தான்
நமக்கு இம்மை மறுமை வாழ்கையின் வெற்றி இறுக்கிறது.
இனிவரும் காலங்களில்
பொதுமக்களாகிய நாம் நம்முடைய சமுதாயத்தை திருத்தி கொள்ளாத வரை எந்த ரூபத்திலும்
இறைவன் நமக்கு உதிவி அளிக்கமாட்டான் என்பதுதான் இறைவாக்கு....
மிதிபட்ட பாம்பும், அடிபட்ட
புலியும், வஞ்சிக்கப்பட்ட மக்களும், பழிதீர்க்காமல் இருந்ததில்லை! இந்த வாக்கு
நமதூர் மக்களுக்கு பொருந்துமா ? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அமீரகத்திலிருந்து
நமது நிருபர்
இனிவரும் காலங்களில் பொதுமக்களாகிய நாம் நம்முடைய சமுதாயத்தை திருத்தி கொள்ளாத வரை எந்த ரூபத்திலும் இறைவன் நமக்கு உதிவி அளிக்கமாட்டான் என்பதுதான் இறைவாக்கு...இது எந்த இறைவாக்கு .
பதிலளிநீக்கு