பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சென்ற ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று
(19/12/2013) அன்று மாலை 5.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரத்ததான சேவைக்கான விருதினை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து இரத்ததான சேவைக்கான கேடயமும், சான்றிதழும் தமுமுக வின் பெரம்பலூர் மாவட்டத்தலைவர் K.A. மீரா மொய்தீன் பெற்றுக்கொண்டார்.
சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக முதல்வரிடம் இரண்டு விருதுகளை பெற்ற பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் M. சுல்தான் மொய்தீன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். அந்த சந்திப்பின் போது காலியாக உள்ள டவுன் காஜி பணிக்கு ஹாஜியை நியமிக்க கோரிக்கை மனுவை அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கோரிக்கை பரிசீலிப்பதாக தெரிவித்தார். கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

த.மு.மு.க லப்பைக்குடிக்காடு

மனிதநேய மக்கள் கட்சி லப்பைக்குடிக்காடு
நமது இணையத்தளத்தின் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக