பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரம்பலூரில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மராத்தான் மற்றும் பிரச்சார துவக்க விழா!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விழிப்புணர்வு பிரச்சார விழிப்புணர்வுமரத்தான் பேரணி துவக்க விழாவாக நவம்பர் 3 காலை 11 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் சகோ.காஜா சரீப் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சகோ. அமீர் மற்றும் SDPI மாவட்ட தலைவர் டாக்டர் ரபி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
பேரணி இறுதியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது .இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக