Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 6 நவம்பர், 2013

அணிதி இழைக்கப்பட்டவர்களில் தூவாவிற்கு அஞ்சி கொல்லுங்கள்....


தவ்ஃபீக் சுல்தனா தந்தையின் குமுரல் 
CBI க்கு வழக்கை மாற்ற இந்திய தேசிய லீக் கட்சி யின்
வழக்கறிஞரிடம் வக்காலத்தில் கையெழுத்து
போட்டு எப்படியும் நீதி கிடைக்க உதவுங்கள் ..என்று
தவ்ஃபீக் சுல்தனா தந்தை அக்பர் பாஷா கண்ணீரோடு 
கையேழுத்திட்டார் ..

தவ்ஃபீக் சுல்தனா வழக்கு இழுப்பறி ஏன் ?
காவல்துறை தொடர்ந்து செய்யும் குழப்பங்கள்
முஸ்லீம் சிறுமி என்பதினாலா ?
1)தவ்ஃபீக் சுல்தனா உடல் இருந்த ரயிவே தண்டவாலத்திற்க்கு
காவல்துறை சென்று பிரேதத்தை பார்க்கும் போது முறைப்படியான் 
காவல்துறை நாய் வரவழித்து குற்றவாளிகள் பற்றிய 
மோப்பம் பிடிக்க ஏற்பாடு செய்யாதது ஏன் ?
2)தவ்ஃபீக் சுல்தனா போட்டு இருந்த உடைகளில் இருந்த கை
ரேகை பதிவு செய்யாதது ஏன் ?
3)தவ்ஃபீக் சுல்தனா வீட்டில் உள்ள குடும்பத்தாரின் வாக்குமூலம்
இதுவரை பெறாததின் நோக்கம் என்ன ?
4)தவ்ஃபீக் சுல்தனா படித்த பள்ளியில் விசாரனை நடத்தாதின் 
நோக்கம் என்ன ?
5)தவ்ஃபீக் சுல்தனா வீட்டின் அக்கம் பக்கம் உள்ள மக்களிடம் 
விசாரனை நடத்தாதின் நோக்கம் என்ன ?

கொலை செய்யப்பட்டவுடன் காவல்துறை செய்ய வேண்டிய முதல் புலன் விசாரனையின் அடிப்படை தகவல் சேகரிப்பு இது வரை காவல்துறை ஏன் செய்யவில்லை ? 

தவ்ஃபீக் சுல்தனா வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையிடம் 
இருந்து மாநில குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு
CBCID கூட இதுவரை எந்த புலன் விசாரனையும் ஆரம்பம் செய்யவில்லை ஏன் ? 
இப்படி பல கேள்விகள் நமக்கு வேதனையாக நம் நெஞ்சில் பாய்ந்தாலும்
காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் 
காட்டுவது ஏன் ?
தவ்ஃபீக் சுல்தனா தந்தை அக்பர் பாஷா நேற்று 05-11-13 
இந்திய தேசிய லீக் கட்சி தலைமைக்கு வந்து கண்ணீரோடு
தன் மகளின் கொடூர கொலைக்கு யார் காரண்ம் ? என் மகளின்
இழப்பால் என் மணைவி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் .
என் மகளுக்கு(தவ்ஃபீக் சுல்தனா) ஏற்பட்ட கொடுமை இனி இந்த 
சமுக மக்களுக்கு நடக்க கூடாது என்று சொல்லும் போது 
அவர் கண்களில் கண்ணீர் காயமாக தென்பட்டது .

ஏன் இருக்காது சகோதரர்களே ஒரு சிறு விபத்து நடந்து அதன் பின்
உறுகுளைந்து இருக்கும் அந்த சதை பிண்டத்தை பார்க்கும் போது
எப்படி வேதனையாக நமக்கு தோன்றுகின்றதோ !
பெற்ற பிள்ளையை (தவ்ஃபீக் சுல்தனா) கொடூர சதை பிண்டமாக
பார்க்கும் போது கல் மனமும் கலங்க தான் செய்யும் .
பெற்றவர்கள் கலங்குவது கட்டுப்படுத்த யாரால் முடியும் 
அல்லாஹ் தான் முற்றும் அறிந்தவன் ..

மின்னஞ்சல் மூலமாக
stjameerlbk@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக