Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 30 நவம்பர், 2013

மக்கள் திரள் போராட்டம் - த.மு.மு.க

துபாய் Duty freeல் ஆயிரம் பணியிடங்கள் !

Dubai (UAE) Dubai Duty Free Recruitment : DubaiDuty freeல் ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.(எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு) கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான ‘அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்’ டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

வியாழன், 28 நவம்பர், 2013

எல்லோரும் எதிர்பார்த்த “எக்ஸ்போ 2020” (Expo 2020) துபைக்குக் கிடைத்தது! -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “எக்ஸ்போ 2020” வாக்கெடுப்பில் துபை வெற்றி பெற்றது.
எக்ஸ்போ 2020 கிடைப்பதற்காக துபை (யுஏஇ), பிரேசில் (ஸாவோ போலோ), எகடனின்பர்க் (ரஷ்யா), இஸ்மிர் (துருக்கி) ஆகிய நான்கு நகரங்கள் போட்டியிட்டன. முன்னதாக போட்டியில் பங்கெடுக்கும் நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஏன் தங்கள் நாட்டு நகரத்திற்கு ஓட்டு போடவேண்டும் என்று விளக்கி (Presentation) பேசினர்.

முதல் விளக்கப் பேச்சை துபை சார்பாக அமீரக அமைச்சர் ரீம் அல் ஹாஷிமி நிகழ்த்தினார். அவருடைய சக்தி மிக்க பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

புதன், 27 நவம்பர், 2013

நாளை நமதூரில் மின் தடை அறிவிப்பு..

குன்னம் அருகே உள்ள மங்களமேடு தானியங்கி துணை மின் நிலையத்தில் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறு கிறது. இதனால் மங்களமேடு தானியங்கி துணை நிலையத் திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்ன கரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர், வி.களத்துர்,

செவ்வாய், 26 நவம்பர், 2013

அநீதி இழைக்கப்படும் முஸலிம் சிறை வாசிகள்....

கிராமத்து பழமொழி...
சாமி வரம் கொடுத்தாலும்..!
பூசாரி வரம் கொடுக்க மாட்டான்..!!என்று

சட்டத்தின் முன் அணைவரும் சமம்..
இந்த தாரக மந்திரம் ஏட்டளவில் உள்ளது.

லப்பைகுடிக்காட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். SDPI

SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 24.11.2013 நேற்று மதியம் 3.00 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் A.சித்தீக் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் டாக்டர் A.முஹமது ரபீக் தலைமை தாங்கினார்.

திங்கள், 25 நவம்பர், 2013

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........
அன்னை இருக்கிறாள் தந்தை இருக்கிறார் ,மனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!

பெற்றோர்களைப் பேணுவோம்!

பெற்றோர்களைப் பேணுவோம்!


உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்துக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா?” (அபீபி நஹீ ஆயேகா?).....

என்னோடு வேலை பார்க்கும் சகோதரர் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களாக சொந்த நாட்டைத் துறந்து துபையில் பணி செய்து வருகின்றார். இந்தியாவிற்கு விடுப்பில் சென்று தனது திருமணத்தை முடித்து திரும்பினார். அங்கு அவர் தனது மனைவியுடன் வாழ்ந்த காலம் 28 நாட்கள் மட்டுமே.
மிக வேகமாகக் கழிந்த விடுப்பு, அன்பு மனைவியிடமிருந்து பிரிந்தது போன்றவையால் கண்ணீருடன் பறந்தார் விமானத்தில். மீண்டும் வேலையில் சேர்ந்தாகிவிட்டது.

இவ்வளவுதான் உலகம்!

இன்றைய அவசர உலகில் மனிதன் மிக வேகமாக பயணித்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு இந்த உலகம் நம்மை அவசரமாக இழுத்துச் செல்கின்றதோ அதே போன்று இந்த உலக வாழ்க்கையிலிருந்து நாம் பிரியும் தருணமும் நம்மை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.
நாம் வரலாறுகளை புரட்டும்போது நபி நூஹ் (அலை) இதே பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது. நம் முன்னோர்கள் 100 வயது, 110 வயது, அதையும் தாண்டி திடகாத்திரமாக, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாக நாம் இன்றும் பெருமையாக பேசிக் கொள்கிறோம்.

சனி, 23 நவம்பர், 2013

அமீரகத்தில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்...

 அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச்செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. 
அல்குர்ஆன் 16 : 65

கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் புதிய நிர்வாகிகள்

கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் புதிய நிர்வாகிகள்

வெள்ளி, 22 நவம்பர், 2013

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ் - ஓயாமல் போராடும் தமுமுக !

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ் - ஓயாமல் போராடும் தமுமுக !


450 ஆண்டுகாலம் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடித்து தள்ளப்பட்டது.

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:

புதன், 20 நவம்பர், 2013

எனது பெயர் ஜனாஸா!

நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.
என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.

குஜராத் ஆட்டோகிராப்:ஜாஹிரா ஷேக் எங்கே..?


எரிக்கப்பட்ட குஜராத் பெஸ்ட் பேக்கரி
ஜாஹிரா ஷேக் எங்கே..? மும் பையில் தனது தாயார் மற்றும் சகோ தரர்களோடு இருக்கிறார்.. திருமண மாகி தற்போது கணவரோடு புது தில்லியில் வசிக்கிறார்.. உத்தரப்பிர தேசத்தில் இருக்கும் தனது பூர்வீக கிராமத்திற்கே சென்று விட்டார்.. இல்லையில்லை.. குஜராத்தில் உள்ள ஆஜ்வா ரோடு பகுதியில் உள்ள கே.ஜி.என் நகரில்தான் வசிக்கிறார் என பல்வேறு விதமான யூகங்கள் அவரைப்பற்றி வந்து கொண்டே இருக்கின்றன..

திங்கள், 18 நவம்பர், 2013

எல்லாம் அல்லாஹ்வுடையதே!

“பேரீச்சம் பழம், ரொட்டி, இறைச்சி…” – அப்பொழுது சாப்பிட்டு முடித்த உணவுகளின் வகைகளை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் ஆச்சரியத்துடன் அண்ணலாரை நோக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன சொல்லப் போகிறார்கள்? அதிகம் யோசிக்கும் முன்பே அண்ணலார் தொடர்ந்தார்கள்:

தொருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசலிப்பு நிகழ்ச்சி...



அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 15.11.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிரச்சாரத்தின் இறுதினாலான அன்று காலை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றன.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

நமதூரில் ஓர் முன்மாதிரியான பள்ளிக்கூடம்....

அறிவியல் கண்காட்சி அழைப்பிதழ்...

இன்று துபாயில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....



இன்று 17.11.2013 சரியாக அஸர் தொழுகை நோரத்தில் துபாயில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறக்கியது. இந்த மழை

69 மனைகளுடன் காணாமல் போன நம்பிக்கை துரோகிகள்...



“அய்யய்யோ மேயப் போன என் கோழிய காணோம்னு” நம்ம ஊரு கிராமத்துப் பக்கம் சொல்றதப் போல, 69 மனை காணோம்னு ரொம்ப சாதாரணமாக சொல்றாங்க!

அதாவது, கடந்த 14.11.2013 அன்று இப்படியொரு அதிர்ச்சி செய்தி வெளியானது.

வெள்ளி, 15 நவம்பர், 2013

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கு இனிப்பு துணைத் தலைவர் வழங்கினார்


குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கு துணைத் தலைவர் இனிப்பு வழங்கினார்.  
பெரம்பலூர் மாவட் டம், லெப்பைக்குடிக்காடு  பேரூராட்சி அலுவலகம் பின்புறம்  மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மைய பள்ளி உள்ளது. இங்கு குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கடந்த 10.11.2013 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்...

கடந்த 10.11.2013 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்...
நமதூரில் 10.11.2013 அன்று மாலை கிழக்கு ஜெய்லானி தெருவில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றன. இந்த விளையாட்டு போட்டியை SDPI கட்சியின் லெப்பைக்குடிக்காடு கிளை தலைவர் சகோதரர்

வியாழன், 14 நவம்பர், 2013

நாளை கிழக்கு ஜூம்மா பள்ளி வாசலில் புதிய நிர்வாகம் ....


ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2013 : மனம் முழுவதும் நிரம்பிய பிரம்மாண்டம்!

09/11/13 சனிக்கிழமை அன்று ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன்.

என்னுடன் என் நண்பர்கள் மௌலவி இப்றாஹீம் ஃபைஜி, மாங்குடி ரியாஸ், நாகூர் ஷாஃபி ஆகியோர் வந்தனர். துபையிலிருந்து புறப்பட்டோம். ஷார்ஜா நெருங்கும்போழுதே சரியான போக்குவரத்து நெரிசல் இருந்தது. எங்கள் கார் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் சென்றது.

மறைப்பதா? திறப்பதா?

வீடு என்றால் அது உறைவிடத்தையும், தனிமையையும் தர வேண்டும். உணவு என்றால் அது பசியைப் போக்க வேண்டும்; உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தர வேண்டும்.

உறைவிடத்தையும், தனிமையையும் தராத வீடு இருந்து என்ன பயன்? பசியைப் போக்காத, ஊட்டச்சத்தைத் தராத உணவினால் என்ன பயன்? இதற்காகச் செலவழிக்கப்படும் செலவு வீணல்லவா?

ஆனால் மனிதனுக்கு இன்னொரு அடிப்படைத் தேவையான ஆடை விஷயத்தில் மனிதன் இப்படி யோசிப்பதில்லை. அதிலும் குறிப்பாக பெண்களின் ஆடை விஷயத்தில்!

புதன், 13 நவம்பர், 2013

மனிதர்களின் முழங்காலில் இதுவரை கண்டறியப்படாத புதிய தசை நார்!

மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.
தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லெமன்ஸ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இருவரும் கண்டறிந்துள்ளனர்.

ஹமாஸின் செய்தி தொடர்பாளராக முதன் முதலாக பெண் நியமனம்!

மாஸ் இயக்கம் தனது அதிகாரபூர்வ பேச்சாளராக ஒரு பெண்ணை நியமித்திருப்பது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இனிமேல் இவரே சர்வதேச ஊடகங்களுக்கு ஹமாஸின் கருத்துக்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்.

23 வயதான இஸ்ரா பிரித்தானிய ஆங்கிலத்தில் சரலமாக பேசக்கூடயவர். இவர் ஹமாஸ் இயக்கத்தில் ஆரம்பத்திலிருந்து வளர்ந்து வந்தவரல்ல என்பதும் இவர் தனது அலுவலகத்தில் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் புகைப்படத்தை தொங்கவிடாமல் இருப்பதும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற விஷயங்கள்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

நமதூரில் கடந்த 10.11.2013 அன்று நடந்த மருத்துவ முகாம்...


நமதூரில் கடந்த 10.11.2013 அன்று நடந்த மருத்துவ முகாம்...


 அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 10.11.2013 அன்று காலை 10 மணியளவில் நமதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றன.

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ - விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

திங்கள், 11 நவம்பர், 2013

ஆஷுரா நோன்பின் சிறப்புகளும் அன்றைய நாளில் நடைபெறும் அனாச்சாரங்களும்

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.
ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

நமதூரில் டெங்கு காய்ச்சல் ஒழிக்க சிறப்பு முகாம்....



நேற்று 9.11.2013 அன்று நமதூரில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் லெப்பைக்குடிக்காடு கிளை ஏற்பாடு செய்து இறுந்தது. இந்நிகழ்ச்சியை லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் Dr. கலைமணி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.

நமதூர் மக்கள் பயன்பெறுவார்களா?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
கர்ப்பிணிகளுக்கு 12ஆயிரம் ரூபாய்:முஸ்லிம்கள் பயன் பெறுவார்களா...? தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிதிட்டம் செயல்படுத்தபடுகிறது. இந்தத் திட்டம் குறித்து முஸ்லிம்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 4ஆயிரம் ரூபாய்கள் மூன்று தவணைகளாக மொத்தம் 12ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர் உட்பட எந்த அரசு அதிகாரியிடமும் கர்பிணிப் பெண்கள் எந்தச் சான்றும் பெறத் தேவையில்லை.

நமதூரில் கடந்த 8.11.2013 அன்று நடைபெற்ற யோகா பயிற்சி

நமதூரில் கடந்த 8.11.2013 அன்று நடைபெற்ற யோகா பயிற்சி 


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி

சமையல் எரிவாயு(Gas Sylinder) கலன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை குறிப்பு..!

சமையல் எரிவாயு(Gas Sylinder) கலன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை குறிப்பு..! நாள்தோறும் நாம் பயன்படுத்துகிற சமையல் எரிவாயு கொள்கலனின் ஆயுட்காலத்தை நாம் என்றேனும் எண்ணிப்பார்ப்பதுண்டா.. அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நமக்கேது நேரம் என்கிறீர்களா? ஒரு நிமிடம் மட்டும் அதற்கு ஒதுக்குங்களேன்.. ஒரு பெரும் ஆபத்தை தவிர்க்க இந்த ஒரு நிமிடம் உதவுமென்றால் நீங்கள் நிச்சயம் இதற்கு ஒதுக்கித்தான் ஆக வேண்டும். இறைவனைத் தவிர எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின் ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும்.

சனி, 9 நவம்பர், 2013

மில்லத் நகரில் நாளை புதிய பள்ளிவாசல் கட்டிட துவக்க விழா! -



வி . களத்தூர் மில்லத் நகரில் பழைய வாலிபால் மைதானத்தில் ” மக்காஹ் மஸ்ஜித் ” என்னும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டிட துவக்கவிழா இன்ஷா அல்லாஹ் வருகிற 10-11-2013 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது . அதுசமயம் நாட்டாண்மை & ஜாமத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய இறை இல்லம் அமைய துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது ..

நமதூரில் நாளை நடைபெறும் மருத்துவ முகாம்...

நமதூரில் நாளை நடைபெறும் மருத்துவ முகாம்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

புதன், 6 நவம்பர், 2013

32-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி (SIBF-2013) இன்று துவக்கம்! நம்ம தமிழ் நூல்களும் உள்ளன...

53 நாடுகள், 1010 பதிப்பகங்கள், 4,05,000 புத்தகங்கள், 180 மொழிகளில் பங்கு பெறுகின்றன!
அப்துல் கலாம், கமல் ஹாசன் பங்கேற்பு!!
ஷார்ஜா: 32-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (Sharjah International Book Fair – SIBF 2013) இன்று நவம்பர் 6-ம் தேதி ஷார்ஜாவில் துவங்குகிறது. நவம்பர் 6 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மூன்றாம் ஆண்டாக இலக்கியச்சோலை தமிழ் நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் பங்கேற்கின்றன.

அணிதி இழைக்கப்பட்டவர்களில் தூவாவிற்கு அஞ்சி கொல்லுங்கள்....


தவ்ஃபீக் சுல்தனா தந்தையின் குமுரல் 
CBI க்கு வழக்கை மாற்ற இந்திய தேசிய லீக் கட்சி யின்
வழக்கறிஞரிடம் வக்காலத்தில் கையெழுத்து
போட்டு எப்படியும் நீதி கிடைக்க உதவுங்கள் ..என்று
தவ்ஃபீக் சுல்தனா தந்தை அக்பர் பாஷா கண்ணீரோடு 
கையேழுத்திட்டார் ..

தவ்ஃபீக் சுல்தனா வழக்கு இழுப்பறி ஏன் ?
காவல்துறை தொடர்ந்து செய்யும் குழப்பங்கள்
முஸ்லீம் சிறுமி என்பதினாலா ?

திங்கள், 4 நவம்பர், 2013

TNPSC GROUP- II FREE COACHING CLASSES


இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கிறதே ??


இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கிறதே ?? கொடுமையான நரக வாழ்க்கைங்க , திரும்பிய பக்கம் எல்லாம் பணம் இருக்கும்,ஆனால் நிம்மதி இருக்காதுங்க , நாங்கள் விமானம் ஏறினோமோ அன்னைகே எங்கள் காதல் தோல்விதாங்க, பணம் வேலை இந்த இரண்டு சக்கர வாகன பயணம் எங்கள் வாழ்க்கைங்க , மனம் விட்டு பேச ஒரு ஆறுதல் கிடையாது. ஒரு தமிழனை பார்த்தால் குடும்பத்தில் ஒருவனை பார்ப்பது போல் ஒரு சந்தோஷம்ங்க,

ஞாயிறு, 3 நவம்பர், 2013

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் – யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் 9 ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள். · இதனால் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். · ஆஷுரா நோன்பின் பின்னணி நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள், இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ (ஃபிர்அவ்) னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான்,

பெரம்பலூரில் நடைபெற்ற ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிரச்சார துவக்க விழா...




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரம்பலூரில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மராத்தான் மற்றும் பிரச்சார துவக்க விழா!

இன்று நடைபெறும் தர்பியா (எ) நல்ஒழுக்க பயிற்சி முகாம்...