Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 22 நவம்பர், 2013

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ் - ஓயாமல் போராடும் தமுமுக !

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ் - ஓயாமல் போராடும் தமுமுக !


450 ஆண்டுகாலம் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடித்து தள்ளப்பட்டது. அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் கயவர்கள் இந்தியாவின் வரலாற்று சின்னத்தை இடிக்கும் வரை அமைதிகாத்துவிட்டு இடித்த பின்பு 100 நாளில் அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டிதரப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். ஆனால் கொடுத்த வாக்குறுதி 21 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் இதுவரை காங்கிரஸ் அரசால் நிறைவேற்றி தரப்படவே இல்லை. 

தமுமுக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தில் தொடர்ந்து பலவகையான போராட்டங்களை நடத்திவருகிறது. சில வருடங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லி சென்று இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களோடு போராடியதோடு டெல்லிவாழ் முஸ்லிம்களையும் பாபர் மஸ்ஜிதுக்காக போராட தூண்டியது தமுமுக.

அதற்கு பின்பு பள்ளிவாசல் இடத்தை நீதி என்ற போர்வையில் கட்டபஞ்சாயத்து தீர்ப்பும் வழங்கி கூறுபோட்டார்கள். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமூக களத்தில் ஓயாத தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6 அன்று போராடிவருகிறது. இந்தவருடம் இறைவனின் நாட்டத்தால் தமிழகத்தின் தலைநகரங்களில் பெரும் மக்கள் திரள் ஆர்பாட்டத்தை நடத்த உள்ளது. சமுதாய சொந்தங்களே பாபர் மஸ்ஜித் இடத்தை மீட்கும் வரை நாம் ஓயக்கூடாது... இனி எவனும் எந்த பள்ளி மீதும் கை வைத்துவிடக்கூடாது... 

புயலாய் அனல் பறக்கும் மீட்பு கோஷங்களோடு சமுதாய கொடியான தமுமுக கொடிகளை கையில் ஏந்தி குடும்பத்தோடு மாவட்ட தலைநகரங்களுக்கு தமுமுக தலைமையில் செல்வோம்... 

ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்... உரிமைகளை வென்றெடுப்போம்....
நீதிக்காக வீதிக்கு வராத சமுதாயம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை....

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
லப்பைக்குடிக்காடு நகரம்
பெரம்பலூர் மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக