Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 26 நவம்பர், 2013

அநீதி இழைக்கப்படும் முஸலிம் சிறை வாசிகள்....

கிராமத்து பழமொழி...
சாமி வரம் கொடுத்தாலும்..!
பூசாரி வரம் கொடுக்க மாட்டான்..!!என்று

சட்டத்தின் முன் அணைவரும் சமம்..
இந்த தாரக மந்திரம் ஏட்டளவில் உள்ளது.


இன்று 18-11-2013 போலீஸ் பக்ரூதினை நேர் கானல் பார்க்க
வேலூர் சிறைக்கு மாநில இலைஞர் அணி செயளாலர் நாகை ஜாபர்
சாதிக்,,பெரம்பளூர் மாவட்ட செயளாலர் பழனி பாபா ஜமீர்,வேலூர் மாவட்ட செயளாலர் தளபதி.ஷரீஃப்,மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் மனு பார்க்க சென்றோம்..

ரத்த பந்தம் உள்ளவர்கள் தான் மனு பார்க்க முடியும் என சிறைநிர்வாகம் சொல்லிவிட்டது..

இப்படி ஒரு சட்டம் விசாரணை சிறைவாசிகளுக்கு(கொலை குற்றவாளி ஆக இருந்தாளும்) இந்திய அரசியல் சட்டத்தில்(IPC,302,307) இல்லை என்பது குறிபிடத்தக்கது.

தி.மு.க.வை சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதிஷன் தடா சட்டத்தில் இருந்த போது தி.மு.க.தலைவர் கலைஞர் மனு பார்க்க சென்ற போது அ.தி.மு.க.அரசு மனு பார்க்க முடியாது எனவும் ரத்த பந்தம் மட்டுமே மனு பார்க்க முடியும் என கூறிவிட்டது அரசு..தி.மு.க.உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த தடையை உடைத்தது..

மறுபடியும் ஈழப்பிரச்சினையில் சிறையில் இருந்தவர்களை மனு பார்க்க இதே ரத்த பந்தம் உறவு தேவை என தி.மு.க.அட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஐய்ய,பழ.நெடுமாறன் உயர் நீதிமன்ற மனு செய்து தடையை உடைத்தார்...

தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் கொண்டு வந்த மனு பார்க்க தடை சட்டம் தடா போன்ற தடுப்பு காவல் சட்டத்திற்க்கு தனே தவிர சதாரன (IPC,302,307)இந்திய அரசியல் சட்டத்திற்க்கு இல்லை என்பது குறிப்பிடதக்கது..

ஆனால் சதாரன கொலை குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் (தண்டனை குற்றவாளிகள்இல்லை?)தான் போலீஸ் பக்ரூதின்,பிலால் மாலிக்,பண்ணா இஸ்மாயில் இவர்களை மனு பார்க்க ரத்த பந்தம் இருந்தால் தான் மனு பார்க்க முடியும் என்றால்?

நிச்சயம்?
இந்திய அரசியல் சட்டம் (IPC,302,307)இஸ்லாமியர்களுக்கு என பாராளுமன்றத்தில் அல்லது தமிழக சட்டமன்றத்தில் தனியாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.?
இஸ்லாமிய சமுகமே இனியும் உறக்கம் வேண்டாம்.
விழித்தெழுவோம்!!வெற்றி வாகை சூடுவோம்!!!
இன்ஷாஅல்லாஹ்
பகிருங்கள் பலருக்கு!
பரப்புங்கள் சமுக மக்கள் பார்வைக்கு!!


அன்புடன்..
தடா ஜெ.அப்துல்ரஹிம்

மின்னஞ்சல் மூலமாக
Stjameer 

1 கருத்து:

  1. நமது நாட்டில் (உயர்ந்தவன் தாழ்ந்தவன் என) அனைத்து சமூகத்திற்கும் எந்த ஒருச் சட்டமும் ஒரே அளவு கோலை நீட்டதவரை, அந்தச்சட்டம் என் கால் செருப்புக்குச் சமம்....
    பழனி பாபா....

    பதிலளிநீக்கு