எரிக்கப்பட்ட குஜராத் பெஸ்ட் பேக்கரி
ஜாஹிரா ஷேக் எங்கே..? மும் பையில் தனது தாயார் மற்றும் சகோ தரர்களோடு இருக்கிறார்.. திருமண மாகி தற்போது கணவரோடு புது தில்லியில் வசிக்கிறார்.. உத்தரப்பிர தேசத்தில் இருக்கும் தனது பூர்வீக கிராமத்திற்கே சென்று விட்டார்.. இல்லையில்லை.. குஜராத்தில் உள்ள ஆஜ்வா ரோடு பகுதியில் உள்ள கே.ஜி.என் நகரில்தான் வசிக்கிறார் என பல்வேறு விதமான யூகங்கள் அவரைப்பற்றி வந்து கொண்டே இருக்கின்றன..
குஜராத் மாநிலத்தில் வடோதரா நகரில் (அன்றைக்கு பரோடா) அனுமான் தேக்ரி பகுதியில் அவரது குடும்பத்தாருக்குச் சொந்த மாக இருந்த 22,000 சதுர அடி சொத்து என்னதான் ஆனது... அந்தச் சம் பவத்திற்கு பிறகு அந்தப் பகுதியில் வேறு ஒரு வாடகை வீட்டில் குடி யிருந்தார்.. அது என்ன ஆனது.. தற் போது அவருடன் யார் யாரெல்லாம் வசிக்கிறார்கள்.. என அவர் குறித் தான கேள்விகளும் தொடர்கின்றன.. என்னதான் நடந்தது? வாருங்கள். உண்மைகளைத் தேடிப் பயணிப் போம்..யார் இந்த ஜாஹிரா ஷேக்.. உங் களுக்கு குஜராத் பெஸ்ட் பேக்கரி சம் பவம் குறித்து தெரியுமென்றால் நிச் சயம் ஜாஹிரா ஷேக் குறித்தும் தெரிந்திருக்கும்.. பில்கிஸ் பானுவைப் போலவே தனது 19வது வயதில் அந்த கொடூரக் காட்சிகளைக் காண நேர்ந்த பரிதாபத்திற்குரிய பெண்தான் ஜாஹிரா ஷேக்.. 2002ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதி குஜராத் முழுவதும் பற்றி யெரிந்த கலவர நெருப்பின் தீ நாக்கு கள் அவருக்குச் சொந்தமான பெஸ்ட் பேக்கரியையும் சுவைத்தன.
ஒன் றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 14 பேரையும் உயிரோடு எரித்து தீர்த்த பின்னரே அது அடங்கியது.. தனது கண் முன்னாலேயே தனது உற வினர்கள், பணியாட்கள் உட்பட அனைவரும் எரித்துக் கொல்லப் பட்ட காட்சியை மறக்க முடியுமா அவரால்.. குற்றவாளிகள் 21 பேரை யும் அவர் நேரடியாக அடையாளம் காட்டினார்.. அவர் செய்த அந்த குற்றம் தான் இன்று வரை அவரை விடாமல் துரத்திக் கொண்டே இருக் கிறது.. அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அவருக்கு அடைக்கலம் அளித்த அவரது உறவினர் சொல்கிறார்.. ஜாஹிரா ஷேக் மிக துணிச்சலான பெண்.. அசாத்திய தைரியத்துடன் குற்றவாளிகள் அனைவரையும் அடையாளம் காட்டினார். சட்டத் தின் முன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என உறுதியாக தன்னால் முடிந்த வரை போராடினார்.. அதற் காக நிறைய இழப்புகளையும், வலி களையும் எதிர்கொள்ளவும் நேர்ந்தது. அவருக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்பிலான 22,000 சதுரஅடி பரப் பளவில் அமைந்த பெஸ்ட் பேக்கரி யை இழக்க நேர்ந்தது.. அந்தப் பகுதி யில் மன அமைதியோடும், பாதுகாப் போடும் வாழ்க்கையைத் தொடர முடிய வில்லை அவரால்.. அவர் எங்கு சென்றாலும் கண்காணிக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் சாட்சியம் அளிக்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.. குற்றவாளி களில் ஒருவரால் நேரடியாகவே ரூபாய் 22 இலட்சம் தருவதாக பேரம் பேசப்பட்டார். ஆனால் இவை எது வுமே அவரை திசை திருப்பவில்லை.
ஜாஹிரா ஷேக் சொல்கிறார்.. எனது உயிருக்கு ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் போதெல் லாம் நானும் எனது தாயாரும் பெஸ்ட் பேக்கரி சம்பவத்தைப் போலவே உயிரோடு எரிக்கப்படுவோம் என கடுமையாக எச்சரிக்கப்பட்டேன். வழக்கில் முதலில் எனக்காக வாதாட வந்தவர்கள் பிறகு பின்வாங் கினர். மிக அதிக தொகையை வழக் கிற்கான கட்டணமாகக் கேட்டனர். எங்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான பெஸ்ட் பேக்கரி கட்டி டத்தை விற்பனை செய்ய முயன்றும் முடியவில்லை.. வெறும் 4 இலட்சத் திற்கு தான் விலை போகும் என தகவல் பரப்பினர். அங்கு எரித்துக் கொல்லப்பட்டவர்களின் ஆவி அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டி ருப்பதாகவும், எனவே அந்த கட்டி டத்தை வாங்குவதில் பாதுகாப்பு இல்லை எனவும் உள்ளூர் செய்தித் தாள்களில் செய்திகளும் வெளியிடப் பட்டன.. இத்தகைய சம்பவங் களுக்கு பின்னால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவத்சவா செயல் பட்டதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.. இத்தகைய பின் னணியில் தான் பிறழ் சாட்சியம் அளித்தார் எனவும், உண்மைகளை மறைத்தார் எனவும் குற்றம் சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜாஹிரா ஷேக்.. குற்றம் சாட்டப்பட்ட 21 பேரும் போதிய ஆதாரமில்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டனர்.
இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித் திரமான வழக்குகளை சந்தித்திருக் கிறது என்ற பராசக்தி திரைப்பட வச னத்தைப் போல இந்த நீதிமன்றங்கள் எத்தனையோ விசித்திரமான தீர்ப்பு களையும் கூட அளித்திருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. ஜாஹிரா ஷேக்கிற்கு ஆதரவாக பல முயற்சிகளில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் சொல் கிறார். திருப்பங்களும், சூழ்ச்சிகளும் நிறைந்த சதுரங்க ஆட்டத்தில் அதிகாரமிக்கவர்களால் இயக்கப் படும் சிப்பாய்கள் மட்டுமே இந்த ஜாஹிரா ஷேக் போன்றவர்கள். அவர் களால் எதுவும் செய்துவிட முடியாது. உயிரை இழப்பதை விட மிகக் கொடு மையானது உயிர் குறித்த அச்சத்துட னேயே வாழ்வது.. அத்த கைய அச் சத்திடம் இருந்து ஜாஹிரா ஷேக் கிற்கு விடுதலை தான் எப்போது?ஆர்.பத்ரி
மின்னஞ்சல் மூலமாக
சேக்ராஷித்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக